மீண்டும் பாஜக – சமாஜ்வாதி நேருக்கு நேர்: கவனம் ஈர்க்கும் அயோத்தியின் மில்கிபூர் இடைத்தேர்தல்

புதுடெல்லி: இந்திய தேர்தல் ஆணையத்தின் இன்றைய அறிவிப்பில் அயோத்தியின் மில்கிபூர் இடைத்தேர்தலும் இடம்பெற்றுள்ளது. இதில் மீண்டும் பாஜக – சமாஜ்வாதி கட்சிகள் நேருக்கு நேர் மோதுகின்றன. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், உ.பி.யில் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டது. இதன் 80 தொகுதிகளில் 62 வைத்திருந்த பாஜக இந்த முறை 33 மட்டும் பெற்றிருந்தது. இதில் குறிப்பாக ராமர் கோயிலின் அயோத்தி அடங்கிய பைஸபாத் தொகுதியில் பாஜகவுக்கு, சமாஜ்வாதியிடம் தோல்வி கிடைத்தது. மில்கிபூரின் சமாஜ்வாதி எம்எல்ஏவான அவ்தேஷ் பிரசாத், பைஸாபாத்தின் … Read more

கனடா பிரதமர் பதவி ரேஸில் முந்தும் அனிதா ஆனந்த் யார்?

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகல் அறிவிப்பைத் தொடர்ந்து, இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும், தமிழகத்தை பூர்விகமாகக் கொண்டவருமான அனிதா ஆனந்த், அந்நாட்டின் அடுத்த பிரதமராக பதவியேற்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. லிபரல் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்ய அந்தக் கட்சி முடிவு செய்திருக்கிறது. இது தொடர்பாக லிபரல் கட்சி தொண்டர்களிடையே விரைவில் வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இதில் அதிக வாக்குகள் பெறுபவர் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார். அவரே கனடாவின் புதிய பிரதமராகவும் பதவியேற்பார். … Read more

IND vs ENG: இந்தியாவின் 15 பேர் கொண்ட ஸ்குவாட்… பிரதான பிளேயிங் XI இதுதான்!

India National Cricket Team, IND vs ENG: 5 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட இங்கிலாந்து அணி இந்த ஜனவரி, பிப்ரவரியில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. வரும் ஜன. 22ஆம் தேதி தொடங்கும் இந்த தொடரில் பிப்.12ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பிப்.19ஆம் தேதி சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடங்குவதால் இந்த தொடர் இரு அணிகளுக்கும் பயிற்சியாக அமையும். இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடர்தான் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோருக்கு கடைசி … Read more

Sivakarthikeyan: “சாதாரணமான ஒருவன் வளர்ச்சியை எட்டும்போது சிலர்தான் வரவேற்கிறார்கள்!'' – எஸ்.கே!

சிவகார்த்திகேயன் தற்போது சுதா கொங்கரா இயக்கும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் எஸ்.கேவுடன் ஜெயம் ரவி, அதர்வா, ஶ்ரீ லீலா எனப் பலரும் நடிக்கிறார்கள். மற்றொரு பக்கம் முருகதாஸ் இயக்கும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தின் படபிடிப்பும் 90 சதவீதம் முடிந்துவிட்டது. `சிக்கந்தர்’ திரைப்படத்தை முடித்துவிட்டு மீண்டும் சிவகார்த்திகேயனின் படத்தின் மீதமுள்ள படப்பிடிப்பை நடத்தவிருக்கிறார் முருகதாஸ். சமீபத்திய நிகழ்வு ஒன்றில் எஸ்.கே, தான் சினிமாவிலிருந்து விலக நினைத்ததுக் குறித்து பேசியிருந்தார். தற்போது அந்த முடிவு குறித்து விரிவாக … Read more

7 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை மையம் தமிழகத்தில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம். “பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளிலிருந்து தெற்கு கேரளா கடலோரப்பகுதிகள் வரை ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. கேரளா கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 07-01-2025 மற்றும் 08-01-2025: கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், … Read more

“பொருளாதார ரீதியாக விடுதலை பெற்றாலும், இன்றும் பெண்கள் ஒடுக்கப்படுகின்றனர்'' -அருந்ததி ராய்

