அசாம் சுரங்க விபத்து: ஒருவர் பலி; மீதமுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரம்

கவுகாத்தி, அசாமின் மலைப்பிரதேச மாவட்டங்களில் ஒன்றான திமா ஹசாவோவில் உள்ளடங்கிய பகுதியில் நிலக்கரி சுரங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த சுரங்கத்தில் கடந்த 6ம் தேதி மழையால் வெள்ள நீர் புகுந்தது. அப்போது சுரங்கத்தில் வேலை செய்து வந்த தொழிலாளர்களில் சிலர் தப்பி வெளியே வந்த நிலையில் 9 பேர் அதில் சிக்கிக்கொண்டனர். தப்பி வெளியே வந்தவர்கள் சுரங்க உரிமையாளர் மற்றும் உள்ளூர் போலீசாரிடம் சுரங்க விபத்து பற்றி கூறியுள்ளனர். இதனையடுத்து, தொழிலாளர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக … Read more

மலேசிய ஓபன் 2025 பேட்மிண்டன்: இந்தியாவின் லக்சயா சென் தோல்வி

கோலாலம்பூர், மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் மலேசிய ஓபன் 2025 பேட்மிண்டன் போட்டி தொடர் நடந்து வருகிறது. இதில், இந்தியாவை சேர்ந்த முன்னணி பேட்மிண்டன் வீரரான, பாரீஸ் ஒலிம்பிக்கில் அரையிறுதி வரை சென்றவரான லக்சயா சென் பங்கேற்றார். அவர் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் 32 பேர்களுக்கான சுற்று போட்டியில் சீன தைபேவின் சீ யூ-ஜென் என்பவரை எதிர்த்து விளையாடினார். இந்த போட்டியில், 14-21, 7-21 என்ற செட் கணக்கில் சென் தோல்வியுற்றார். எனினும், இந்தியாவின் மற்றொரு வீரரான எச்.எஸ். … Read more

பாகிஸ்தான்: 6 சகோதரிகளை திருமணம் செய்த 6 சகோதரர்கள்

பஞ்சாப், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் ஆச்சரியப்படும் வகையில் திருமணம் ஒன்று நடந்துள்ளது. இதன்படி, 6 சகோதரர்கள் மணமக்கள் வீட்டாரிடம் வரதட்சணை எதுவும் வாங்காமல் 6 சகோதரிகளை திருமணம் செய்துள்ளனர். இந்த திருமணம் மிக எளிமையாக நடந்து முடிந்துள்ளது. 100 விருந்தினர்கள் மட்டுமே திருமணத்தில் கலந்து கொண்டனர். இஸ்லாமிய போதனைகளின்படி, திருமணத்தில் எளிமையை கடைப்பிடிக்க மணமகன்கள் விரும்பியுள்ளனர். அவர்களில் மூத்த சகோதரர் கூறும்போது, நாங்கள் எடுத்துக்காட்டாக இருக்க விரும்பினோம். சில இடங்களில் திருமண செலவுகளுக்காக மக்கள் நிலங்களை விற்கின்றனர். … Read more

2025 பஜாஜ் பல்சர் RS 200 பைக்கின் எதிர்பார்ப்புகள் என்ன.?

பஜாஜ் ஆட்டோவின் பிரபலமான ஃபேரிங் ஸ்டைல் பல்சர் RS200 மிக நீண்ட காலத்துக்கு இடைவெளிக்குப் பிறகு புதுப்பிக்கப்பட்ட மாடலாக வெளியிடப்பட உள்ள நிலையில் சிறிய ஸ்டைல் மாற்றங்களை பெற்று கூடுதலாக டிஜிட்டல் கிளஸ்ட்டர் பெற்றுள்ளது. புதிய பல்சர் ஆர்எஸ் 200யின் விலை அனேகமாக ஜனவரி 9 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. எஞ்சின் பவர் மற்றும் டார்க் விபரங்களில் எந்த மாற்றமும் இருக்காது தொடர்ந்து, ஆர்எஸ் 200 பைக்கில் 24 bhp பவரை வழங்கும் 199.5cc என்ஜின் … Read more

