கேரள கம்யூனிஸ்ட் நிர்வாகி கொலை : 9 ஆர் எஸ் எஸ் தொண்டர்களுக்கு ஆயுள் தண்டனை

தலசேரி கேரள கம்யூனிஸ்ட் நிர்வாகி கொலை வழக்கில் 9 ஆர் எஸ் எஸ் உறுப்பினர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள சுண்டா பகுதியை சேர்ந்த ரிஜித் சங்கரன் சிபிஐ(எம்)கட்சியின் நிர்வாகியாக இருந்தார். சிபிஎம் மற்றும் ஆர் எஸ் எஸ் இடையே அரசியல் பதற்றம் நிலவி வந்த நேரத்தில் கடந்த 2005ம் ஆண்டு அக்.3ம் தேதி அன்று ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களால் சுண்டா பகுதியிலுள்ள கோவிலின் அருகில் வைத்து ரிஜித் சங்கரன் கொல்லப்பட்டார். சிபிஎம் நிர்வாகி ரிஜித் … Read more

ஜன. 11-ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து முடிவு எடுப்பதற்காக, அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வரும் 11-ம் தேதி பிற்பகல் 3 மணியளவில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்துக்கு கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமை வகிக்கிறார். 2026-ல் மீண்டும் ஆட்சியை பிடிப்பதற்கான வலுவான கூட்டணி அமைப்பது, இரட்டை இலை பிரச்சினையை தீர்ப்பது உள்ளிட்ட பல்வேறு வியூகங்களை வகுத்துள்ள பழனிசாமி, கட்சியினர் அனைவரையும் தீவிரமாகப் பணியாற்றுமாறு அறிவுறுத்தியுள்ளார். இதையடுத்து, கட்சியினர் தொடர் … Read more

பாலியல் வழக்கில் பஜ்ரங் தளம் தலைவர் கைது – தற்கொலைக்கு முயன்றவர் உ.பி. சிறையில் அடைப்பு

புதுடெல்லி: பாலியல் வழக்கில் உத்தரப் பிரதேசத்தின் கான்பூர் பஜ்ரங் தளம் அமைப்பின் தலைவர் தேடப்பட்டு வந்தார். தன் மீதானப் புகாரை எதிர்த்து காவல் நிலையம் முன்பு தற்கொலைக்கு முயற்சித்தவரை கைது செய்த போலீஸார் அவரை சிறையில் அடைத்தனர். உ.பி.யின் கான்பூர் மாவட்ட பஜ்ரங்தளம் அமைப்பாளராக இருந்தவர் திலிப்சிங் பஜ்ரங்கி. இவர் கலெக்டர் கஞ்ச்சிலுள்ள இளம்பெண் ஒருவரை திருமணம் செய்துகொள்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. அப்பெண்ணை ஆபாசமாக வீடியோ எடுத்த, திலிப் பஜ்ரங்கி தனது … Read more

ஜஸ்டின் ட்ரூடோவுக்கு பதிலாக கனடா பிரதமராக யாருக்கு வாய்ப்பு? – ஒரு பார்வை

ஒட்டாவோ: கனடா பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ள நிலையில், அவருக்கு பதில் யார் புதிய பிரதமராக வருவார்கள் என்ற கேள்வி விவாதிக்கப்பட்டு வருகிறது. கனடாவில் அதிகரித்து வரும் உணவுப் பொருட்களுக்கான விலை உயர்வு, வீட்டு வசதிக்கான விலை உயர்வு, அதிகரித்து வரும் குடியேற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு உள்நாட்டில் எதிர்ப்பு அதிகரித்துள்ளது. அமெரிக்கா மற்றும் இந்தியா உடனான கனடாவின் உறவுச் சிக்கலானதும் ட்ரூடோவுக்கு எதிராக திரும்பியது. ட்ரூடோவின் செல்வாக்கு … Read more

வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெறும்  டெல்லி சட்டசபை தேர்தல் அட்டவணை

டெல்லி வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி அன்று டெல்லி சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி அன்றி 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கு பிப்ரவரி 5-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார். மேலும் இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 8-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. * வேட்பு மனு … Read more

