பொங்கல் பண்டிகை: மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க 5347 மாடு பிடி வீரர்கள் முன்பதிவு….

மதுரை: பொங்கல் பண்டிகையையொட்டி, மதுரையில் நடைபெறும் உலகப்புகழ்பெற்ற அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு  ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க 5347 மாடு பிடி வீரர்கள் முன்பதிவு செய்துள்ளனர். அதுபோல, இந்த போட்டிகளில் தங்களது காளைகளை இறக்க,   12632 காளைகளையும் அதன் உரிமையாளர்கள் பதிவு செய்துள்ளனர். நடப்பாண்டு பொங்கல் பண்டிகையையொட்டி, ஜ்ல்லிக்கட்டு போட்டி ஏற்கனவே புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடங்கி உள்ள உலக புகழ்பெற்ற போட்டிகள் நடைபெறும் மதுரை மாவட்டத்தில் நடைபெறும் போட்டிகள் குறித்த தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, ஜன. 14ல் … Read more

பெண்கள் பணிபுரிவதற்கு ஏற்ற நகரங்கள்: சென்னையை பின்னுக்கு தள்ளி பெங்களூரு முதலிடம்

பெண்கள் பணிபுரிவதற்கு ஏற்ற நகரங்கள் பட்டியலில் சென்னையை பின்னுக்கு தள்ளி பெங்களூரு முதலிடம் பிடித்துள்ளது. இந்தியாவின் முன்னணி பணி கலாச்சார ஆலோசனை நிறுவனமான அவதார் குழுமம், இந்தியாவில் பெண்கள் பணிபுரிவதற்கு ஏற்ற பாதுகாப்பான நகரங்கள் பட்டியலை 3-வது ஆண்டாக வெளியிட்டுள்ளது. இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (சிஎம்ஐஇ), உலக வங்கி, குற்ற பதிவுகள் மற்றும் அவ்வப்போது நடைபெறும் தொழிலாளர் கணக்கெடுப்பு உள்ளிட்ட பல்வேறு தரவு ஆதாரங்களை ஒருங்கிணைத்து இந்த பட்டியல் தொகுக்கப்பட்டுள்ளது. இத்துடன் அவதார் சார்பில் நாடு … Read more

டெல்லி சட்டப்பேரவை தேர்தல்: ஆம் ஆத்மிக்கு அகிலேஷ், மம்தா, உத்தவ் ஆதரவால் காங்கிரஸுக்கு சிக்கல்

புதுடெல்லி: பிப்ரவரி 5-ம் தேதி டெல்லி சட்டப்பேரவையின் 70 தொகுதிகளுக் கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை 8-ம் தேதி நடக்கிறது. தேர்தலில், ஆளும் ஆம் ஆத்மி, பாஜக கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன. ஆம் ஆத்மி இடம்பெற்றுள்ள இண்டியா கூட்டணியின் முக்கிய கட்சியான காங்கிரஸ் தனித்து போட்டியிடுகிறது. இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியில் உள்ள சமாஜ்வாதி, திரிணமூல் காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் அணி) ஆகிய 3 கட்சிகள் ஆம் ஆத்மிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் … Read more

பொங்கல் பரிசு தொகுப்புடன் 1000 ரூபாய்? நிதித்துறையுடன் முதல்வர் முக்கிய ஆலோசனை!

Tamil Nadu Latest News: பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கம் வழங்குவது சார்ந்து நிதித்துறை செயலர் உதயசந்திரன் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை.

