Month: January 2025
சமூக வலைதளத்தில் பதிவுகளை போட்டு மக்களையும் எம்எல்ஏக்களையும் அவமானப்படுத்துவதா? – ஆளுநருக்கு அப்பாவு கண்டனம்
ஆளுநர் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவுகளைப் போட்டு தமிழக மக்களையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பேரவை உறுப்பினர்களையும் அவமானப்படுத்தும் வகையில் நடந்து கொண்டதை பேரவை வன்மையாகக் கண்டிப்பதாக பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று பேரவைத் தலைவர் மு.அப்பாவு வெளியிட்ட அறிவிப்பில் கூறியதாவது: கடந்த 6-ம் தேதி சட்டப்பேரவைக்கு உரை நிகழ்த்துவதற்காக ஆளுநர் வந்து அதை வாசிக்காமல் சென்றார். பின்னர் அதுதொடர்பாக தனது ‘எக்ஸ்’ வலைதள பக்கத்தில் ஒரு கருத்தை வெளியிட்டார். சற்று நேரத்தில் … Read more
ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து முதல் ஜேபிசி கூட்டத்தில் ஆலோசனை: எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு
புதுடெல்லி: நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு வகை செய்யும் மசோதா கடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின்போது அறிமுகம் செய்யப்பட்டது. இதையடுத்து, அந்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக 12 மாநிலங்களவை உறுப்பினர்கள், 27 மக்களவை உறுப்பினர்கள் அடங்கிய கூட்டுக்குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் தலைவராக பாஜக எம்பி பி.வி. சவுத்ரி உள்ளார். இந்த நிலையில், ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பான நாடாளுமன்ற … Read more
திருப்பாவை – பாடல் 25 விளக்கம்
திருப்பாவை – பாடல் 25 விளக்கம் மார்கழி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் ஆண்டாள் பாடிய முப்பது பாடல்களே ‘திருப்பாவை’ என்று அழைக்கப்படுகிறது. இந்த பாடல்கள் ஆண்டாள் பாசுரம் என்றும் வழங்கப்படும். இந்த திருப்பாவை பாடல்கள் அனைவராலும் மார்கழி மாதத்தில் தினமும் பாடப்படும் முக்கிய பாடல்களாகும். அதிலும் திருமணம் ஆகாத பெண்கள் மார்கழியில் திருப்பாவை பாடுவது என்பது மிகவும் விசேஷம். அது அவர்களுக்கு நல்ல கணவனை பெற்றுத் தரும். அந்தவகையில், மார்கழி மாதத்தின் 25 … Read more
அண்ணா பல்கலை. வழக்கில் கைது செய்யப்பட்டவர் திமுக உறுப்பினர் அல்ல; ஆதரவாளர் மட்டுமே – முதல்வர் ஸ்டாலின்
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் வேறு குற்றவாளிகள் இருப்பது தெரியவந்தால், அது யாராக இருந்தாலும் தயவு தாட்சண்யம் இன்றி காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் நேற்று கொண்டு வரப்பட்ட ஒத்திவைப்பு மற்றும் கவன ஈர்ப்பு தீர்மானங்களுக்கு பதிலளித்து அவர் பேசியதாவது: குற்றம் நடந்த பிறகு, குற்றவாளியை கைது செய்யாவிட்டாலோ, காப்பாற்ற முடிவு செய்திருந்தாலோ அரசை நீங்கள் குறை சொல்லலாம். குற்றவாளியை கைது செய்து, … Read more
தமிழகத்தை சேர்ந்தவர் உட்பட கர்நாடகாவில் 6 நக்சலைட் சரண்
பெங்களூரு: கர்நாடகாவில் கடந்த மாதம் நக்சலைட் அமைப்பை சேர்ந்த முக்கிய தலைவர் விக்ரம் கவுடா போலீஸாரால் என்கவுன்டர் செய்யப்பட்டார். இதையடுத்து நக்சல் ஒழிப்புபடை அதிகாரிகள் அமைதிக்கான மக்கள் மன்றத்தின் உறுப்பினர் லலிதா நாயக் மூலம் தலைமறைவாக உள்ள நக்ச லைட்டு அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் 6 பேர் சரணடைய விருப்பம் தெரிவித்தனர். அதன்படி 6 பேரும் நேற்று மாலை முதல்வர் சித்தராமையா முன்னிலையில் அவரது அலுவலக இல்லமான கிருஷ்ணாவில் சரண் அடைந்தனர். அப்போது அவர்களுக்கு அரசமைப்பு … Read more
