ஜம்மு காஷ்மீர்: துப்பாக்கியால் சுட்டு பாதுகாப்புப்படை வீரர் தற்கொலை

ஸ்ரீநகர், பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ராஜ்நாத் பிரசாத் (55). இவர் மத்திய பாதுகாப்பு படையில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தின் கத்ராவில் உள்ள மாதா வைஷ்ணவி தேவி கோவில் பகுதியில் இன்று பாதுகாப்பு பணியில் இருந்த ராஜ்நாத் தனது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு விரைந்து வந்த சக வீரர்கள், அவர் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்தவரின் … Read more

முகமது ஷமி விஷயத்தில் பி.சி.சி.ஐ. என்ன செய்கிறது..? ரவி சாஸ்திரி கேள்வி

மும்பை, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி இந்தியாவில் கடந்த 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் விளையாடியிருந்தார். அந்த தொடருக்கு பின்னர் கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்ட வந்த அவர் லண்டன் சென்று அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அதன் பிறகு சிறிது காலம் ஓய்வெடுத்தார். தற்போது காயத்தில் இருந்து மீண்டுள்ள முகமது ஷமி உள்ளூர் தொடர்களில் களமிறங்கி சிறப்பான வெளிப்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார். கடந்த நவம்பரில் மத்தியப் பிரதேசத்திற்கு … Read more

புற்றுநோய் பாதிப்புடன் 43 நாளாக தொடரும் உண்ணாவிரதம்; அசைக்க முடியாத உறுதி! – யார் அந்த விவசாயி?

“என் உயிரை விட விவசாயிகளோட வாழ்க்கை தான் முக்கியம்…” இப்படி அவர் கடந்த சனிக்கிழமை உரையாற்றும்போது அவர் உண்ணாவிரதம் தொடங்கி 41 நாள்கள் முடிந்திருந்தது. ‘விவசாயிகளின் நலனுக்காக இவ்வளவு வயதான முதியவர் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும்போது, இளைஞர்களாகிய எங்களால் ஏன் எதுவும் செய்ய முடியாதா?” என இளைஞர்கள் கூட்டம் நாளுக்கு நாள், உண்ணாவிரதப் போராட்ட களத்தில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. யாருக்காக இந்தக் கூட்டம்? யார் அவர்? ஏன் உண்ணாவிரதம் இருக்கிறார்? அவரின் கோரிக்கைதான் என்ன? … Read more

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: வெடிகுண்டுகள் நீதிமன்றத்துக்குள் கொண்டு வரப்பட்டது குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவு

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் உயர் நீதிமன்ற வளாகத்துக்குள் கொண்டு வரப்பட்டது குறித்த விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக பதவி வகித்த ஆம்ஸ்ட்ராங்கை ஒரு கும்பல் கடந்தாண்டு ஜூலையில் படுகொலை செய்தது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மீதான குண்டர் தடுப்புச்சட்டத்தை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தன. … Read more

“நாங்கள் வெல்வது நிச்சயம்!” – டெல்லி தேர்தல் தேதி அறிவிப்பை அடுத்து கேஜ்ரிவால் உறுதி

புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 5-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், இந்த தேர்தலில் நாங்கள் நிச்சயம் வெல்வோம் என்று டெல்லி முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து தொண்டர்களும் முழு பலத்துடனும் உற்சாகத்துடனும் களத்தில் இறங்க தயாராக உள்ளனர். தொண்டர்கள்தான் எங்களின் மிகப்பெரிய பலம். இந்த … Read more

Video: நடிகர் அஜித்தின் ரேஸ் கார் விபத்து… பதற வைக்கும் வீடியோ

Ajith Kumar Race Car Accident: துபாயில் நடைபெற்ற பயிற்சியின் போது நடிகர் அஜித்குமார் ரேஸ் கார் விபத்தில் சிக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நடிகர் அஜித் குமாருக்கு காயம் ஏதும் இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Sivakarthikeyan:“என்னுடைய தயாரிப்பில் உங்களின் முதல் இந்திப் படம் என அமீர் கான் சொன்னார்" – எஸ்.கே

