Mohammed Shami: மீண்டும் இந்திய அணிக்கு திரும்பும் முகமது ஷமி?

Mohammed Shami in Champions Trophy: இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இங்கிலாந்துக்கு எதிரான வெள்ளை பந்து தொடரிலும், அடுத்த மாதம் நடைபெற இருக்கும் சாம்பியன் டிராபியிலும் இடம் பெற உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.  2023ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பைக்குப் பிறகு குதிகால் அறுவை சிகிச்சை காரணமாக ஓய்வில் இருந்த முகமது ஷமி, மீண்டும் இந்திய அணிக்குத் திரும்ப உள்ளார்.  பிசிசிஐ மற்றும் தேசிய கிரிக்கெட் அகாடமி … Read more

இடைத்தேர்தல் அறிவிப்பு எதிரொலி: ஈரோடு கிழக்கு தொகுதியில் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி நிறுத்தி வைப்பு

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளதால், அந்த பகுதிகளில் உள்ள ரேசன் கடைகளில், பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. தேர்தல் ஆணையம் அனுமதி கொடுத்ததும்,  பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.  தமிழக அரசு பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில் ரேசன் அட்டைதாரர்களக்கு  ஒரு முழுக்க ரும்பு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் இலவச வேட்டி, சேலை ஆகியவை  இன்று முதல் வழங்கி வருகிறது. … Read more

திருமண வரவேற்பு உணவில் விஷம் கலந்துவிட்டு தப்பியோடிய மணமகளின் தாய்மாமா…அதிர்ச்சி சம்பவம்

மும்பை, மராட்டிய மாநிலம் கோலாப்பூர் மாவட்டத்தில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஏற்பாடு செய்யப்பட்ட உணவில் விஷம் கலந்துவிட்டு மணமகளின் தாய்மாமா மகேஷ் பாட்டீல் என்பவர் தப்பியோடியதாக உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உணவில் விஷம் கலந்து இருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேஷ் பாட்டீலை தேடி வருகின்றனர். மகேஷின் எதிர்ப்பை மீறி, சகோதரியின் மகள் காதல் திருமணம் செய்துகொண்டதால் இவ்வாறு … Read more

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்: எப்.சி. கோவா – ஐதராபாத் எப்.சி ஆட்டம் 'டிரா'

கோவா, 13 அணிகளுக்கு இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று ஒரு லீக் ஆட்டம் நடைபெற்றது. அதன்படி, கோவாவில் இரவு 7.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் எப்.சி. கோவா – ஐதராபாத் எப்.சி அணிகள் மோதின. இந்த ஆட்டத்தின் முதல் பாதி ஆட்டம் கோல் ஏதுமின்றி முடிந்தது. தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தின் தொடக்கத்திலேயே கோவா அணி ஒரு கோல் … Read more

ஏமனில் அமெரிக்கா அதிரடி வான்வழி தாக்குதல்

சனா, இஸ்ரேல், காசாமுனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழு இடையே ஓராண்டுக்குமேல் போர் நீடித்து வருகிறது. இந்த போரில் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேவேளை, ஹமாஸ் ஆயுதக்குழு வசம் உள்ள 100க்கும் மேற்பட்ட பணய கைதிகளை மீட்க இஸ்ரேல் முயற்சித்து வருகிறது. பணய கைதிகளை மீட்கவும், போரை நிறுத்தவும் இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதனிடையே, இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களும், லெபனானில் செயல்பட்டு … Read more

2025 டாடா டியாகோ காரின் டீசர் வெளியானது.! – ஆட்டோ எக்ஸ்போ 2025

டாடா மோட்டார்சின் 2025 ஆம் ஆண்டிற்கான புதிய டியாகோ மற்றும் டியாகோ இவி என இரண்டும் (Tata Tiago) பல்வேறு மாற்றங்களுடன் கூடுதல் வசதிகளுடன் சிங்கிள் பேன் சன்ரூஃப் பல்வேறு கனெக்ட்டிவிட்டி கொண்டிருப்பதுடன் மேம்பட்ட பாதுகாப்பான வசதிகளை பெற்றுள்ளது. டியாகோ விற்பனைக்கு வரும்பொழுது இந்தியாவின் குறைந்த விலையில் சன்ரூஃப் பெறும் மாடலாக டியாகோ விளங்க உள்ளது. புதிய மாடலில் எஞ்சின் ஆப்ஷனில் எந்த மாற்றமும் இருக்காது, தொடர்ந்து டியாகோ காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் மாடல் 6000 … Read more

