சர்வதேச கிரிக்கெட்டில் ரோகித் சர்மாவின் கடைசி டெஸ்ட் போட்டி? கவாஸ்கர் ரியாக்ஷன்

Rohit Sharma Retirement | இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிட்னியில் நடைபெறும் கடைசி டெஸ்ட் போட்டியில் அதிரடியாக அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மிகவும் மோசமான பேட்டிங் பார்மில் இருக்கும் அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என விமர்சனங்கள் எழுந்த நிலையில், இந்திய அணி நிர்வாகம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் இந்திய அணிக்கு கேப்டன் பொறுப்பை ஜஸ்பிரித் பும்ரா ஏற்றுள்ளார். பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் பெர்த் … Read more

MadhaGajaRaja: 12 வருட காத்திருப்புக்கு… மதகஜராஜாவின் ரிலீஸ் தேதியை அறிவித்த சந்தானம்!

விஷாலின் ‘மதகஜராஜா’ படத்தின் ரிலீஸ் தேதியை நடிகர் சந்தானம் அறிவித்திருக்கிறார். கடந்த 2012ஆம் ஆண்டு சுந்தர்.சி.யின் இயக்கத்தில் விஷால், சந்தானம், வரலட்சுமி, சதீஷ், நிதின் சத்யா, சோனுசூட் தவிர மறைந்த நடிகர்கள் மணிவண்ணன், மனோபாலா, மயில்சாமி, சிட்டிபாபு உள்ளிட்டோர் நடிப்பில் எடுக்கப்பட்ட படம் ‘மதகஜராஜா’. ஜெமினி ஃபிலிம் சர்கியூட் நிறுவனம் தயாரித்த இப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருந்தார். ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்திருந்தார். மதகஜராஜா நடிகை சதா ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். இந்தப் படம் 2012-ம் … Read more

iPhone 16E …. விரைவில் வருகிறது ஆப்பிளின் பட்ஜெட் ஐபோன்… லேடஸ்ட் அப்டேட் இதோ

iPhone SE 4/ iPhone 16E: பிரீமியம் வகை போன்களில் முதலிடம் வகிக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களை வாங்குவது என்பது பலரின் கனவாக இருக்கும். ஐபோன்கள் வைத்திருப்பது பெருமை தரும் விஷயமாக பார்க்கப்படுவதே இதற்கு காரணம். எனினும், ஐபோன்களின் விலை உச்சத்தில் இருப்பதால் எல்லோராலும் வாங்க முடியும் நிலையில் இருப்பதில்லை. பட்ஜெட் போன் வாங்க நினைப்பவர்களுக்கு சந்தோஷத்தை கொடுக்கும் வகையில் ஆப்பிள் பட்ஜெட் விலையில், தனது புதிய iPhone SE வகை போன்களை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக … Read more

‘நீதி கேட்பு பேரணி’: தடை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட குஷ்பு உள்பட பாஜக மகளிர் அணியினர் கைது

மதுரை:  தடை மீறி போராட்டத்தில் ‘நீதி கேட்பு பேரணி’யில் ஈடுபட்ட குஷ்பு உள்பட பாஜக மகளிர் அணியினர் கைது செய்யப்பட்டனர். முன்னதாக பல பாஜக மகளிர் அணி நிர்வாகிகளை காவல்துறை வீட்டுக்காவலில் வைத்துள்ளதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்தார். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்புணர்வு விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவும், குற்றவாளிகளை கைது செய்யவும் வலியுறுத்தி பாஜக மகளிர் அணி சார்பில் மதுரை டூ சென்னை  ‘நீதி கேட்பு பேரணி’ அறிவிக்கப்பட்டது. … Read more

