Mushroom: காளான்களை ஏன் அடிக்கடி சாப்பிடணும்..? காரணம் சொல்லும் நிபுணர்கள்!

சைவ உணவு பிரியரோ அல்லது அசைவ உணவு பிரியரோ இரண்டு வகையினருமே விரும்பி உண்ணும் ஓர்  உணவாக இருக்கிறது காளான்(Mushroom). பெரியவர்கள் சிறியவர்கள்வரை விரும்பி உண்ணும் காளானில் ருசியுடன் சேர்ந்து உடலுக்குத் தேவையான அனைத்து வகையான ஊட்டச்சத்துகளும் நிரம்பியுள்ளன. உணவு காளான் மனிதனுக்கு உணவாக மட்டுமல்லாமல் நல்ல மருந்தாகவும் பயன்படுகிறது. அதிக அளவு புரதச்சத்தும் மிகக் குறைந்த அளவு கொழுப்புச்சத்தும் இதில் இருக்கிறது. மேலும் சர்க்கரை சத்து, அமினோ அமிலங்கள், மற்றும் தாது உப்புகள், நார்ச்சத்து, சாம்பல் சத்து, … Read more

சுயநலவாதிகளான தலைவர்களால் கம்யூனிச கொள்கை தோற்றது: ஆ.ராசா பேச்சால் சர்ச்சை

சென்னை: சுயநலவாதிகளான தலைவர்களால் கம்யூனிஸ கொள்கை தோற்றது என்று ஆ.ராசா எம்பி பேசியது சர்ச்சையை உருவாக்கியுள்ளது. சென்னை பச்சையப்பன் கல்லூரி நிகழ்ச்சியில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான ஆ.ராசா கம்யூனிசம் மற்றம் திராவிடக் கொள்கைகள் குறித்து பேசியதாவது: ஸ்டாலின் காலத்தில் ரஷ்யா நீர்த்துப் போனது. ஸ்டாலினுக்குப் பின்னர் குருசேவ், கோர்பசேவ் வந்தனர். பொதுவுடைமைத் தத்துவத்தால் அனைத்து மாகாணங்களையும், தேசிய இனங்களையும் ஒன்றிணைத்து பெரிய ரஷ்யாவை கட்டமைத்து, அதை வல்லரசாக உருவாக்கினார்கள். ஆனால், ரஷ்யா சிதறுண்டு போனதற்கு … Read more

ஏ.ஐ தொழில்நுட்ப உதவியுடன் மகாராஷ்டிராவில் கரும்பு விவசாயம்

மகாராஷ்டிராவின் பாராமதி பகுதியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியுடன் விவசாயிகள் கரும்பு விவசாயத்தை மேற்கொண்டுள்ளனர். இது நல்ல பலனை அளித்து வருவதாக விவசாயிகள் கூறுகின்றனர். மகாராஷ்டிராவின் பாராமதி தொகுதியில் உள்ளது நிம்புட் கிராமம். இங்குள்ள சுரேஷ் ஜெகதாப் 65 என்ற விவசாயி பல ஆண்டு காலமாக தனது நிலத்தில் காய்கறி மற்றும் பழங்களை விவசாயம் செய்து வந்தார். இங்குள்ள வேளாண் மேம்பாட்டு அறக்கட்டளையில் உள்ள விஞ்ஞானிகள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கரும்பு விவசாயிகளுக்கு வேண்டிய தகவலை … Read more

`மதகஜராஜா வந்தாச்சு; இதெல்லாம் எப்போ?' துருவ நட்சத்திரம் டு பார்ட்டி வரை காத்திருக்கும் படங்கள்

கடந்த 2012ஆம் ஆண்டு சுந்தர்.சி.யின் இயக்கத்தில் விஷால், சந்தானம், வரலட்சுமி, நிதின் சத்யா, சோனுசூட் மற்றும் மறைந்த நடிகர்கள் மணிவண்ணன், மனோபாலா, மயில்சாமி, சிட்டி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் எடுக்கப்பட்ட படம் ‘மதகஜராஜா’. சில பிரச்னைகளால் கடந்த 12 ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமலிருந்த இப்படம் ஒரு வழியாக பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. ‘மதகஜராஜா’ படம் எப்படி பல வருடங்கள் கிடப்பில் இருந்ததோ அதேபோல மொத்த படப்பிடிப்பும் முடிந்து டீசர், டிரெய்லர்கள் வெளியாகி ரிலீஸ் தேதி அறிவித்தும் பல … Read more

பெங்களூரு தூத்துக்குடி இடையே பொங்கல் சிறப்பு ரயில்

சேலம் பெங்களூரு தூத்துக்குடி இடையே பொங்கலுக்காக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. தெற்கு ரயில்வே சேலம் கோட்டம், ரயில்வே நிர்வாகம் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் ரெயில்வே நிர்வாகம் விழாக்காலங்களில் சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேலம் வழியாக பெங்களூரு- தூத்துக்குடி மற்றும் தூத்துக்குடி – மைசூர் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் அதாவது பெங்களூரு – தூத்துக்குடி சிறப்பு ரயில் (06569) நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) பெங்களூரூவில் இருந்து இரவு 8 … Read more

