ஆக்கி இந்தியா லீக்: வேதாந்தா கலிங்கா லான்சர்ஸ் அணி அபார வெற்றி

ரூர்கேலா, 6-வது ஆக்கி இந்தியா லீக் போட்டி ஒடிசாவின் ரூர்கேலாவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த 14-வது லீக் ஆட்டத்தில் வேதாந்தா கலிங்கா லான்சர்ஸ் – ஷராச்சி ரார் பெங்கால் டைகர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் வேதாந்தா கலிங்கா லான்சர்ஸ் அணி 6-0 என்ற கோல் கணக்கில் ஷராச்சி ரார் பெங்கால் டைகர்ஸ் அணியை பந்தாடி முதல் வெற்றியை சுவைத்தது. இன்றைய ஆட்டங்களில் கோனாசிகா- தமிழ்நாடு டிராகன்ஸ் (மாலை 6 மணி), உ.பி. ருத்ராஸ்- … Read more

லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே வேகமாக பரவும் காட்டுத் தீ: வீடுகள் கருகின

லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் அருகில் உள்ள பசிபிக் பாலிசேட்ஸ் பகுதியில் திடீரென காட்டுத் தீ ஏற்பட்டது. மேற்குப் பகுதியில், நேற்று காலை பரவத் தொடங்கிய தீ இரவு வரை கட்டுக்கடங்காமல் பற்றி எரிந்தது. மலையை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதிகளிலும் காட்டுத் தீ சூழ்ந்ததால் பல வீடுகள் கருகின. ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர். இதேபோல் லாஸ் ஏஞ்சல்ஸின் வடகிழக்கில் அல்டடேனா மலையடிவாரத்திலும் காட்டுத்தீ பரவியது. கடுமையான காற்று வீசுவதால் தீ வேகமாக பரவி வருகிறது. … Read more

அரசு தொடக்கப் பள்ளி டு கோரக்பூர் ஐஐடி இஸ்ரோ தலைவராகும் குமரி விஞ்ஞானி நாராயணன் கடந்துவந்த பாதை

இஸ்ரோ தலைவராக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள மேல காட்டுவிளை கிராமத்தை சேர்ந்த வி.நாராயணன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தற்போது இஸ்ரோ தலைவராக இருக்கும் சோம்நாத்துக்கு முன்பு தலைவராக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சிவன் பதவி வகித்து வந்தார். இந்நிலையில் ஐ.எஸ்.ஆர்.ஓ தலைவராக மீண்டும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. விஞ்ஞானி நாராயணனின் தந்தை வன்னிய பெருமாள், தாய் தங்கம்மாள். வன்னியபெருமாள் தேங்காய் வியாபாரம் செய்து வந்தார். ஏழைகுடும்பத்தைச் சேர்ந்த நாராயணன் கீழ காட்டுவிளை அரசு தொடக்கப் பள்ளியில் … Read more

“திமுக எழுதிக் கொடுத்ததை ஆளுநர் படிக்க வேண்டுமா?” – சீமான் கேள்வி

கடலூர்: “திமுக எழுதிக் கொடுத்ததை ஆளுநர் படிக்க வேண்டுமா? இவ்வளவு பொய் பேச வேண்டுமா என்று அவர் படிக்காமல் சென்றுவிட்டார்” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். வடலூரில் தனியார் திருமண மண்டபத்தில் நாம் தமிழர் கட்சியின் கடலூர் மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம் இன்று ( ஜன.8) தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “அண்ணா பல்கலை.யில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மாணவியின் … Read more

ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாக்கள் ஆய்வு: நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் முதல் கூட்டம் கூடியது

புதுடெல்லி: நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பான இரண்டு மசோதாக்களை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட நாடாளுமன்றக் குழுவின் முதல் கூட்டம் இன்று (புதன்கிழமை) கூடியது. பாஜக எம்பி-யும் முன்னாள் சட்ட அமைச்சருமான பிபி சவுத்ரி தலைமையிலான 39 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றக் கூட்டுக் குழுவில் காங்கிரஸைச் சேர்ந்த பிரியங்கா காந்தி வத்ரா, ஜேடி(யு) சார்பில் சஞ்சய் ஜா, சிவசேனா சார்பில் ஸ்ரீகாந்த் ஷிண்டே, ஆம் ஆத்மி சார்பில் சஞ்சய் சிங், திரிணமூல் காங்கிரஸ் சார்பில் … Read more

இனி கிங்ஃபிஷர் பீர் கிடைக்காது… மது பிரியர்கள் அதிர்ச்சி – ஏன் தெரியுமா?