தமிழக ஆளுநரின் செயலை சட்டசபை வன்மையாக கண்டிக்கிறது : சபாநாயகர்

சென்னை தமிழக ஆளுநரின் செயலை சட்டசபை வன்மையகா கண்டிப்பதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். ஆளுநர் ஆர் என் ரவி சட்டசபையில் இருந்து வெளியேறியது குறித்து சபாநாயகர் அப்பாவு,  ”சட்டசபையில் இருந்து ஆளுநர் வெளியேற அதிமுகவினரே காரணம். ஆளுநருக்கு எதிராக, அதிமுகவினர் பதாகைகளுடன் வந்தனர். எழுதி கொடுப்பதை வாசிப்பது மட்டும் தான் ஆளுநரின் வேலை, கோரிக்கை எதுவும் வைக்க முடியாது. ஆளுநர் ஆர்.என்.ரவி எக்ஸ் தளத்தில் பதிவிட்டது மக்கள், பேரவை உறுப்பினர்களை அவமானப்படுத்தும் செயல். ஆளுநரின் இந்த செயலை … Read more

Tirupati stampede : திருப்பதியில் ஒரே நேரத்தில் முண்டியடித்த பக்தர்கள் – மூச்சுத் திணறி 6 பேர் பலி

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜன.10-ம் தேதி `சொர்க்கவாசல்’ திறக்கப்பட்டு, 19-ம் தேதி வரை… அதாவது, தொடர்ந்து 10 நாள்களுக்குப் பக்தர்கள் அனுமதிக்கப்படவிருக்கின்றனர். இந்த 10 நாள்களும் `வைகுண்ட துவாரம்’ எனப்படும் சொர்க்கவாசல் திறந்தே இருக்கும். இந்த நிலையில், “ஜனவரி 10, 11, 12-ம் தேதிகளுக்கான இலவச தரிசன டிக்கெட் ஜனவரி 9-ம் தேதியான வியாழனன்று அதிகாலை 5 மணிக்கு வழங்கப்படும்’’ என்று தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்காக 8 இடங்களில் 91 கவுன்ட்டர்கள் … Read more

அண்ணா பல்கலை. விவகாரத்தில் பொள்ளாச்சி சம்பவத்தை மேற்கோள்காட்டி முதல்வர் நியாயப்படுத்துகிறார்: உதயகுமார்

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு ஏற்பட்ட பாலியல் வன்கொடுமை விவகாரத்தை, பொள்ளாட்சி சம்பவத்தை மேற்கோள்காட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் நியாயப்படுத்துவதாக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தபின், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: குழந்தைகள் மற்றும் பெண்கள் மீது ஒரு குற்றம் நடந்தது என்றால், அதுகுறித்து வந்த புகார்களின் அடிப்படையில் பதிவு செய்யப்படுகின்ற முதல் தகவலறிக்கையை வெளியிடக் கூடாது என்பது விதி. அதை உச்ச நீதிமன்றமும் உறுதிபடுத்தியிருக்கிறது. ஆனால் இவ்வழக்கில் முதல் தகவலறிக்கை வெளியாகி … Read more

திருமலையில் ஆழ்வார் திருமஞ்சனம்; ஏகாதசி ஏற்பாடுகள் நிறைவு: திருப்பதி தேவஸ்தானம் தகவல்

வைகுண்ட ஏகாதசிக்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமள ராவ் தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம், திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் நேற்று தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமள ராவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வைகுண்ட ஏகாதசியையொட்டி வரும் 10-ம் தேதி முதல், 19-ம் தேதி வரை திருமலையில் பக்தர்கள் அனைவருக்கும் சொர்க்கவாசல் தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆதலால் இந்த 10 நாட்களில் மட்டும் 7 லட்சம் பக்தர்கள் சொர்க்க வாசல் தரிசனம் … Read more

'பீப் பிரியாணியை விற்க கூடாது' பாஜக நிர்வாகி மிரட்டல்… கண்ணீர்விட்ட பெண் – கோவையில் பரபரப்பு

Beef Issue In Coimbatore: பீப் பிரியாணி, பீப் சில்லி ஆகிய மாட்டிறைச்சி உணவுகளை விற்கக் கூடாது என கோவை பாஜக பிரமுகர் ஒருவர் மிரட்டிய சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.