பல்கலைக்கழகங்களில் கல்வி சுதந்திரத்திற்கு எவ்வித இடையூறுகளும் இல்லை

பல்கலைக்கழகங்களில் காணப்படும் கல்வி சுதந்திரத்திற்கு எவ்வித இடையூறுகளும் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுவதில்லை என பிரதமர், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

BB Tamil 8 : 'முத்து என் தம்பி, சாச்சனா பண்ணறது சரியில்ல' – காட்டமான ஜாக்குலின்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 94-வது நாளுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகி இருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி இப்போது இறுதிக் கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. கடந்த வாரம் TTF டாஸ்க் நடைபெற்றது. இறுதிப் போட்டிக்கான முதல் போட்டியாளராக ரயான் தேர்வாகி இருக்கிறார். இந்த சீசனின் கடைசி போட்டியாளராக வந்து, இப்போது முதல் பைனலிஸ்ட்டாக இவர் மாறியிருக்கிறார். BB Tamil 8 இதனிடையே சுனிதா, வர்ஷினி, அர்ணவ், ரவீந்தர், சிவகுமார், சாச்சனா, தர்ஷா குப்தா, ரியா என எட்டு பேர் பிக் … Read more

அண்ணா நகர் சிறுமி வழக்கில் நடவடிக்கை என்ன? – பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

சென்னை: “அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை, உச்ச நீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் அதிமுகவைச் சேர்ந்த 103-வது வட்டச் செயலாளர் சுதாகர் என்பவரையும், பெண் காவல் ஆய்வாளர் ராஜீ என்பவரையும் நேற்று (ஜன.7) கைது செய்து, அவர்கள் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்,” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் கூறியுள்ளார். தமிழக சட்டப் பேரவையில், அண்ணாநகரில் நடைபெற்ற பாலியல் சம்பவம் தொடர்பான வழக்கில் எடுக்கப்பட்ட கைது நடவடிக்கை … Read more

‘இலவசங்களை வழங்க பணம் உள்ளது; ஓய்வுபெற்ற நீதிபதிகளுக்கு வழங்க இல்லையா?’ – உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: “எந்த வேலையும் செய்யாத மக்களுக்கு இலவசங்களை வழங்குவதற்கு அரசுகளிடம் போதுமான பணம் உள்ளது, ஆனால் மாவட்ட நீதித்துறை நீதிபதிகளுக்கு சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்குவது என்றால் மட்டும் நிதி நெருக்கடி இருப்பதாகக் கூறுவதா?” என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதிகளுக்கு ஓய்வூதியம் வழங்குவது தொடர்பாக அகில இந்திய நீதிபதிகள் சங்கம் கடந்த 2015-ம் ஆண்டு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. நீதிபதிகள் பி.ஆர். கவாய், அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் … Read more

‘கனடா அமெரிக்காவின் ஒரு பகுதியாக மாற வாய்ப்பில்லை’ – ட்ரம்புக்கு ட்ரூடோ பதிலடி

புளோரிடா: கனடா அமெரிக்க தேசத்தின் ஒரு பகுதியாக மாற வாய்ப்பில்லை என அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் 51-வது மாகாணமாக கனடா இணையலாம் என ட்ரூடோ பதவி விலகிய நிலையில் அமெரிக்க நாட்டின் அதிபராகும் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இதற்கு ட்ரூடோ பதிலடி கொடுத்துள்ளார். கனடாவை அமெரிக்காவுடன் இணைக்க பொருளாதார ரீதியான அழுத்தம் தரப்படும் என ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இருந்தாலும் இந்த விவகாரத்தில் ராணுவத்தை பயன்படுத்த போவதில்லை என திட்டவட்டமாக அவர் தெரிவித்துள்ளார். அதே … Read more

மகளிர் உரிமை தொகை! புதிய விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுமா? உதயநிதி ஸ்டாலின் பதில்!

Kalaingar Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகைக்கு புதிதாக விண்ணப்பித்துள்ளவர்களுக்கு அடுத்த 3 மாதத்தில் ரூ. 1000 வழங்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.