Two Tier Test System : 'ஐ.சி.சி முன் வைக்கும் புதிய முறை' – வலுக்கும் ஆதரவும் எதிர்ப்பும்!

டெஸ்ட் கிரிக்கெட்டை இன்னும் சுவாரஸ்யப்படுத்தும் வகையிலும் வருவாயைப் பெருக்கும் வகையிலும் ‘Two Tier Test System’ என்ற முறையை ஐ.சி.சி அமல்படுத்தும் யோசனையில் இருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) டெஸ்ட்டை பிரபலப்படுத்தும் வகையில்தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்ற ஒன்றை ஐ.சி.சி அறிமுகப்படுத்தியது. இரண்டு ஆண்டுகளில் ஒரு அணி ஆடும் தொடர்களின் அடிப்படையில் அவர்களுக்கு புள்ளிகள் வழங்கப்படும். சுழற்சியின் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் ஆடும். இந்த முறையில் … Read more

காங்கிரஸை முதன்மை கட்சியாக மாற்றுவதே இலக்கு: நிர்வாகிகளுக்கு செல்வப்பெருந்தகை அறிவுறுத்தல்

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் சத்தியமூர்த்தி பவனில் மாநில ஐடி விங் மற்றும் வார் ரூம்திறப்பு விழா மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சூரஜ் எம்.என்.ஹெக்டே மற்றும் சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் எஸ்.ராஜேஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் அஜோய்குமார் பங்கேற்று திறந்துவைத்தார். இந்நிகழ்ச்சியில், மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை பேசியதாவது: தமிழ்நாடு காங்கிரஸ் வலிமை பெற கிராம கமிட்டிகள் வலிமையாக இருக்க வேண்டும். நிர்வாகிகள் … Read more

திருப்பதியில் நெரிசல் ஏற்பட்ட இடத்தில் வைகுண்ட ஏகாதசி டோக்கன் விநியோகம் தொடக்கம்

திருப்பதி: திருப்பதியில் கூட்ட நெரிசலால் உயிரிழப்பு ஏற்பட்ட இடத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் வழியாக ஏழுமலையானை தரிசிப்பதற்கான இலவச தரிசன டோக்கன் விநியோகிக்கும் பணி தொடங்கியுள்ளது. நேற்று இரவு கூட்ட நெரிசல் ஏற்பட்ட விஷ்ணு நிவாசம் பகுதியில் பக்தர்களுக்கு டிக்கெட் விநியோகிக்கப்பட்டது. வரிசையில் ஒருவர் பின் ஒருவராக பக்தர்கள் வருவதை அதிகாரிகள் உறுதி செய்தனர். மேலும், பக்தர்களின் வருகையை ஒழுங்குபடுத்தவும், கூட்ட நெரிசலைத் தடுக்கவும் முறையாக பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர். சொர்க்கவாசல்: திருமலை … Read more

திருப்பதி கோவில் கூட்ட நெரிசல்: உயிர் போராட்டம், சிதறியடித்து ஓடிய பக்தர்கள்…. பீதியை கிளப்பும் வீடியோ

Tirupati Temple Stampede Latest News: திருப்பதியின் நடந்த இந்த சம்பவம் நாடு முழுதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கூட்ட நெரிசலின் புகைப்படங்களும், கடுமையாக காயமடைந்தவர்களின் உயிரை காப்பாற்ற அங்கிருந்த பக்தர்கள், கோவில் நிர்வாகத்தினர் மற்றும் காவல் துறையினர் எடுத்த முயற்சிகளின் சில வீடியோக்களும் இணையத்தில் பரவி வருகின்றன.