வயநாடு இலக்கியத் திருவிழா 2024 வயநாடு இலக்கியத் திருவிழா 2024 கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் நடைபெற்றது. இதில் நாடுமுழுவதிலும் இருந்து எழுத்தாளர்கள் கலந்துகொண்டனர். அந்தவகையில் பிரபல ஆங்கில எழுத்தாளர் அருந்ததி ராய் பங்கேற்றுள்ளார். அவரை மலையாள நடிகை பார்வதி திருவோத்து நேர்காணல் செய்திருந்தார். நேர்காணலில் அருந்ததி ராய்யின் ‘சின்னஞ்சிறிய பொருள்களின் கடவுள்’ நூல் தனக்கு மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது எனத் தெரிவித்தார் பார்வதி. மேலும் பதின் வயதிலிருந்தே அவரை முன்னுதாரணமாகக் கொண்டு பின்தொடர்வதாகவும் கூறினார். … Read more

HMPV virus | அச்சம், பதற்றம் தேவையில்லை… – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அடுக்கும் காரணங்கள்

சென்னை: “தமிழகத்தைப் பொறுத்தவரை ஹெச்எம்வி வைரஸ் (HMPV) தொற்று சேலத்தில் ஒருவருக்கும், சென்னையில் ஒருவர் என 2 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது. இருவருமே நலமுடன் இருக்கிறார்கள். எனவே இந்த வைரஸ் தானாகவே சரியாக கூடியது, யாரும் பயப்படத் தேவையில்லை. எனவே இந்த வைரஸ் தொடர்பாக பெரிய அளவில் அச்சப்படத் தேவையில்லை,” என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். சென்னை, தலைமைச் செயலகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் … Read more

பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆசாராம் பாபுவுக்கு மார்ச் 31 வரை ஜாமீன்

புதுடெல்லி: பாலியல் வனகொடுமை வழக்கில் 11 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் ஆசாராம் பாபுவுக்கு மருத்துவ காரணங்களுக்காக வரும் மார்ச் மாதம் வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனது ஆசிரமத்தில் இளம் பெண் ஒருவரை ஆசாரம் பாபு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், அவருக்கு ராஜஸ்தானின் ஜோத்பூரில் உள்ள சிறப்பு போக்சோ நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இதையடுத்து அவர், ஜோத்பூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். குஜராத்தில் உள்ள காந்திநகர் … Read more

Ajith Kumar: "That’s racing…" – கார் ரேஸ் பயிற்சியின்போது அஜித் குமாருக்கு விபத்து

அஜித் குமார் ரேஸிங் டீம் துபாய்க்குச் சென்றிருக்கிறது. நடிப்பைத் தாண்டி ரேஸிங் களத்திலும் தற்போது அதிக கவனத்தைச் செலுத்தி வருகிறார் அஜித் குமார். புதியதாக `அஜித்குமார் ரேஸிங்’ என்ற குழுவையும் கடந்தாண்டு தொடங்கியிருந்தார். துபாயில் இந்தாண்டிற்கான `24H Dubai’ கார் பந்தயம் ஜனவரி 10 ஆம் தேதி தொடங்கவிருக்கிறது. அதற்கான பயிற்சியை இன்று துபாய் ஆட்டோடிரோம் ரேஸ் டிராக்கில் தொடங்கியிருக்கிறது அஜித்குமார் ரேஸிங் டீம். அது தொடர்பான புகைப்படங்களும் இன்று அக்குழுவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்கள். … Read more

ஆளுநருக்கு எதிரான ஆர்ப்பாட்டம் : திமுகவினர் மீது வழக்கு பதிவு

சென்னை ஆளுநருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. தமிழக சட்டசபை உரையை புறக்கணித்த ஆளுநர் ஆர்.என்.ரவியை ஜனாதிபதி திரும்ப பெற வலியுறுத்தியும் அதிமுக – பாஜக கள்ளக் கூட்டணியைக் கண்டித்தும் திமுக சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இன்று தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே நடந்த ஆர்பாட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, … Read more