Kingfisher Beer: தொடர் நஷ்டம் காரணமாக கிங்ஃபிஷர் பீர் இந்த மாநிலத்தில் விநியோகம் செய்யப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மதுபிரியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஆளுநர் பேசியபோது நேரடி ஒளிப்பரப்பு இல்லாதது ஏன்? – சபாநாயகர் விளக்கம்

Tamil Nadu Assembly News: ஆளுநர் வரும்போது அவர் பேசுவதை எடுத்து வெட்டி, ஒட்டி வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருப்பது தெரியவந்தது என்றும் அனுமதி வழங்கப்படாதவர்களை எப்படி பேரவைக்குள் அனுமதிப்பது என்றும் சபாநாயகர் பேசி உள்ளார்.

கிரிக்கெட்டில் இருந்து சிறிது காலம் ஓய்வு எடுக்கும் கேஎல் ராகுல்?

இந்திய டெஸ்ட் அணியில் முக்கியமான வீரராக கேஎல் ராகுல் இருந்து வருகிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியதால் எசஸ்வி ஜெய்ஷ்வாலுடன் இணைந்து ஓப்பனிங் இறங்கினார். அதற்கு முன்பு வரை ராகுல் மிடில் ஆர்டரில் விளையாடி வந்தார். முதல் டெஸ்டில் ஓபனராக விளையாடிய கேஎல் ராகுல் சிறப்பாக விளையாடி இருந்தார். அதன் காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா அணிக்கு திரும்பிய பின்பும் ஓப்பனிங் செய்தார். பார்டர் கவாஸ்கர் … Read more

ஒன்ஸ் பிளஸ் உடன் கை கோர்க்கும் ஜியோ… இந்தியாவின் முதல் 5.5ஜி சாதனம் அறிமுகம்

ரிலையன்னஸ் ஜியோவின் 5.5ஜி அதாவது 5ஜியின் மேம்பட்ட சேவையைத் தொடங்கியுள்ளது. நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோவின் நவீன 5G தொழில்நுட்பம் 1Gbps வேகத்தில் இணையத்தை வழங்கும் நிலையில். ஜியோவின் இந்த புதிய 5.5ஜி சேவை ஒன்பிளஸ் 13 சீரிஸ் அறிமுகத்தின் போது வெளியிடப்பட்டது. OnePlus அறிமுகம் செய்துள்ள புதிய போன் ஜியோவின் 5.5G அல்லது Jio 5GA சேவையை ஆதரிக்கும் முதல் ஸ்மார்ட்போன் ஆகும். இந்த போன் இந்தியாவில் ஜியோவின் நெட்வொர்க் தொழில்நுட்பத்துடன் இணைந்து … Read more

நேற்றைய திபெத் நில நடுக்கத்தில் 515 நில அதிர்வுகள் பதிவு

பீஜிங் நேற்று திபெத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தின் போது 515 நில அதிர்வுகள் பதிவாகி உள்ளன. நேற்று சீனாவின் ஒரு பகுதியாக உள்ள திபெத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதுடன் இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.  பல பகுதிகளில் கட்டிடங்கள் குலுங்கியதால் வீடுகளை விட்டு வெளியேறி மக்கள் தெருக்களில் தஞ்சம் புகுந்தனர். நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 126 பேர் உயிரிழந்துள்ளதாவும் 188 பேர் காயமடைந்துள்ளதாகவு, சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சக்தி … Read more