திருப்பதி அருகே விபத்து: ஆம்புலன்ஸ் மோதி 3 பெண் பக்தர்கள் உயிரிழப்பு

ஆம்புலன்ஸ் மோதியதில் 3 பெண் பக்தர்கள் உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், புங்கனூரில் இருந்து ஒரு குழுவினர் மஞ்சள் ஆடை தரித்து ஏழுமலையானை தரிசிக்க திருமலைக்கு புறப்பட்டனர். இவர்கள் கும்பலாக பீலேர் பகுதி வழியாக நந்து வந்து கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை இந்த குழுவினர் திருப்பதி அருகே சந்திரகிரி மண்டலம், நரசிங்காபுரம் எனும் இடத்தில் வரிசையாக நடந்து வந்து கொண்டிருந்தனர். அதே சமயம், மதனபல்லியில் இருந்து அவசர அவசரமாக 108 எண் கொண்ட ஆம்புலன்ஸ் திருப்பதி … Read more

HMPV Virus | பொது இடங்களில் மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும் -தமிழக அரசு உத்தரவு

HMPV Virus Guidelines In Tamil Nadu: மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மாஸ்க் அணிய வேண்டும் என்றும் ஹெச்.எம்.பி.வி. வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில் பொதுமக்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.

தமிழக சட்டப்பேரவையின் புத்தாண்டு கூட்டத்தொடர் 11ந்தேதி வரை நடைபெறும்! சபாநாயகர் அப்பாவு

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் புத்தாண்டு கூட்டத்தொடர் 11ந்தேதி வரை நடைபெறும்  என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் ஜனவரி 6ந்தேதி ஆளுநர் உரையுடன் தொடங்குவதாக அறிவித்த நிலையில்,  சட்டசபையின் நிகழ்வில் பங்கேற்ற ஆளுநர், தேசியகீதம் இசைக்கவில்லை என கூறி, அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். இதையடுத்து, சபாநாயகர் ஆளுநர் உரையை வாசித்தார். பின்னர்,  சட்டமன்ற அலுவல் ஆய்வு குழு கூடி, பேரவை எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை முடிவு செய்தது. இதையடுத்து … Read more

`விசிக எம்.பி-க்கு அம்பேத்கர் விருது' – எதிர்க்கும் தமிழ்ப்புலிகள் கட்சி… சொல்வதென்ன?

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமாருக்கு தமிழக அரசின் அம்பேத்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது சமூக, அரசியல் தளத்தில் ஆதரித்தும், விமர்சிக்கப்பட்டும் வருகிறது. ரவிக்குமார் எம்.பி விசிக, கம்யூனிஸ்டுகளைத் தொடர்ந்து காங்கிரஸ்… மதுரையில் கலெக்டருக்கு எதிராக குற்றச்சாட்டு ஏன்? “அருந்ததியர் சமூகத்தினருக்கு கலைஞர் ஆட்சியில் வழங்கிய உள் ஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் உறுதி செய்த நிலையில், அதை விமர்சித்தும், அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய மத்திய அரசை வலியுறுத்தியும் வந்த ரவிக்குமாருக்கு … Read more

சென்னை | அதிமுக மாணவர் அணியினர் கைது

சென்னை: பொறியியல் மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து அண்ணா பல்கலைக்கழகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட முயன்ற அதிமுக மாணவர் அணியினரை போலீஸார் கைது செய்தனர். அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் 2-ம் ஆண்டு மாணவி பாலியல் கொடுமைக்கு ஆளான சம்பவத்தைக் கண்டித்து அண்ணா பல்கலைக்கழகம் முன்பு நேற்று காலை அதிமுக மாணவர் அணி செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் தலைமையில் 150-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்களின் போராட்டத்துக்கு போலீஸார் அனுமதி வழங்கவில்லை. எனவே, தடையை … Read more

பாலாற்றின் குறுக்கே மீண்டும் தடுப்பணைகள் கட்டப்படும்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திட்டவட்ட அறிவிப்பு

குப்பம்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது குப்பம் தொகுதிக்கு 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று சென்றார். குப்பம் திராவிட பல்கலைக்கழக வளாகத்தில் ‘சுவர்ண குப்பம் விஷன் -2029’ எனும் நிகழ்ச்சியில் பங்கேற்ற சந்திரபாபு நாயுடு பேசியதாவது: ஆந்திராவுக்கு நான் முதல் வராக இருந்தாலும், குப்பம் தொகுதி மக்களுக்கு நான் எம்.எல்.ஏ.தான். என்னை 8 முறை தொடர்ந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுத்துள்ளீர்கள். உங்களுக்கு என் வாழ்நாள் முழுவதும் நன்றிக் கடன் பட்டுள்ளேன். கடந்த ஆட்சியினரின் காழ்ப்புணர்வால் கடந்த 5 … Read more

மீண்டும் ஜீவி பிரகாஷ் உடன் ஜோடி சேரும் திவ்ய பாரதி! வெளியானது பர்ஸ்ட் லுக்!

ஜீ ஸ்டுடியோஸ் – பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் கூட்டணியில் தயாராகும் ‘கிங்ஸ்டன்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி உள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் இதனை வெளியிட்டார்.

கேரளாவை போல சென்னையிலும் உணவகத்துடன் மிதவை படகுகள்! எங்கு தெரியுமா?

Chennai Boat House: கேரளாவில் உள்ள பிரபலமான படகு இல்லங்களைப் போலவே, சென்னையிலும் தற்போது அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த படகு இல்லங்களுக்கு சென்று மகிழலாம்.

Trisha: `மலையாள சினிமா மீது பெரிய மரியாதை இருக்கு..!’ – த்ரிஷா

மலையாள நடிகர் டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடித்து, த்ரிஷா மற்றும் வினய் ஆகிய மூவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து ஜனவரி 2-ம் தேதி வெளியான திரைப்படம் தான் ஐடென்டிட்டி (IDENTITY). க்ரைம் த்ரில்லர் பாணியிலான இந்த திரைப்படம் வெளியானது முதலே ரசிகர்களிைடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை படக்குழுவினர் பத்திரிகையாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்வில் பேசிய நடிகை த்ரிஷா, ” நான் இதுக்கு முன்னாடி நிறைய படங்கள் வெளியீட்டின் போது … Read more

அசாம் நிலக்கரி சுரங்க வெள்ளத்தில் சிக்கிய 15 நபர்கள்

திமா ஹசோவா அசாம் மாநில நிலக்கரி சுரங்கத்தில் வெள்ளம் புகுந்து 15 பேர் சிக்கி உள்ளனர். அசாம் மாநிலத்தின் மலைப்பிரதேச மாவட்டங்களில் ஒன்றான திமா ஹசாவோவில் உள்ளடங்கிய பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு நிலக்கரி சுரங்கத்தில் வெள்ளம் புதுந்ததால், வேலை செய்து வந்த தொழிலாளர்களில் 15 பேர் வெளியே வர முடியாமல் சிக்கி கொண்டனர். அக்க்கு வேலை செய்து வந்த ஒரு சிலர் சுரங்கத்தில் இருந்து தப்பி வெளியே வந்து சுரங்க உரிமையாளர் மற்றும் உள்ளூர் போலீசாரிடம் … Read more