சிவகார்த்திகேயன் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் படம், சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கும் படம் என வலுவான லைன் அப்களை தனது கையில் வைத்திருக்கிறார். இதுமட்டுமல்ல `டான்’ சிபி சக்ரவர்த்தி இயக்கத்திலும் ஒரு திரைப்படத்தில் நடிக்கவிருக்கிறார் எஸ்.கே. தன்னுடைய லைப் அப்கள் குறித்தும் தன்னுடைய பாலிவுட் அறிமுகம் குறித்தும் ஹாலிவுட் ரிப்போர்டர் ஊடகத்தின் இந்திய பதிப்பில் அவர் பேசியிருக்கிறார். அவர், “முருகதாஸ் சார் இயக்கத்தில் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு 90 சதவிகிதம் முடிந்துவிட்டது. இன்னும் 7,8 நாட்கள் … Read more

Relaince Jio… தினம் 2GB டேட்டா உடன்… டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இலவச சந்தா

இன்றைய காலகட்டத்தில், மொபைல் டேட்டா மற்றும் பொழுதுபோக்கின் தேவைகள், ஆகிய இரண்டையும் ஒன்றாக பூர்த்தி செய்யும் ரீசார்ஜ் திட்டங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. எனவே, வாடிக்கையாளர் தேவையை கருத்தில் கொண்டு டிஸ்னி + ஹாட்ஸ்டார் போன்ற பிரபலமான OTT சேனல்களுக்கான இலவச சந்தா பலன்களை கொண்ட பல திட்டங்களை தொலைத் தொடர்பு நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.  தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் முன்னணி நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோவும், இதற்கு விதிவிலக்கல்ல. ஜியோ நிறுவனத்திற்கு நாடு முழுவதும் … Read more

பகவத் கீதை மீது பதவி பிரமாணம் செய்த அமெரிக்க எம் பி

வாஷிங்டன் அமெரிக்காவில் விர்ஜீனிய எம் பி சுஹாஷ் சுப்ரமணியம் பகவத் கீதை மீது பதவி பிரமாணம் செய்துள்ளார். கடந்த நவம்பர் 5-ந்தேதி நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், பெரும்பான்மையான இடங்களில் முன்னாள் அதிபர் டிரம்ப் சார்ந்த குடியரசு கட்சி கைப்பற்றியதால் டிரம்ப் வருகிற 20 ஆம் தேதி அடுத்த அதிபராக பதவியேற்கவுள்ளார். தற்போது நடந்து வரும் அமெரிக்காவின் நாடாளுமன்ற, உறுப்பினர்கள் பதவி பிரமாணம் எடுத்து கொள்ளும் நிகழ்ச்சியில், கிழக்கு கடற்கரையில் இருந்து சென்ற விர்ஜீனிய எம்பி … Read more

புதிய வகை தொற்று : இந்தியாவில் பாதிப்பு 7 ஆக உயர்வு

நாக்பூர், சீனாவில் அதிக அளவில் பரவி வரும் எச்.எம்.பி.வி. தொற்று இந்தியாவிலும் பரவ தொடங்கியுள்ளது. உலக அளவில் எச்.எம்.பி.வி. தொற்று ஏற்கனவே பரவி காணப்படுகிறது. கடந்த காலத்தில் இந்த தொற்றுடன் தொடர்புடைய சுவாச பாதிப்புகள் பல்வேறு நாடுகளிலும் கண்டறியப்பட்டு உள்ளன. இந்த நிலையில் இந்த தொற்று இந்தியாவிலும் பரவ தொடங்கிய சூழலில், நாடு முழுவதும் சுவாச பாதிப்புகளை கண்காணிக்கும் முயற்சியில் ஐ.சி.எம்.ஆர். ஈடுபட்டு வருகிறது. இதில், இந்தியாவில் தொற்று பாதிப்பு எதுவும் அதிகரித்து காணப்படவில்லை என ஐ.சி.எம்.ஆர். … Read more