தென்மாவட்ட மக்களுக்கு பொங்கல் பரிசு: வந்தே பாரத் ரயிலில் பயணிகள் பெட்டிகள் 16 ஆக உயர்வு….

சென்னை:  சென்னை நெல்லை வந்தே பாரத் ரயில் வரும் 11ந்தேதி முதல் 16 பெட்டிகளுடன் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இது தென்மாவட்ட மக்களுக்கு பொங்கல் பரிசாக அமைந்துள்ளது. தென்மாவட்ட மக்களிடையே பெரும் வரவற்பை பெற்றுள்ள அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயில் இதுவரை 8 பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வந்தநிலையில், வரும் 11ந்தேதி முதல் 16 பெட்டிகளுடன் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.  அதன்படி,  நெல்லை – சென்னை – நெல்லை வந்தேபாரத் ரயிலில் … Read more

`அதிமுக நிர்வாகி, காவல்துறை அதிகாரி கைது!' -சென்னையை உலுக்கிய சிறுமி பாலியல் வழக்கில் நடவடிக்கை

கடந்த ஆண்டு, செப்டம்பர் மாதம் சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் அப்போது தமிழ்நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்தச் சம்பவத்தில் சிறுவன் உள்பட சிலர் சம்பந்தப்பட்டிருக்கின்றனர் என்று அந்தச் சிறுமியின் பெற்றோர் காவல் துறையில் புகார் அளித்தனர். பின்னர், அந்தப் புகாரின் மீது சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்டிருக்கும் சிறுவன் பெயரை நீக்குமாறு மிரட்டுவதாகவும், புகார் கொடுக்கச் சென்றப்போது காவல் அதிகாரி … Read more

அண்ணா பல்கலை. விவகாரத்தில் போராட்டம் நடத்திய அதிமுக, தேமுதிகவினர் மீது வழக்கு

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்துக்கு நீதி கேட்டு, அண்ணா பல்கலை. முன்பாக அதிமுக மாணவரணி சார்பில் நேற்று முன்தினம் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டவர்களை போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர். இதேபோல், தேமுதிக துணை பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ் தலைமையில் மதுரவாயலில் அக்கட்சியினர் நேற்று முன்தினம் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்நிலையில், போராட்டம் நடத்திய அதிமுகவினர் 161 பேர் மீது கோட்டூர்புரம் போலீஸாரும், தேமுதிகவினர் 115 பேர் மீது … Read more

தமிழர்கள் மகா கும்பமேளாவை காணும் வகையில் வரும் பிப்ரவரி மாதம் காசி தமிழ்ச் சங்கமம் – 3

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் வாராணசி​யுடன் தமிழர்​களுக்கு உள்ள கலாச்​சாரத் தொடர்பை வலுப்​படுத்த ‘காசி தமிழ்ச் சங்கமம்’ (கேடிஎஸ்-3) 2022-ல் தொடங்​கப்​பட்​டது. வாராணசி​யில் ஒரு மாதம் நடைபெற்ற இந்த சங்கமம், பிரதமர் நரேந்திர மோடி​யின் சிந்​தனை​யில் உருவானது. தனது மக்களவை தொகு​தி​யில் நடைபெற்​ற​தால் இதை பிரதமர் மோடியே தொடக்கி வைத்​திருந்​தார். அந்த வகையில், தெலுங்கு, சவுராஷ்டிரா சங்கமங்​களும் நடைபெற்றன. இதையடுத்து, 2-வது தமிழ்ச் சங்கமம் வாராணசி​யில் நவம்பர் 2023-ல் 10 நாட்​களுக்கு நடைபெற்​றது. அதேநேரம் 2024-ல் நடைபெற​விருந்த … Read more

Hansika Motwani: `குடும்ப வன்முறை' -ஹன்ஸிகா மோத்வானி மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்த காவல்துறை!

மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலக்கு அறிமுகமான நடிகை ஹன்ஸிகா மோத்வானி. அதைத் தொடர்ந்து பல்வேறு மொழிப் படங்களில் நடித்து தனக்கான ரசிகர் வட்டத்தை அமைத்துக் கொண்டவர். இவருடைய சகோதரர் பிரசாந்த் மோத்வானிக்கும், தொலைக்காட்சி நடிகையான முஸ்கன் நான்சி ஜேம்ஸ் என்பவருக்கும் 2020-ல் திருமணம் நடந்தது. ஆனால் 2022-ல் இருவரும் பிரிந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக தனித் தனியே வாழ்கின்றனர். இந்த நிலையில், மும்பையில் உள்ள அம்போலி காவல் நிலையத்தில் டிசம்பர் 18, 2024 அன்று பாரதிய … Read more

இதுவரை சபரிமலை 45 லட்ச்ம் பக்தர்கள் தரிசனம்

சபரிமலை இதுவரை சபரிமலை ஐயப்பன் கோவிலில் 45 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். கடந்த நவம்பர் 16 ஆம் தேதி (கார்த்திகை 1) முதல் சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு சீசனையொட்டி சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. கடந்த டிசம்பர் 26-ந்தேதி மண்டல சீசன் நிறைவு பெற்றது. மண்டல சீசனில் மட்டும் 41 நாட்களில் 32.49 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்திருந்தனர். தற்போதைய மகரவிளக்கு சீசனையொட்டி சபரிமலையில் தினசரி ஏராளமான பக்தர்கள் சாமி … Read more

Mushroom: காளான்களை ஏன் அடிக்கடி சாப்பிடணும்..? காரணம் சொல்லும் நிபுணர்கள்!