'இந்தியா' கூட்டணியில் சேருமாறு நிதிஷ்குமாருக்கு லாலுபிரசாத் 'திடீர்' அழைப்பு

பாட்னா, கடந்த 2013-ம் ஆண்டு பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார், பா.ஜனதாவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகினார். லாலுபிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்டிரீய ஜனதாதளத்துடன் இணைந்து மீண்டும் முதல்-மந்திரி ஆனார். 2017-ம் ஆண்டு, ராஷ்டிரீய ஜனதாதள உறவை துண்டித்துக் கொண்டு, மீண்டும் பா.ஜனதாவுடன் கைகோர்த்தார். 2022-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் மீண்டும் பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகி, லாலுவின் கட்சியுடன் கூட்டணி சேர்ந்தார். கடந்த ஆண்டு ஜனவரி மாதம், மீண்டும் பா.ஜனதாவுடன் கைகோர்த்தார். இப்படி 10 … Read more

ரிஷப் பண்டை 'முட்டாள்' என விமர்சித்தது ஏன்..? கவாஸ்கர் விளக்கம்

மெல்போர்ன், இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 4 போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் டெஸ்ட் சிட்னியில் இன்று தொடங்கியது. முன்னதாக இந்த தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார். கடந்த முறை … Read more

தெற்கு சாண்ட்விச் தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவு

சாண்ட்விச் தீவு, தெற்கு அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் தெற்கு சாண்ட்வீச் தீவு அமைந்து உள்ளது. இந்த தீவில் இன்று காலை 8.33 மணியளவில் திடீரென சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவாகி உள்ளது. இந்நிலநடுக்கம் 95 கி.மீ. ஆழம் கொண்ட இந்த நிலநடுக்கம், 56.29 டிகிரி தெற்கு அட்சரேகையிலும், 93.34 டிகிரி மேற்கு தீர்க்கரேகையில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பாக உடனடி தகவல் எதுவும் … Read more

மகாராஷ்டிரா: வேகத்தடை மீட்டுக்கொடுத்த உயிர்? – நடந்தது என்ன?

இறந்ததாக அறிவிக்கப்பட்டவர்கள் சிலநேரங்களில் உயிரோடு எழுவதுண்டு. மகாராஷ்டிராவில் அதுபோன்ற ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. மேற்கு மகாராஷ்டிராவில் உள்ள கோலாப்பூர் மாவட்டம் கசபா என்ற இடத்தை சேர்ந்தவர் பாண்டுரங்(65). கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு திடீரென பாண்டுரங்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனே உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் அவருக்கு டாக்டர்கள் சிகிச்சையளித்து பார்த்தனர். ஆனால் பின்னர் அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் அறிவித்தனர். இதையடுத்து உறவினர்கள் அவரது உடலை ஆம்புலன்ஸ் ஒன்றில் ஏற்றிக்கொண்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். … Read more

வேலூரில் அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை

வேலூர்: வேலூரில் தமிழக நீர்வளம் மற்றும் கனிமவளத் துறை அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத் துறையினர் இன்று (வெள்ளிக்கிழமை) சோதனை நடத்தி வருகின்றனர். காட்பாடி காந்திநகரில் உள்ள அமைச்சரின் வீடு, மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான பொறியியல் கல்லூரி வளாகம், அமைச்சரின் நம்பிக்கைக்குரிய பூஞ்சோலை சீனிவாசன் அவரது உறவினர் வீடு உள்பட 4 இடங்களில் சோதனை நடைபெறுகிறது. அமைச்சர் துரைமுருகனும், எம்.பி. கதிர் ஆனந்தும் இப்போது வேலூர் வீட்டில் இல்லாததால் அதிகாரிகள் வெளியில் காத்திருக்கின்றனர். சோதனையின் பின்னணி … Read more

ராகுல் மீதான வழக்கில் மனுதாரரிடம் குறுக்கு விசாரணை

சுல்தான்பூர்: கடந்த 2018-ம் ஆண்டு கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது “அமைச்சர் அமித் ஷா கொலை வழக்கின் குற்றவாளி” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். இதை எதிர்த்து பாஜக மூத்த தலைவர் விஜய் மிஸ்ரா, உத்தர பிரதேசத்தின் சுல்தான்பூரில் உள்ள எம்பி, எம்எல்ஏக்களுக்கான நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு சுல்தான்பூர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் விஜய் மிஸ்ராவிடம் ராகுல் காந்தியின் … Read more