ISRO: முதன்முறையாக விண்வெளியில் துளிர்த்த உயிர்; காராமணி விதைகளை முளைக்கச் செய்து சாதனை!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (ISRO) பூமிக்கு வெளியே காராமணி விதைகளை முளைக்க வைத்து சாதனை படைத்துள்ளது. விண்வெளி சுற்றுப்பாதை தாவர ஆய்வுகளுக்கான சிறிய ஆய்வு தொகுதியின் (CROPS) ஒரு பகுதியாக பி.எஸ்.எல்.வி-சி60 ராக்கெட்டில் இவை அனுப்பப்பட்டன. விண்வெளிக்குச் சென்ற 4 நாட்களிலேயே விதைகள் முளைத்துள்ளன. டிசம்பர் 30ம் தேதி விண்வெளிக்கு அனுப்பப்பட்ட பி.எஸ்.எல்.வி-சி60 ராக்கெட் இரண்டு ஸ்பேடக்ஸ் செயற்கைகோள்களை சுற்றுவட்டப்பாதைதில் நிலை நிறுத்தியது. Life sprouts in space! VSSC’s CROPS (Compact Research Module … Read more

டங்ஸ்டன் திட்டத்துக்கு எதிராக டிராக்டரில் படையெடுத்த பெண்கள் – மதுரையில் மிரளவைத்த மக்கள் பேரணி!

மதுரை: அரிட்டாபட்டி ‘டங்ஸ்டன்’ சுரங்க திட்டத்துக்கு எதிராக மேலூர் பகுதி விவசாயிகள், பெண்கள் மதுரைக்கு டிராக்டரகளில் திரண்டு வந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிட… – மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை கைவிடக் கோரியும், மேலூர் முல்லைப் பெரியாறு ஒரு போக பாசன விவசாயப் பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தியும் மேலூர் பகுதிகளில் பொதுமக்கள், விவசாயிகள் கடந்த ஒரு மாதமாக தொடர் … Read more

மண விழாக்களில் மதுபானத்துக்கு ‘நோ’ – ரூ.21,000 பரிசு அறிவித்த பஞ்சாப் கிராமம்!

பஞ்சாப்: பஞ்சாபில் உள்ள ஒரு கிராம பஞ்சாயத்து திருமண விழாக்களில் மதுபானம் வழங்குவதை தவிர்ப்பது மற்றும் டி.ஜே. போன்ற நிகழ்ச்சிகளில் ஈடுபடாத குடும்பங்களுக்கு ரூ. 21,000 பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பஞ்சாபின் பதிண்டா மாவட்டத்தில் உள்ள பல்லோ கிராம பஞ்சாயத்து, தங்களது பாரம்பரியத்தை மேம்படுத்தும் வகையில், திருமண விழாக்களில் மதுபானம் வழங்குவதை தவிர்ப்பது மற்றும் டி.ஜே போன்ற இசை நிகழ்ச்சியை நடத்த ஊக்குவிக்காத குடும்பங்களுக்கு 21,000 ரூபாய் பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளது. மேலும் … Read more

வெள்ளக்காடான மெக்கா நகரம் – விடாத கனமழையால் இயல்பு நிலை பாதிப்பு

சவுதி அரேபியாவின் மெக்கா நகரத்தில் தொடர்ந்து பெய்த கனமழையால் சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இதனால் அங்கு இயல்புநிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவின் புனித நகரங்களான மெக்கா மற்றும் மதீனாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பேருந்துகள், கார்கள் நகர முடியாமல் வரிசைக் கட்டி நிற்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. ஜித்தா நகரத்திலும் பல பகுதிகளை வெள்ளம் சூழந்து இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் … Read more

ஆடியோ புக் உலகில் பெரும் பாய்ச்சல்… முதலீட்டை ஈர்த்த 'மேஜிக் 20 தமிழ்'

புத்தகங்களை, தமிழில் ஆடியோ வடிவில் வழங்கும் செயலி ‘மேஜிக் 20 தமிழ்’ நிறுவனம் Cultiv8 Incubator நிறுவனத்திடம் இருந்து அதன் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்காக முதலீட்டை பெற்றுள்ளது.