அமேசானின் குடியரசு தின சலுகை விற்பனை 2025…. எலக்ட்ரானிக்ஸ் மீது 75% வரை தள்ளுபடி

குடியரசு தினத்திற்கு சில வாரங்களுக்கு முன்னதாக, இந்தியாவின் மிகவும் பிரபலமான இ-காமர்ஸ் தளமான அமேசான் சலுகை விற்பனையை அறிவித்துள்ளது. அமேசானின் குடியரசு தின சலுகை விற்பனை 2025 (Amazon Great Republic Day sale 2025) ஜனவரி 13 அன்று தொடங்கும். இதில், ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள், லேப்டாப்கள், ஸ்மார்ட்வாட்ச்கள் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மீது 75% வரை தள்ளுபடி கிடைக்கும். மடிக்கணினிகள், ஸ்மார்ட்வாட்ச்கள், ஹெட்ஃபோன்கள் மற்றும் கேமிங் லேப்டாப் முதல் புளூடூத் இயர்பட்கள் தவிர, எலக்ட்ரானிக் ஆக்சஸெரீஸ்களை … Read more

மக்களவை சபாநாயகரின் வெளிநாடு சுற்றுப்பயணம்

டெல்லி சபாநாயகர் ஓம் பிர்லா வெளிநாடுகளுக்கு சுற்றுலா பயண மக்களவை சபாநாயகர் ஓம் பி1ர்லா ம் செல்ல உள்ளார். யுனைடெட் கிங்டம், ஸ்காட்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு, 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.  யுனைடெட் கிங்டமின் நாடாளுமன்ற சபாநாயகர் லிண்ட்சே ஹாயில் அழைப்பின்பேரில் 7-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை அந்நாட்டில் பிர்லா சுற்றுப்பயணம் செய்வ்ழ்தற்காக அவர் புதுடெல்லியில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார். ஓம் பிர்லா தனது பயணத்தில், லிண்ட்சே மற்றும் பிரபுக்கள் சபையின் தலைவர் மெக்பால் ஆகியோரை லண்டன் … Read more

ராஜபாளையம்: 'என் தற்கொலைக்கு காரணம் போலீஸ்'- கடிதம் எழுதி வைத்துவிட்டு உயிரை மாய்த்த மாற்றுத்திறனாளி

மது விற்கச் சொல்லி தொந்தரவு அளித்ததாலும், தகாத வார்த்தைகளால் போலீஸ் திட்டியதாலும் மனம் உடைந்து தற்கொலை செய்வதாக மாற்றுத்திறனாளி ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம், ராஜபாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றி விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், “விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள நக்கனேரியைச் சேர்ந்தவர் செல்வக்குமார் (வயது 40). விபத்தில் கைகளை இழந்ததால் 60 சதவீத மாற்றுத்திறனாளியானார். கடிதம்2 டாஸ்மாக் கடையில் மது பாட்டில்களை வாங்கிவந்து சட்டவிரோதமாக மது … Read more

“தமிழக அரசு ஒருபோதும் டங்ஸ்டன் திட்டத்துக்கு அனுமதி வழங்காது” – பேரவையில் அமைச்சர் திட்டவட்டம்

சென்னை: “மாநிலங்களவையில் அரிய வகை கனிம வளங்கள் தொடர்பான சட்டத்தை அதிமுக ஆதரித்ததன் விளைவுதான், டங்ஸ்டன் திட்டம் தமிழகத்துக்கு வந்துள்ளது. ஆனால், திமுக அந்தச் சட்டத்தை எதிர்த்தது. ஸ்டாலின் முதல்வராக இருக்கிற வரை இந்தத் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம். அதுவரை ஒரு பிடி மண்ணைக்கூட அங்கேயிருந்து எடுப்பதற்கு தமிழக அரசு நிச்சயமாக அனுமதிக்காது” என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். சட்டப்பேரவையில் டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பாக, நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் … Read more

“இந்தியாவை உலக சுற்றுலாத் தலமாக்க வேண்டும்’’ – வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஜெய்சங்கர் வேண்டுகோள்

புவனேஸ்வர்: இந்தியாவை உலக சுற்றுலாத் தலமாக்க வெளிநாடுவாழ் இளம் இந்தியர்கள் முன்வர வேண்டும் என்று வெளிநாடு வாழ் இந்தியர் மாநாட்டில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கேட்டுக்கொண்டுள்ளார். 18வது வெளிநாடுவாழ் இந்தியர் மாநாடு ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் இன்று தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை தொடங்கிவைத்துப் பேசிய ஜெய்சங்கர், “இந்தியாவை ஒரு சுற்றுலாவுக்கான மையமாக மாற்ற வேண்டும் என்னும் பிரதமர் மோடியின் விருப்பத்தை உங்கள் முன் வைக்க விரும்புகிறேன். வெளிநாடுவாழ் இந்தியர்கள், வெளிநாட்டில் இருந்து … Read more