சைவ உணவு பிரியரோ அல்லது அசைவ உணவு பிரியரோ இரண்டு வகையினருமே விரும்பி உண்ணும் ஓர்  உணவாக இருக்கிறது காளான்(Mushroom). பெரியவர்கள் சிறியவர்கள்வரை விரும்பி உண்ணும் காளானில் ருசியுடன் சேர்ந்து உடலுக்குத் தேவையான அனைத்து வகையான ஊட்டச்சத்துகளும் நிரம்பியுள்ளன. உணவு காளான் மனிதனுக்கு உணவாக மட்டுமல்லாமல் நல்ல மருந்தாகவும் பயன்படுகிறது. அதிக அளவு புரதச்சத்தும் மிகக் குறைந்த அளவு கொழுப்புச்சத்தும் இதில் இருக்கிறது. மேலும் சர்க்கரை சத்து, அமினோ அமிலங்கள், மற்றும் தாது உப்புகள், நார்ச்சத்து, சாம்பல் சத்து, … Read more

சுயநலவாதிகளான தலைவர்களால் கம்யூனிச கொள்கை தோற்றது: ஆ.ராசா பேச்சால் சர்ச்சை

சென்னை: சுயநலவாதிகளான தலைவர்களால் கம்யூனிஸ கொள்கை தோற்றது என்று ஆ.ராசா எம்பி பேசியது சர்ச்சையை உருவாக்கியுள்ளது. சென்னை பச்சையப்பன் கல்லூரி நிகழ்ச்சியில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான ஆ.ராசா கம்யூனிசம் மற்றம் திராவிடக் கொள்கைகள் குறித்து பேசியதாவது: ஸ்டாலின் காலத்தில் ரஷ்யா நீர்த்துப் போனது. ஸ்டாலினுக்குப் பின்னர் குருசேவ், கோர்பசேவ் வந்தனர். பொதுவுடைமைத் தத்துவத்தால் அனைத்து மாகாணங்களையும், தேசிய இனங்களையும் ஒன்றிணைத்து பெரிய ரஷ்யாவை கட்டமைத்து, அதை வல்லரசாக உருவாக்கினார்கள். ஆனால், ரஷ்யா சிதறுண்டு போனதற்கு … Read more

ஏ.ஐ தொழில்நுட்ப உதவியுடன் மகாராஷ்டிராவில் கரும்பு விவசாயம்

மகாராஷ்டிராவின் பாராமதி பகுதியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியுடன் விவசாயிகள் கரும்பு விவசாயத்தை மேற்கொண்டுள்ளனர். இது நல்ல பலனை அளித்து வருவதாக விவசாயிகள் கூறுகின்றனர். மகாராஷ்டிராவின் பாராமதி தொகுதியில் உள்ளது நிம்புட் கிராமம். இங்குள்ள சுரேஷ் ஜெகதாப் 65 என்ற விவசாயி பல ஆண்டு காலமாக தனது நிலத்தில் காய்கறி மற்றும் பழங்களை விவசாயம் செய்து வந்தார். இங்குள்ள வேளாண் மேம்பாட்டு அறக்கட்டளையில் உள்ள விஞ்ஞானிகள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கரும்பு விவசாயிகளுக்கு வேண்டிய தகவலை … Read more

`மதகஜராஜா வந்தாச்சு; இதெல்லாம் எப்போ?' துருவ நட்சத்திரம் டு பார்ட்டி வரை காத்திருக்கும் படங்கள்

கடந்த 2012ஆம் ஆண்டு சுந்தர்.சி.யின் இயக்கத்தில் விஷால், சந்தானம், வரலட்சுமி, நிதின் சத்யா, சோனுசூட் மற்றும் மறைந்த நடிகர்கள் மணிவண்ணன், மனோபாலா, மயில்சாமி, சிட்டி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் எடுக்கப்பட்ட படம் ‘மதகஜராஜா’. சில பிரச்னைகளால் கடந்த 12 ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமலிருந்த இப்படம் ஒரு வழியாக பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. ‘மதகஜராஜா’ படம் எப்படி பல வருடங்கள் கிடப்பில் இருந்ததோ அதேபோல மொத்த படப்பிடிப்பும் முடிந்து டீசர், டிரெய்லர்கள் வெளியாகி ரிலீஸ் தேதி அறிவித்தும் பல … Read more