முதலாளித்துவ கட்சியான திமுகவுடன் தேர்தல் கூட்டணி மட்டும்தான்: மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் உறுதி

முதலாளித்துவ கட்சியான திமுகவுடன் தேர்தல் மற்றும் தொகுதி உடன்பாடு மட்டும்தான். ஒருபோதும் ஆட்சி, அதிகாரத்தில் பங்கேற்கமாட்டோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் உறுதிபட தெரிவித்தார். சென்னை தி.நகரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அரசியலமைப்புச் சட்டம், போராடும் உரிமையை வழங்கியுள்ளது. யார் போராட அனுமதி கோரினாலும் காவல்துறை அனுமதி வழங்க வேண்டும். போராட்டத்தை அவர்கள் ஒழுங்குபடுத்தலாம். போராட்டத்துக்கு அனுமதி மறுப்பது சட்டவிரோதமாகும். தமிழக காவல்துறை இத்தகைய போக்கைத்தான் … Read more

டெல்லி சட்டப்பேரவைக்கு பிப்.5-ல் தேர்தல்: 70 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு

புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 5-ம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு, உத்தர பிரதேசத்தின் மில்கிபூர் ஆகிய தொகுதிகளுக்கும் அதே நாளில்தான் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. பிப். 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: டெல்லி சட்டப்பேரவைக்கு மொத்தம் உள்ள 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பிப்ரவரி 5-ம் தேதி தேர்தல் நடைபெற … Read more

திருப்பாவை – பாடல் 24  விளக்கம்

திருப்பாவை – பாடல் 24  விளக்கம் மார்கழி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும்.  இந்த மாதத்தில் ஆண்டாள் பாடிய முப்பது பாடல்களே ‘திருப்பாவை’ என்று அழைக்கப்படுகிறது. இந்த பாடல்கள் ஆண்டாள் பாசுரம் என்றும் வழங்கப்படும். இந்த திருப்பாவை பாடல்கள் அனைவராலும் மார்கழி மாதத்தில் தினமும் பாடப்படும் முக்கிய பாடல்களாகும். அதிலும் திருமணம் ஆகாத பெண்கள் மார்கழியில் திருப்பாவை பாடுவது என்பது மிகவும் விசேஷம். அது அவர்களுக்கு நல்ல கணவனை பெற்றுத் தரும். அந்தவகையில், மார்கழி மாதத்தின் 24 … Read more

இபிஎஸ் உறவினரின் நிறுவனம் உட்பட 26 இடங்களில் ஐடி ரெய்டு: பறிமுதல் செய்த ஆவணங்கள் குறித்து தகவல் தெரிவிக்கவில்லை

சென்னை/ஈரோடு: அ​திமுக பொதுச் செயலாளர் பழனிசாமி​யின் உறவினர் நிறு​வனம் உட்பட தமிழகம் முழு​வதும் 26 இடங்​களில் வருமான வரி சோதனை நடைபெற்​றது. ஈரோட்டை தலைமை​யிட​மாகக் கொண்டு செயல்​படும் கட்டுமான நிறுவன அலுவலகம் மற்றும் உரிமை​யாளரின் வீடு உள்ளிட்ட இடங்​களில் வருமான வரித் துறை​யினர் சோதனை மேற்​கொண்​டுள்​ளனர். ஈரோடு பூந்​துறை சாலை​யில் உள்ள செட்​டிபாளையம் என்ற இடத்​தில் ராமலிங்கம் என்பவருக்​குச் சொந்​தமான கட்டுமான நிறு​வனம் உள்ளது. இந்த நிறு​வனம் சார்​பில் தமிழ்​நாடு வீட்டு​வசதி வாரி​யம், குடிசை​மாற்று வாரி​யம், பொதுப் … Read more

குஜராத்தில் ஆழ்குழாய் கிணற்றில் விழுந்த 18 வயது இளம்பெண் உயிரிழப்பு

புஜ்: குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டம் புஜ் தாலுகா பகுதியிலுள்ள கண்டேரய் கிராமத்தைச் சேர்ந்த 18 வயது பெண் நேற்று முன்தினம் காலை ஆழ்குழாய் கிணற்றில் தவறி விழுந்தார். இதையடுத்து தீயணைப்புப் படையினரும், தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் (என்டிஆர்எப்) சம்பவ இடத்துக்கு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு உறுதுணையாக எல்லை பாதுகாப்புப் படையினரும் (பிஎஸ்எஃப்) செயல்பட்டனர். நேற்று முன்தினம் தொடங்கிய மீட்புப் பணி நேற்று வரை தொடர்ந்தது. இந்நிலையில் 33 மணி நேர போராட்டத்துக்கு … Read more