ஜஸ்பிரித் பும்ரா பந்துவீசுவாரா மாட்டாரா… காயத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

India National Cricket Team: இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு (India vs Australia) இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அதன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று (ஜன. 3) சிட்னி நகரில் தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 185 ரன்களையும், அடுத்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 181 ரன்கள் அடித்தது. 4 ரன்கள் முன்னிலை உடன் பேட்டிங் செய்த இந்திய அணி (Team … Read more

‘மது அருந்துதல் புற்றுநோயை உண்டாக்கும்’ என்ற எச்சரிக்கை மது பாட்டில்கள் மீது அவசியம்… அமெரிக்க சர்ஜன் ஜெனரல் விவேக் மூர்த்தி வலியுறுத்தல்…

‘மது அருந்துதல் புற்றுநோயை உண்டாக்கும்’ என்ற எச்சரிக்கை மதுபான பாட்டில்கள் மீது அவசியம் என்று அமெரிக்க அரசு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதிபர் ஜோ பைடன் அரசின் கீழ் உள்ள பொது சுகாதார துறையில் அமெரிக்க சர்ஜன் ஜெனரலாக செயலாற்றிவரும் விவேக் மூர்த்தி இதனை வலியுறுத்தியுள்ளார். “அமெரிக்காவில் புகை பிடிப்பது மற்றும் உடல் பருமனுக்கு அடுத்தபடியாக புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய மூன்றாவது முக்கிய காரணியாக மது அருந்துதல் உள்ளது” என்று விவேக் மூர்த்தியின் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. … Read more

“கல்லூரியில் படிக்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறியது'' -ஒருநாள் மாணவி நிகழ்ச்சியில் பெண்கள் நெகிழ்ச்சி

சேலம் மாவட்டம் அம்மாபேட்டையில் உள்ள சக்திகைலாஷ் தன்னாட்சி பெற்ற மகளிர் கல்லூரியில் பெண்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் இல்லத்தரசிகான “ஒரு நாள் மாணவி” என்ற திட்டத்தில் சுய தொழில், தற்காப்பு மற்றும் பல்வேறு விழிப்புணர்வு சம்மந்தபட்ட வகுப்பை கடந்த இரு நாள்கள் (02.01.2025மற்றும் 03. 01.2025) நடத்தினார்கள். “சேலத்தில் கல்லூரி படிப்பை தொடங்க முடியாத திருமணமான இல்லத்தரசிகள் பலர் எந்த ஒரு யுக்தியும் இல்லாமல் சுயதொழில் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் வீட்டிலே அடைந்து இருக்கிறார்கள். அவர்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்க … Read more

பெண்கள் மீதான வன்முறைகளை தடுத்து நிறுத்துக: மார்க்சிஸ்ட் மாநாட்டு தீர்மானங்கள்

விழுப்புரம்: ‘பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைகளை தடுத்து நிறுத்துக. தமிழக குழந்தைகள் நல ஆணையத்துக்கு தலைவரை நியமித்திட வேண்டும்’ என்று உள்ளிட்ட தீர்மானங்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாடு வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்த மூன்று நாள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் முக்கிய அம்சங்கள்: > வளங்கள் – வாழ்வாதாரங்களை பாதுகாப்போம். மதவெறியை வீழ்த்தி முற்போக்கு விழுமியங்களை முன்னெடுப்போம். பேரிடராக வளர்ந்து கொண்டிருக்கும் பாஜக மற்றும் … Read more

“மக்கள் பணத்தில் டெல்லியில் ரூ.45 கோடியில் மாளிகை” – கேஜ்ரிவால் மீது அமித் ஷா குற்றச்சாட்டு

புதுடெல்லி: மக்கள் பணத்தில் டெல்லியில் ரூ.45 கோடி செலவில் அரவிந்த் கேஜ்ரிவால் தனக்காக மாளிகை கட்டியுள்ளார் என்றும், அதற்கு அவர் பதில் சொல்ல வேண்டும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். டெல்லியில் பெண்களுக்கான சுஷ்மா விடுதி திறப்பு விழாவில் பேசிய அமித் ஷா, “பாஜகவின் சிறந்த தலைவராக சுஷ்மா எப்போதும் நினைவுகூரப்படுவார். தேசிய ஜனநாயாகக் கூட்டணியின் முதல் மற்றும் இரண்டாம் அரசாங்கங்களில் முக்கிய துறைகளின் அமைச்சராக அவர் இருந்துள்ளார். நமது நாட்டின் ஜனநாயக … Read more

வசதிகளை வாரி வழங்கும் வோடபோன் ஐடியா… ஒரு வருஷத்திற்கு உங்களுக்கு கவலையே வேணாம்!

