சாம்பியன்ஸ் டிராபியில் பும்ரா விளையாட கூடாது – முக்கிய காரணம் இதுதான்?

India National Cricket Team, Champions Trophy 2025: இந்திய அணி கடந்த 2023 ஐசிசி உலகக் கோப்பை தொடரில் இறுதிப் போட்டி வரை வந்து தவறவிட்டது இந்திய ரசிகர்களுக்கு பெரும் கவலை அளித்தது. அதன் பின்னர் 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்றது ரசிகர்களின் நீண்ட நாள் ஏக்கம் நிவர்த்தியானது எனலாம்.  அதேவேளையில், தற்போது பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் படுதோல்வி அடைந்தது மட்டுமின்றி ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி … Read more

மோசமான வானிலையால் இலங்கை செல்லும் விமானம் திருவனந்தபுரத்தில் தரையிறக்கம்

திருவனந்தபூரம் மோசமான வானிலை காரணமாக இலங்கை செல்ல வேண்டிய விமானம் திருவனந்தபுரத்தில் தரை இறங்கி உள்ளது/ இலங்கையின் தலைநகர் கொழும்புக்கு துருக்கியில் இருந்து புறப்பட்டுச் சென்ற துருக்கி ஏர்லைன்ஸ் விமானத்தில் 10 விமான பணியாளர்கள் மற்றும் 289 பயணிகள் பயணம் செய்தனர். அதிகாலை விமானம், கொழும்புவை நெருங்கியபோது அங்கு மோசமான வானிலை நிலவியது. இதனால் அங்கு விமானத்தை தரையிறக்க முடியாத நிலை ஏற்பட்டதால் இந்தியாவின் திருவனந்தபுரத்திற்கு திருப்பிவிடப்பட்டது.  திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் இந்த விமானம் தரையிறங்க … Read more

`தவறான எண்ணத்துடன் கையைப் பிடித்தார்'- நடிகை ஹனி ரோஸ் புகார்; தொழிலதிபர் மீது வழக்கு

கேரளாவைச் சேர்ந்த நடிகை ஹனி ரோஸ் பல்வேறு தனியார் நிறுவனங்களின் திறப்பு விழாவில் கலந்துகொண்டு வருகிறார். ஒரு திறப்பு விழாவில் கலந்துகொண்டபோது அந்த நிறுவன உரிமையாளரான தொழில் அதிபர் இரட்டை அர்த்தத்தில் பேசி தன்னை அவமானப்படுத்தியதாக ஹனி ரோஸ் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பிறகு அந்த நபருக்கு சொந்தமான நிறுவனங்களின் நிகழ்ச்சிகளுக்கு செல்ல மறுத்ததாகவும் நடிகை ஹனி ரோஸ் கூறியிருந்தார். இதுகுறித்து நடிகை ஹனி ரோஸ் ஃபேஸ்புக்கில் வெளிப்படையாகப் பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவுக்கு பலர் மோசமான கமென்ட்களை … Read more

‘திமுகவினரின் பள்ளிகளில் மட்டும் இந்தி சொல்லித் தருகிறார்களே?’ – வானதி சீனிவாசன் கேள்வி

புதுச்சேரி: திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் இந்தி சொல்லி தரும் சிபிஎஸ்இ பள்ளிகள் நடத்திவிட்டு அரசு பள்ளிகளில் ஏழை குழந்தைகள் இந்தி படிக்கக்கூடாது என்பதுதான் சமூக நீதியா என்று அகில இந்திய பாஜக மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பினார். புதுச்சேரி பாஜக மாநில தலைவர் தேர்வு செய்வது சம்பந்தமாக அகில இந்திய பாஜக மகளிர் அணி தலைவியும் புதுச்சேரி பாஜக தேர்தல் பொறுப்பாளருமான வானதி சீனிவாசன், புதுச்சேரி பாஜக மேலிட பொறுப்பாளருமான நிர்மல் குமார் … Read more

டெல்லி முதல்வருக்கான வீடு ஒதுக்கீட்டை மத்திய அரசு ரத்து செய்ததாக அதிஷி குற்றச்சாட்டு

