ரோகித் இல்லை… இந்திய டெஸ்ட் அணியில் இனி அவர்தான் தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் – மஞ்ரேக்கர்

மும்பை, இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் நிறைவடைந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் தோல்வியை தழுவியது. 5 ஆட்டங்கள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்தியா, அதற்கடுத்த 4 டெஸ்டில் 3 தோல்வி கண்டது. ஒரு போட்டி சமனில் முடிந்தது. இதனால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பில் இருந்து வெளியேறிய இந்தியா கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இந்த தொடரில் ரோகித், விராட் போன்ற முன்னணி வீரர்கள் … Read more

BB Tamil 8: “அறம் அறம்னு அறுக்குறியே தவிர நீ செய்ற எதுலயும் அறம் இல்ல"- முத்துவை சாடிய சிவகுமார்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 93வது நாளுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகி இருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி இப்போது இறுதிக் கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. கடந்த வாரம் TTF டாஸ்க் நடைபெற்றது. இறுதிப் போட்டிக்கான முதல் போட்டியாளராக ரயான் தேர்வாகி இருக்கிறார். இந்த சீசனின் கடைசி போட்டியாளராக வந்து, இப்போது முதல் பைனலிஸ்ட்டாக இவர் மாறியிருக்கிறார். சிவகுமார் இதனிடையே ராணவ், மஞ்சரி ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். நேற்று (ஜனவரி 6) வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் என்ட்ரி கொடுப்பார்கள் என்று சொல்லப்பட்டிருந்தது. … Read more

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5-ல் இடைத்தேர்தல் அறிவிப்பு

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ.வாக பதவி வகித்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவை ஒட்டி, இத்தொகுதிக்கு பிப்ரவரி 5-ம் தேதி தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்தத் தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. தமிழ்நாட்டின் சட்டமன்ற தொகுதி வரிசையில், 98-வது தொகுதியாக ஈரோடு கிழக்கு தொகுதி உள்ளது. குறைந்த பரப்பளவில், அதிக வாக்காளர்களை கொண்ட ஈரோடு கிழக்கு தொகுதியில், ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டுகள் இடம்பெற்றுள்ளன. கடந்த 6-ம் தேதி (நேற்று) … Read more

டெல்லி சட்டப்பேரவைக்கு பிப்.5-ல் ஒரே கட்டமாக தேர்தல்: பிப். 8-ல் வாக்கு எண்ணிக்கை

புதுடெல்லி: 70 சட்டப்பேரவைகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு பிப்ரவரி – 5ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்றும், தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 8-ம் தேதி எண்ணப்படும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. டெல்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம் பிப்ரவரி 23-ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், சட்டப்பேரவை பொதுத் தேர்தல் குறித்த அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார், “வேட்புமனு தாக்கல் வரும் 10-ம் … Read more

டெல்லி சட்டப்பேரவை தேர்தல், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… தேதியை அறிவித்த தேர்தல் அறிவிப்பு

Delhi Assembly Election 2025 Date: டெல்லியில் சட்டப்பேரவை தேர்தல் மற்றும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் ஆகியவை பிப்.5ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

HMPV வைரஸ்: அச்சப்பட வேண்டாம், சிகிச்சையும் வேண்டாம் – மா.சுப்பிரமணியன் சொல்வது என்ன?

HMPV Virus In Tamil Nadu: தமிழ்நாட்டில் ஏற்பட்ட HMPV வைரஸ் பாதிப்பு குறித்தும், இந்த வைரஸ் குறித்தும் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

KH 237: அமெரிக்காவில் AI படிப்புடன் ஸ்கிரிப்ட் வொர்க்; ஆரம்பமாகும் அடுத்த அதிரடி

மணிரத்னத்தின் இயக்கத்தில் ‘தக் லைஃப்’ படத்தில் நடித்து வந்த கமல்ஹாசன், அந்த படத்தை முடித்து கொடுத்து விட்டு, ஒரு சில மாதங்களுக்கு முன்னர் வெளிநாடு பறந்தார். கடந்த நவம்பர் மாதத்தோடு ‘தக் லைஃப்’ படப்பிடிப்பு முடிந்து விட்டது என்றாலும், படம் இந்த ஆண்டும் ஜூன் 5ம் தேதி அன்று தான் திரைக்கு வருகிறது. அமெரிக்காவில் ஏ.ஐ. தொழில் நுட்பம் கற்று வரும் கமல்ஹான், விரைவில் சென்னை திரும்புகிறார். அவரது 237-வது படத்தை ஸ்டன்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் இயக்குகின்றனர். … Read more

ஜனவரி 15 ஆம் தேதி பெருந்தலைவர் காமராசர் விருது பெறும் கேவி தங்கபாலு

சென்னை தமிழக அரசின் பெருந்தலைவர் காமராசர் விருது கேவி தங்கபாலுவுக்கு அறிவிக்கப்படுள்ளது. இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தெருவெங்கும் பள்ளிகள் திறந்து, இலவசக் கல்வித் திட்டம், சத்துணவுத் திட்டம் முதலிய திட்டங்கள் மூலமாகத் தமிழ்ச் சமுதாயம் கல்வி எனும் கைவிளக்கு ஏந்தி முன்னேற வழிவகுத்து வரலாறு படைத்த பெருந்தலைவர் அவர்களின் அடிச்சுவட்டில் தொண்டாற்றி வரும் ஒருவருக்கு பெருந்தலைவர் காமராசர் விருது 2006ஆம் ஆண்டு முதல் வழங்கப் பெற்று வருகிறது.  18 அறிஞர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. அவ்வரிசையில் … Read more

இலங்கையில் மோசமான வானிலை.. திருவனந்தபுரத்திற்கு திருப்பி விடப்பட்ட விமானம்

திருவனந்தபுரம்: துருக்கியில் இருந்து இலங்கையின் கொழும்பு நோக்கி துருக்கி ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டுச் சென்றது. அதில் 10 விமான பணியாளர்கள் மற்றும் 289 பயணிகள் பயணம் செய்தனர். இன்று அதிகாலையில் விமானம், கொழும்புவை நெருங்கியபோது அங்கு மோசமான வானிலை நிலவியது. விமானத்தை தரையிறக்க முடியாத நிலை ஏற்பட்டதால் இந்தியாவின் திருவனந்தபுரத்திற்கு திருப்பிவிடப்பட்டது. திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதி கிடைத்ததும் காலை 6.51 மணிக்கு விமானம் தரையிறக்கப்பட்டது. பயணிகள் பத்திரமாக இறக்கப்பட்டனர். கொழும்பில் வானிலை சீரடைந்ததும் … Read more

விராட், ரோகித் செய்ததை மறந்து விடக்கூடாது – இந்திய முன்னாள் வீரர் ஆதரவு

மும்பை, ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்த இந்திய அணி, 10 ஆண்டுக்கு பிறகு ‘பார்டர் – கவாஸ்கர்’ கோப்பையை பறிகொடுத்தது. அத்துடன் முதல் முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பையும் இழந்தது. இந்த தொடரில் சீனியர் வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோரது செயல்பாடு மெச்சும்படி இல்லை. டெஸ்டில் ரோகித் சர்மா கடைசி 15 இன்னிங்சில் 164 ரன் மட்டுமே எடுத்து … Read more