எச் எம் பி வி பாதிப்புக்கு பிரத்தியாக சிகிச்சை இல்லை : அமைச்சர்
சென்னை தமிழக அமைச்சர் மா சுப்பிரமணியன் எச் எம் பி வி பாதிப்புக்கு பிரத்தியாக சிகிச்சை இல்லை எனத் தெரிவித்துள்ளார். தற்போது நடந்து வரும் இந்த ஆண்டின் முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் 3 ஆவது நாளான இன்று அமைச்சர் மா.சுப்பிரமணியன், ”சீனாவில் பரவிவரும் எச்.எம்.பி.வி. வைரஸ் 50 ஆண்டுகளுக்கு முன்பு கண்டறியப்பட்டது. இந்த வைரசால் தமிழகத்தில் பாதிக்கப்பட்ட இருவர் நலமுடன் உள்ளனர். எச்.எம்.பி.வி. தொற்று குறித்து அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை. காய்ச்சல், சளி பாதிப்புள்ளோர் … Read more
ஹெச்எம்பிவி தொற்றுக்கு பிரத்யேக சிகிச்சை இல்லை: 3 – 6 நாளில் தானாக சரியாகிவிடும் என சுகாதார அமைச்சர் விளக்கம்
சென்னை: ஹெச்எம்பிவி தொற்றுக்கு பிரத்யேக சிகிச்சையோ, மருந்தோ இல்லை. 3 முதல் 6 நாட்களில் தானாகவே சரியாகிவிடும் என்று சட்டப்பேரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று ஹெச்எம்பி வைரஸ் தொற்று குறித்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் விவாதம் நடைபெற்றது. இதை தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்து பேசியதாவது: ஹெச்எம்பி வைரஸ் தொற்று 50 ஆண்டுகளுக்கு முன்பு கண்டறியப்பட்டது. 2001-ம் ஆண்டிலும் இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. குளிர்காலம், இளவேனில் காலங்களில் … Read more
இஸ்ரோ தலைவராக நியமிக்கப்பட்ட வி.நாராயணன் யார்?
புதுடெல்லி: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) புதிய தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த வி. நாராயணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இஸ்ரோவின் தலைவராக தற்போது சோம்நாத் உள்ளார். இவரது பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. இந்நிலையில், இஸ்ரோவின் புதிய தலைவராக வி. நாராயணனை மத்திய அரசின் நியமனக்குழு நியமனம் செய்துள்ளது. இதையடுத்து, வி.நாராயணன் பொங்கல் பண்டிகை தினமான ஜன. 14-ம் தேதி பொறுப்பேற்கிறார். அவர், கன்னியாகுமரி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர் ஆவார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள திரவ … Read more
கவுதம் அதானி மீது வழக்கு பதிவு செய்ததால் பைடன் அரசுக்கு குடியரசு கட்சி கண்டனம்
கவுதம் அதானி மீது வழக்கு பதிவு செய்தது இந்தியா, அமெரிக்கா இடையிலான உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் என அதிபர் ஜோ பைடன் அரசுக்கு குடியரசு கட்சி எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார். இந்திய தொழிலதிபர் கவுதம் அதானி மற்றும் அவரது நிறுவன உயர் அதிகாரிகள் மீது அமெரிக்க நீதித் துறை கடந்த ஆண்டு நவம்பர் 20-ம் தேதி வழக்கு பதிவு செய்தது. அதில், இந்தியாவில் சோலார் மின்சக்தி திட்ட ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம் வழங்கியதாகவும், … Read more