சித்ரவதை செய்த மனைவிக்கு பாடம் புகட்டுங்கள்: வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்த கணவர்

போதாத்: குஜராத்தின் போதாத் மாவட்டம் ஜம்ரலா கிராமத்தைச் சேர்ந்த 39 வயது நபர், கடந்த மாதம் 30-ம் தேதி தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். அவர் தனது செல்போனில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் தனது இறப்புக்கு காரணமான மனைவிக்கு பாடம் புகட்டுங்கள் என தனது குடும்பத்தினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதையடுத்து இறந்தவரின் தந்தை போலீஸில் புகார் அளித்தார். அதில், “தனது மகனிடம் மருமகள் அடிக்கடி சண்டையிட்டு அவரது தாய் வீட்டுக்கு … Read more

2025 பொங்கலுக்கு மாஸான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!

Pongal Holiday: ஜனவரி 14 பொங்கல் விழா வரவுள்ள நிலையில், ஜனவரி 17ம் தேதி கூடுதல் விடுமுறையை அரசு அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்களை மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

திடீர் ஓய்வை அறிவித்த இந்திய அணி முக்கிய ஆல்-ரவுண்டர்! ரசிகர்கள் அதிர்ச்சி!

இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரிஷி தவான் வைட் பால் கிரிக்கெட்டில் இருந்து மட்டும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஹிமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்தவர் கிரிக்கெட் வீரர் ரிஷி தவான். தற்போது  34 வயதான அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து முழுவதுமாக ஓய்வு பெறாமல் வைட் பால் கிரிக்கெட்டில் இருந்து மட்டும் ஓய்வை அறிவித்துள்ளார். உள்நாட்டு கிரிக்கெட்டில் பல சாதனைகள் படைத்துள்ளார். இதுவரை ரிஷி தவான் சர்வதேச அளவில் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு டி20 போட்டி … Read more

இன்று மதுரை ஜல்லிக்கட்டு போட்டி ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்

மதுரை இன்று ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஆனலைன் முன்பதிவு தொடங்குகிறது. அவனியாபுரத்தில் வருகிற 14-ந்தேதியும், பாலமேட்டில் 15-ந்தேதியும், அலங்காநல்லூரில் 16-ந் தேதியும் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கின்றன. ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தக்கால் நடப்பட்டு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. ஜல்லிக்கட்டுகான வழிகாட்டு நெறிமுறைகள் : அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய 3 இடங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று … Read more

‘‘உழைக்கும் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த தவறிவிட்டன’’ – திராவிட கட்சிகள் மீது சிபிஎம் விமர்சனம்

சென்னை: தமிழகத்தில் அரைநூற்றாண்டாக ஆட்சி செய்யும் திராவிட கட்சிகள் சமூக சீர்திருத்தங்களில் சாதித்தன; ஆனால் உழைக்கும் மக்கள் வாழ்க்கையை மேம்படுத்த தவறிவிட்டன என்று சிபிஎம் விமர்சித்துள்ளது. இதுகுறித்து இன்று இக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ”தமிழகத்தில் தொழிலாளர்கள் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள், நடுத்தர மக்கள், இளைஞர்கள், பெண்கள், மாற்று பாலினத்தவர் உள்ளிட்ட உழைக்கும் மக்கள் அனைவரின் வாழ்க்கை மேம்பாட்டிற்கு இடதுசாரி கொள்கைகளே சரியான மாற்றாக அமைய முடியும். சமூகத்தின் மேல் தட்டில் இருக்கும் ஒரு சிறு … Read more

டெல்லியில் ரூ.12,200 கோடியில் வளர்ச்சி திட்டங்கள்: பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்

புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மியின் ஊழல் ஆட்சி அகற்றப்படும். பாஜக ஆட்சியைக் கைப்பற்றும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் நமோ பாரத் ரேபிட் ரயில் சேவை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி சுமார் 100 கி.மீ. முதல் 250 கி.மீ. தொலைவில் உள்ள நகரங்கள் இணைக்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தின்படி தலைநகர் டெல்லி, உத்தர பிரதேசத்தின் மீரட் நகரங்களுக்கு இடையிலான வழித்தடத்துக்கு கடந்த 2019-ம் ஆண்டு … Read more

கிங்ஸ்டன் கல்லூரியில் 44 மணி நேர சோதனை நிறைவு: ஆவணங்கள், ஹார்டு டிஸ்குகளுடன் சென்ற அதிகாரிகள்

வேலூர்: காட்பாடி கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வந்த அமலாக்கத்துறை அதிகாரிகளின் சோதனை 44 மணி நேரத்துக்கு பிறகு முடிவுற்றது. நள்ளிரவில் ஆவணங்கள், ஹார்டு டிஸ்குகளுடன் 8 கார்களில் அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர். அமைச்சர் துரைமுருகன் வீடு, கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி மற்றும் திமுக பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன் வீடு உள்ளிட்ட நான்கு இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் 3-ம் தேதி காலை சோதனையில் ஈடுபட்டனர். இதில், பூஞ்சோலை சீனிவாசன் உள்ளிட்ட 2 இடங்களில் நடைபெற்ற 8 … Read more

தாவூத் இப்ராஹிமை கொல்வதை லட்சியமாக கொண்ட சப்னா தீதி இறந்தது எப்படி?

புதுடெல்லி: மும்பையில் பாரம்பரிய முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தவர் அஸ்ரப் என்று அழைக்கப்பட்ட சப்னா தீதி. இவர் மெஹ்மூத் கான் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், தனது கணவருக்கு நிழல் உலக தாதாக்களுடன் தொடர்பிருப்பது அப்போது அவருக்கு தெரியாது. மெஹ்மூத் கான் துபாய் சென்று திரும்பியபோது மும்பை ஏர்போர்ட்டில் வைத்து சப்னா கண் முன்பாகவே கூலிப்படை அவரை சுட்டுக் கொன்றது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சப்னா தனது கணவரின் சாவுக்கு யார் காரணம் என்பதை தேடி அலைந்தார். … Read more

மாநில செயலாளர் குற்றாலநாதனை உடனே விடுவிக்க இந்து முன்னணி வலியுறுத்தல்

சென்னை: “இந்து முன்னணி மாநில செயலாளர் கா.குற்றாலநாதன் கைது செய்யப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறோம். திமுக ஆட்சியில் கருத்து சுதந்திரம் கேள்விக்குறியாகி ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்படுகிறது” என அந்த அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கண்டித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “கடந்த நவம்பர் 25 ஆம் தேதி நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு அவரின் சம்மதமும் அவருடைய குடும்பத்தாரின் ஒப்புதலும் இல்லாமலேயே கருத்தடை சாதனமான காப்பர் டி-யைப் பொருத்தியுள்ளனர். … Read more