‘யாகாவாராயினும் நாகாக்க..’ – கம்யூனிசம் குறித்த ஆ.ராசா பேச்சுக்கு முத்தரசன் கண்டனம்

சென்னை: ‘சுயநலவாதிகளான தலைவர்களால் கம்யூனிஸ கொள்கை தோற்றது’ என்று ஆ.ராசா எம்பி பேசியதை கண்டித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், “திமுக துணைப் பொதுச் செயலாளர் என்ற தலைமைப் பொறுப்பில் இருந்து வரும் ஆ.ராசா, இப்படி பொறுப்பற்ற முறையில் பேசி வருவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். யாகாவாராயினும் நாகாக்க” என்று குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக முத்தரசன் வெளியிட்ட அறிக்கையில், “சென்னை, பச்சையப்பன் கல்லூரியில் நேற்று (07.01.2025) நடந்த நிகழ்வில் பங்கேற்று பேசிய திமுக … Read more

கர்நாடகாவில் 3-ம் வகுப்பு மாணவி மாரடைப்பால் மரணம்

கர்நாடகாவில் உள்ள சாம்ராஜ்நகரில் 3-ம் வகுப்பு மாணவி மாரடைப்பால் வகுப்பறையிலே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள பதனகுப்பேவை சேர்ந்தவர் லிங்கராஜூ (36). இவரது மகள் தேஜஸ்வினி (8). அங்குள்ள தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார். அவர் நேற்று முன் தினம் காலை 11.30 மணியளவில் வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்தார். ஆசிரியர்கள் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு மாணவியை கொண்டு சென்றனர். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் … Read more

ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்தியாவில் ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இந்த போனுடன் ஒன்பிளஸ் 13ஆர் போனும் வெளிவந்துள்ளது. சீனாவை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன் உட்பட எலக்ட்ரானிக் பொருட்களை தயாரித்து, விற்பனை செய்து வருகிறது ஒன்பிளஸ் நிறுவனம். கடந்த 2013-ல் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. குவால்கம் ப்ராஸசரில் ஒன்பிளஸ் 13 சீரிஸ் இயங்குகிறது. இந்தியாவில் குளிர்கால அறிமுகமாக வெளிவந்துள்ளது ப்ரீமியம் மாடல் சீரிஸ் … Read more

டெல்லி மக்கள் யார் பக்கம்? தேர்தலில் வெல்லப்போவது யார்? ஆம் ஆத்மி Vs பாஜக Vs காங்கிரஸ்

Delhi Assembly Elections 2025 Latest News: குளிர் அலையின் பிடியில் உள்ள தேசிய தலைநகரில் அரசியல் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. டெல்லி சட்டசபைக்கு பிப்ரவரி 5 (புதன்கிழமை) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலை வீழ்த்த பாஜக, காங்கிரஸ் வியூகம்.

திமுக இதனை மறைக்கத்தான் போராட்டம் நடத்துகிறது – அதிமுக முன்னாள் அமைச்சர் கண்டனம்!

ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்று பிரதமர் மோடி சந்திக்கும்போது சொல்லக்கூடிய திராணி தெம்பு தைரியம் ஏன் முதலமைச்சருக்கு இல்லை என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கேள்வி.

இஸ்ரோவின் புதிய தலைவர் நாராயணனுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து…

சென்னை; இஸ்ரோவின் புதிய தலைவர் நாராயணனுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநில  பா.ஜ., தலைவர் அண்ணாமலை வாழ்த்துக் கூறி உள்ளனர். இந்திய விண்வெளி ஆய்வு நிறுவன தலைவராக உள்ள சோம்நாத் பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது. இதையடுத்து, புதிய தலைவராக நாராயணன் என்பவர் நியமிக்கப் பட்டுள்ளார். இவர் கன்னியாகுமரி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர். வரும் (ஜன.) 14ம் தேதி இஸ்ரோவின் புதிய தலைவராக நாராயணன் பொறுப்பேற்க இருக்கிறார். அவருக்கு அனைத்து தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். தமிழக முதல்வர் … Read more

'உலகின் 6 நாடுகளில் ஒன்று இந்தியா!' – பெருமை சேர்த்த தமிழர்; இனி இஸ்ரோ தலைவர்-யார் இந்த V.நாராயணன்?

உலகத்தையே இந்தியாவை திரும்பி பார்க்க வைத்ததில் இஸ்ரோவிற்கு முக்கிய பங்கு உண்டு. இப்போது அந்த இஸ்ரோவையே தமிழ்நாடு பக்கம் திரும்பி பார்க்க வைத்திருக்கிறார் V. நாராயணன். ஆம்…தமிழ்நாட்டை சேர்ந்த V. நாராயணன் தற்போது இஸ்ரோவின் தலைவராக பொறுப்பேற்க உள்ளார். ஒரு தமிழர் இஸ்ரோ தலைவர் ஆவது இது முதல்முறை அல்ல. இதற்கு முன்பு 2018 – 2022 காலக்கட்டத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த சிவன் இஸ்ரோ தலைவராக இருந்திருக்கிறார். இஸ்ரோவின் தற்போதைய தலைவர் சோம்நாத்திற்கு பின், வரும் 14-ம் … Read more

தமிழக சட்டப்பேரவையின் 3-ம் நாள் கூட்டம் தொடக்கம்: கருப்புச் சட்டையில் வந்த அதிமுகவினர்

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் 3-ம் நாள் அலுவல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அவைக்கு வந்த அதிமுகவினர் ‘யார் அந்த சார்?’ என்ற பேட்ஜ் பொருந்திய கருப்புச் சட்டையும், டங்க்ஸ்டன் சுரங்க எதிர்ப்பு வாசகம் கொண்ட வெள்ளை மாஸ்க்கும் அணிந்து வந்தனர். உடல்நிலை பாதிப்பு காரணமாக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்றும் அவைக்கு வரவில்லை எனத் தெரிகிறது. தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் நேற்று முன்தினம் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. முதல் நாளில் அரசு … Read more

இஸ்ரோவின் புதிய தலைவராக வி.நாராயணன் நியமனம்

புதுடெல்லி: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் புதிய தலைவராகவும், விண்வெளித் துறை செயலராகவும் தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர்.வி.நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது இஸ்ரோ தலைவராக உள்ள சோம்நாத்தின் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில் புதிய தலைவராக வி.நாராயணன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் வரும் ஜனவரி 14 ஆம் தேதி முறைப்படி பதவியேற்றுக் கொள்கிறார். இஸ்ரோவின் 11-வது தலைவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு ஆண்டுகள் அல்லது மறு அறிவிப்பு வரும் வரை வி.நாராயணன் இஸ்ரோ தலைவராக செயல்படுவார் என மத்திய … Read more

கம்பீர் நீக்கப்பட்டால் இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் இவர் தான்!

இந்தியாவின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் தலைமை ஏற்றதில் இருந்து இந்திய அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது, அவரது தலைமையில் முதன் முதலில் விளையாடிய இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்தது. கிட்டத்தட்ட 27 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கை அணிக்கு எதிராக ஒரு நாள் தொடரை இழந்தது இந்தியா. அதன் பிறகு சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 3-0 என்ற கணத்தில் தோற்றது. இதன் … Read more