புதுடெல்லி: மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான அரசு தனக்கான முதல்வர் வீட்டை மூன்று மாதங்களில் இரண்டாவது முறையாக ரத்து செய்துள்ளதாக டெல்லி முதல்வர் அதிஷி குற்றஞ்சாட்டியுள்ளார். இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு ஒருநாளைக்கு முன்பாகவே வெளியேறும் அறிவிப்பு தனக்கு வழங்கப்பட்டதாக அவர் சாடியுள்ளார். கட்சி ஆதரவாளர்கள் மற்றும் ஊடகத்தினரிடம் பேசிய முதல்வர் அதிஷி கூறுகையில், “டெல்லி பேரவைக்கான தேர்தல் இன்றுதான் அறிவிக்கப்பட்டது. மூன்று மாதத்தில் இரண்டாவது முறையாக நேற்றிரவே மத்திய பாஜக அரசு என்னை … Read more

திபெத் நிலநடுக்கம்: உயிரிழப்பு 95 ஆக அதிகரிப்பு, 200+ காயம்

திபெத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சீனாவின் ஒரு பகுதியாக உள்ள திபெத்தில், நேபாள எல்லைப் பகுதியையொட்டி செவ்வாய்க்கிழமை காலை 6.35 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. திபெத்தில் உள்ள மலைப்பகுதியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி இருந்தது. இதனால் திபெத், நேபாள நாடுகள் நிலநடுக்கத்தில் குலுங்கின. இந்த பயங்கர நிலநடுக்கம் ரிக்டரில் 7.1 ஆக பதிவானது என … Read more

போலி இணையதளம் மூலம் BSNL பெயரில் மோசடி…. பலியாக வேண்டாம் என எச்சரிக்கை

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. மோசடி செய்பவர்கள் ஒவ்வொரு நாளும் நூதன வழிகளில் மக்களை ஏமாற்ற முயற்சிக்கின்றனர். மோசடி செய்பவர்கள் மக்களை ஏமாற்ற புதிய வழியைக் கண்டுபிடிக்கின்றனர். பிஎஸ்என்எல் டவர் என்ற பெயரில் மோசடி செய்பவர்கள் மக்களை ஏமாற்றி வருகின்றனர். இது தொடர்பாக அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனமும் எச்சரிக்கை விடுத்துள்ளது.  பிஎஸ்என்எல் விடுத்துள்ள எச்சரிக்கை பிஎஸ்என்எல் நிறுவனம் தனது பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதில், பிஎஸ்என்எல் என்ற பெயரில் ஒரு … Read more

திருப்பூர் திருமூர்த்தி அணையில் இருந்து நீர் திறக்க தமிழக அரசு உத்தரவு

சென்னை திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”திருப்பூர் மாவட்டம், பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம், திருமூர்த்தி அணையிலிருந்து பரம்பிக்குளம் பிரதான கால்வாய் சரகம் 86.900 கி.மீ-ல் உள்ள கள்ளிபாளையம் நீர் வெளிப்போக்கி (Outlet) வழியாக திருப்பூர் மாவட்டம், காங்கயம் வட்டம், உத்தமபாளையம் கிராமத்திலுள்ள வட்டமலைக்கரை ஓடை நீர்த்தேக்கத்திற்கு நாளை(8.01.2025) முதல் 18.01.2025 வரை 10 நாட்களில் 240 மில்லியன் கன அடிக்கு … Read more

சென்னை – நெல்லை வந்தே பாரத் ரயிலில் 16 பெட்டிகளுக்கு ஒப்புதல்

சென்னை: சென்னை எழும்பூர் – திருநெல்வேலி இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் 8 பெட்டிகளில் இருந்து 16 பெட்டிகளாக மாற்ற ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ரயிலில் இரு மார்க்கத்திலும் வரும் 11-ம் தேதி முதல் 16 பெட்டிகளாக இணைத்து இயக்கப்பட உள்ளன. தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் சென்று திரும்பும் விதமாக, வந்தே பாரத் ரயில் சேவை கடந்த 2023-ம் ஆண்டு செப்.24-ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த ரயில் திருநெல்வேலியில் … Read more