அரசின் அனுமதி பெற்ற பிறகு போராட்டம் நடத்த வேண்டும் : முதல்வர் மு க ஸ்டாலின்

சென்னை எந்த கட்சியினரும் தமிழக அரசின் அனுமதி பெற்ற பிறகே போராட்டம் நடத்த வேண்டும் என முதல்வர் மு க ஸ்டாலின் கூறி உள்ளார். இன்று இந்த ஆண்டின் முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் 3 ஆவது நாள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் ஆளுநர்ர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது. இடையில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த … Read more

Seeman : `உடல் இச்சை ஏற்பட்டால்…' – பெரியாரை மேற்கோள்காட்டி சீமான் உண்டாக்கிய சர்ச்சை

கடலூரில் நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டத்தை முடித்துவிட்டு பத்திரிகையாளர்களை அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்திருந்தார். அப்போது, பெரியாரை மேற்கோள்காட்டி அவர் பேசிய சில விஷயங்கள் சர்ச்சையாகியிருக்கிறது. சீமான் அண்ணா பல்கலைக்கழக விவகாரம், டங்கஸ்டன் சுரங்க பிரச்சனை, பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு எனப் பலவற்றை பற்றியும் பேசிய சீமானிடம், ‘விஜய் உண்மையாக நேசித்த ஒரே ஆள் நீங்கள்தான். இப்போது ஏன் முரண்பட்டிருக்கிறீர்கள்?’ என ஒரு கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு சீமான், ‘அண்ணன் தம்பி என்கிற … Read more

‘தமிழரசனை மட்டும் குறிவைத்து போலீஸ் இழுத்துச் சென்றது ஏன்?’ – சு.வெங்கடேசன் எம்.பி கேள்வி

மதுரை: டங்ஸ்டன் போராட்டத்தில் போலீஸாரின் நடவடிக்கை கண்டனத்துக்குரியது என்று மதுரை எம்பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ‘எக்ஸ்’ தள பதிவில் கூறியது: “டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை எதிர்த்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டதை முழுமனதாக மேலூர் மக்கள் வரவேற்றுள்ளனர். நேற்று நடந்த பேரணியுமே இத்திட்டத்தை முழுமையாக ஒன்றிய அரசு ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையோடுதான் நடந்தது. இப்படியான நிலையில் நேற்று நடந்த பேரணியில் டிஒய்எஃப்ஐ-யின் மதுரை புறநகர் மாவட்டச் … Read more

திருப்பதியில் கடும் கூட்ட நெரிசல்: சேலம் பெண் உட்பட 6 பேர் உயிரிழப்பு

திருப்பதி: திருப்பதியில் இலவச தரிசன டோக்கன் வாங்கும்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி சேலத்தைச் சேர்ந்த பெண் உட்பட ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வைகுண்ட ஏகாதசியையொட்டி வரும் 10-ம் தேதி முதல், 19-ம் தேதி வரை திருமலையில் பக்தர்கள் அனைவருக்கும் சொர்க்கவாசல் தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக திருப்பதியில் 8 இடங்களில் 91 கவுண்ட்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், திருப்பதியின் விஷ்ணு நிவாஸம் பகுதியில் நடைபெற்ற இலவச டோக்கன் விநியோகத்தின் … Read more

திருப்பதியில் இலவச டிக்கெட்டால் கூட்ட நெரிசல் – தமிழக பெண் உள்பட 4 பேர் உயிரிழப்பு

Tirupati Stampede Latest News Updates: திருப்பதியில் சொர்க்கவாசல் நிகழ்ச்சிக்கு இலவச டிக்கெட் வாங்குவதற்கு, அதிகளவு கூடிய கூட்டத்தில் சிக்கி மொத்தம் 4 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதில் சேலத்தை சேர்ந்த மல்லிகா என்பவரும் உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகககவசத்தை கட்டாயமாக்கிய திருப்பதி தேவஸ்தானம்