Vodafone Idea Superhero Benefits Yearly Recharge Plan: இந்திய தொலைத்தொடர்பு சேவை துறையில் ஜியோ, ஏர்டெல் ஆகிய நிறுவனங்களுக்கு அடுத்து மூன்றாவது பெரிய நிறுவனமாக வோடபோன் ஐடியா உள்ளது. சுமார் 2.20 கோடி வாடிக்கையாளர்கள் கொண்ட வோடபோன் ஐடியா நிறுவனம், 4ஜி இணைய சேவையை தொடர்ந்து தற்போது 5ஜி சேவையை தொடங்கி இருக்கிறது. முதற்கட்டமாக, 5ஜி இணைய சேவையை சில தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் மட்டும் கொண்டுவரப்பட உள்ளது. தொடர்ந்து அதனை பல்வேறு நகரங்களுக்கு நீட்டிக்கும் வேலைகளும் … Read more

விண்வெளியில் துளிர்த்த காராமணி… விண்வெளி பயிர் பரிசோதனையில் முளைவிட்ட இஸ்ரோவின் நம்பிக்கை

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோ கடந்த டிசம்பர் 30ம் தேதி விண்ணில் செலுத்திய PSLV-C60 ராக்கெட் சுமந்து சென்ற POEM-4 தளத்தில் ஆய்வுக்காக கொண்டுசெல்லப்பட்ட காராமணி விதைகள் (Cowpea seeds) முளைவிட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. நுண் புவியீர்ப்பு விசையில் தாவர வளர்ச்சியை ஆய்வு செய்ய, சுற்றுப்பாதை தாவர ஆய்வுகளுக்கான காம்பாக்ட் ஆராய்ச்சி தொகுதி (CROPS) பரிசோதனையின் ஒரு பகுதியாக, விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் (VSSC) மூலம் இஸ்ரோ நிறுவனம் எட்டு Cowpea விதைகளை அனுப்பியது. … Read more

சமூக வலைதளத்தில் பழக்கம்; 500 பெண்களிடம் பணம் பறித்த 23 வயது இளைஞர்… பகீர் பின்னணி!

Delhi: டெல்லியைச் சேர்ந்த 23 வயது இளைஞர் துஷார் பிஷ்ட், சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்தி பல பெண்களை ஏமாற்றி, அவர்களிடம் பணம் பறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துஷார் பிஷ்ட், பிரேசிலிய மாடலின் புகைப்படத்தை பயன்படுத்தி, தன்னை அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு வந்த மாடலாக காட்டிக் கொண்டு, பம்பிள், ஸ்னாப்சாட் போன்ற ஆப்களில் 18 முதல் 30 வயதுடைய பெண்களுடன் நட்புடன் பழகியுள்ளார். அந்தப் பெண்களின் நம்பிக்கையைப் பெற்று, அவர்களிடம் நெருக்கமாக பழகி, தனிப்பட்ட … Read more

விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து: போர்மேன், மேற்பார்வையாளர் கைது

விருதுநகர்: விருதுநகர் அருகே பொம்மையாபுரம் கிராமத்தில் சாய்நாத் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 அறைகள் தரைமட்டமானதில் 6 பேர் உயிரிழந்தனர்.விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வரும் காவல் துறையினர், ஆலையின் போர்மேன் மற்றும் மேற்பார்வையாளரை கைது செய்துள்ளனர். விருதுநகர் அருகே பொம்மையாபுரம் சாய்நாத் பட்டாசு ஆலையில் இன்று காலை ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து வருவாய்த் துறையினர் நடத்திய விசாரணையில், சாய்நாத் பட்டாசு ஆலை உள்ள இடம் … Read more

‘தடிகளுடன் பயிற்சி அளிப்பது ஏன்?’ – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் விளக்கம்

புதுடெல்லி: ஆர்எஸ்எஸ் அமைப்பினருக்கு தடிகளுடன் பயிற்சி அளிப்பது குறித்து அந்த அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் விளக்கம் அளித்துள்ளார். இந்துத்துவாவின் தலைமை அமைப்பாக இருப்பது ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் (ஆர்எஸ்எஸ்). இதன் தொண்டர்களுக்காகா, ‘கோஷ் வதன் (தெளிவான அழைப்பு)’ எனும் பயிற்சி முகாம் மத்தியப் பிரதேசம் இந்தூரில் நடைபெறுகிறது. தசரா மைதானத்தில் நடைபெற்ற முகாமில் சுமார் 1,000 தொண்டர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் இடையே ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் உரையாற்றினார். தனது உரையில் அவர், இந்தியாவின் … Read more