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் காட்டுத் தீ – 30,000 மக்கள் வெளியேற்றம்; வீடுகள் நாசம்

லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸின் மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக பல கட்டிடங்கள், வீடுகள் எரிந்து நாசமாகின. மாநகரம் முழுவதும் புகை மூட்டமாக காணப்படுகிறது. கிட்டத்தட்ட 30,000 மக்கள் வெளியேற்றப்பட்டனர். இதனால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த காட்டுத் தீயின் காரணமாக, சான்டா மோனிகா மற்றும் மாலிபு இடையேயான பசிபிக் பாலிசேட்ஸ் பகுதியில் சுமார் 1,262 ஏக்கர் (510 ஹெக்டேர்) பரப்பு எரிந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக, வறண்ட காலநிலை நீட்சியினால் … Read more

ஏஐ தொழிநுட்பத்தில் சிறந்து விளங்க இந்தியா செய்ய வேண்டியது என்ன? – சத்யா நாதெள்ள விவரிப்பு

புதுடெல்லி: ஏஐ (AI) எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துக்கான அடித்தள மாதிரிகளை இந்தியா உருவாக்க வேண்டும் என்று மைக்ரோசாஃப்ட் தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான சத்யா நாதெள்ள தெரிவித்துள்ளார். மைக்ரோசாஃப்ட் இந்தியா செயற்கை நுண்ணறிவு சுற்றுப்பயணம் எனும் தனது இந்த சுற்றுப் பயணத்தின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் பேசிய சத்யா நாதெள்ள, “இந்திய மொழிகள் மற்றும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி இந்தியா தனது தொழில்களை மாற்றியமைப்பதில் சிறந்த பணிகளைச் செய்ய முடியும். இந்தியாவால் முன்னிலை பணிகளைச் செய்ய … Read more

2025 மகாகும்பமேளாவில் கலந்து கொள்ளும்… ஸ்டீவ் ஜாப்ஸின் மனைவி… லாரன் பவல் ஜாப்ஸ்

Maha Kumbh Mela 2025: கங்கா, யமுனா, சரஸ்வதி என மூன்று நதிகள் சங்கமிக்கும் இடமான பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் 2025 ஆம் ஆண்டு ஜனவரி 13ம் தேதி முதல் பிப்ரவரி 26ஆம் தேதி வரை 45 நாட்களாக மிக விமர்சையாக கொண்டாடப்படும்.  

முதல்வர் இல்லத்தில் நுழைய முயன்ற டெல்லி ஆம் ஆத்மி கட்சியினர் தடுத்து நிறுத்தம்

டெல்லி’ ஆம் ஆத்மி கட்சியினர் டெல்லி முதல்வர் இல்லத்துக்குள் நுழைய முயன்றபோது காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். சுமார் 150 நாட்கள் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் இருந்து இடைக்கால ஜாமீனில் விடுதலையான அரவிந்த் கெஜ்ரிவால், தனது முதல்வர்பதவியை ராஜினாமா செய்த்தால்,புதிய முதல்வராக அதிஷி தேர்ந்தெடுக்கப்பட்டார். கெஜ்ரிவால் தனக்கு அரசு ஒதுக்கிய பங்களா வீட்டை காலி செய்து புதிய வீட்டிற்கு குடியேறினார். கெஜ்ரிவால் அரசு பங்களாவில் தங்கியிருந்தபோது பங்களாவை சீரமைப்பதற்காக ஆடம்பரமான … Read more

மராட்டியத்தில் ரோடு ரோலர் அடியில் சிக்கி தொழிலாளி உடல் நசுங்கி பலி

தானே, மராட்டியத்தின் தானே மாவட்டத்தின் பிவாண்டி நகரில் ஒரு கட்டுமான தளத்தின் அருகே நிறுத்தப்பட்டிருந்த ரோடு ரோலர் முன்பு நேற்று மதிய உணவுக்கு பிறகு தொழிலாளி ஒருவர் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது, ரோடு ரோலர் டிரைவர் எந்த சோதனையும் செய்யாமல் வாகனத்தை இயக்கியதால், முன்னால் தூங்கிக்கொண்டிருந்த தொழிலாளி மீது ஏறியது. இதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த தொழிலாளியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் … Read more