திருப்பதி திருப்பதியில் முகக் கவசம் அணிவதை தேவஸ்தானம் கட்டாயமாக்கி உள்ளது. தற்போது சீனாவில் பரவி வரும் எச்.எம்.பி.வி. தொற்று இந்தியாவிலும் கண்டறியப்பட்டுகர்நாடகாவில் 2 குழந்தைகளும், குஜராத்தில் ஒரு குழந்தையும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. தமிழகத்தில் சென்னை மற்றும் சேலத்தை சேர்ந்த 2 குழந்தைகள் எச்.எம்.பி.வி. தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். நேற்று மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் மேலும் 2 குழந்தைகளுக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதால், இந்தியாவில் எச்.எம்.பி.வி. தொற்று பாதிப்பு எண்ணிக்கை … Read more

புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 250ஆர் விற்பனைக்கு வருகையா..!

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் சக்திவாய்ந்த 250சிசி எக்ஸ்ட்ரீம் 250R ஸ்போரட்டிவ் பைக்கின் தொலைக்காட்சி விளம்பர படப்படிப்பில் ஈடுபட்ட படங்கள் முதன்முறையாக இணையத்தில் கசிந்துள்ளதால் ஜனவரி 17ல் துவங்க உள்ள பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போவில் விற்பனைக்கு வெளியிடப்படுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பொதுவாக, ஹீரோ தனது கான்செப்ட் நிலை மாடல்களை விற்பனைக்கு கொண்டு வர மிகவும் தாமதப்படுத்தி வந்த நிலையில் EICMA 2024ல் காட்சிப்படுத்திய எக்ஸ்ட்ரீம் 250ஆர் அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு வருவது உறுதியாகியுள்ளது. குறிப்பாக ஹீரோவின் … Read more

திருநெல்வேலி: `பொங்கலோ பொங்கல்' – தயாராகும் மண்பானைகள், மண்அடுப்புகள் |Photo Album

திருநெல்வேலி: பொங்கல் பண்டிகைக்கு தயாராகி வரும் பொங்கல் மண்பானைகள்.! Source link

“அடுத்தடுத்த ஆண்டுகளில் பிரம்மாண்டமாக சென்னை உணவுத் திருவிழா” – உதயநிதி உறுதி

சென்னை: அடுத்தடுத்த ஆண்டுகளில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உணவுத் திருவிழா மிகவும் பிரம்மாண்டமாக நடத்தப்படும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உணவுத் திருவிழா, சென்னை மெரினா கடற்கரையில் கடந்த டிச.20 முதல் டிச.24-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த உணவுத் திருவிழா வெற்றி பெற்றதையொட்டி மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு … Read more

எமர்ஜென்சி படத்தைக் காண பிரியங்கா காந்திக்கு கங்கனா ரனாவத் அழைப்பு

புதுடெல்லி: இந்தமாதம் திரைக்கு வரவிருக்கும்,‘எமர்ஜென்சி’ திரைப்படத்தைக் காண காங்கிரஸ் எம்.பி., பிரியங்கா காந்திக்கு அழைப்பு விடுத்ததாக நடிகையும் எம்பியுமான கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். இந்தத் திரைப்படத்தில் கங்கனா முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வேடத்தில் நடித்துள்ளார். நாடாளுமன்றத்தில் பிரியங்கா காந்தியை சந்தித்து தான் உரையாடிய விவரத்தை பகிர்ந்துள்ள கங்கனா ரனாவத், திரைப்படத்தில் இந்திரா காந்தியை சித்தரிக்க தான் எடுத்துக்கொண்ட சிரத்தையையும் எடுத்துரைத்துள்ளார். இதுகுறித்து கங்கனா கூறுகையில், “உண்மையில் நாடாளுமன்றத்தில் நான் பிரியங்கா காந்தியை சந்தித்தேன். முதலில் நான் … Read more