தமிழ்நாட்டில் ஒரு லட்சம் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பங்கள் நிராகரிப்பு – ஏன் தெரியுமா

Ration Card | தமிழ்நாட்டில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய ரேஷன் கார்டு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 

கோவையில் பரபரப்பு: கேஸ் டேங்கர் லாரி விபத்தால் – பள்ளிகளுக்கு விடுமுறை, அருகே உள்ள பொதுமக்கள் வெளியேற்றம்…

கோவை: கோவையில் கேஸ் டேங்கர் லாரி விபத்தால், லாரியில் இருந்து கேஸ் வெளியாகி வருவதால், அருகே பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளதுடன், அந்த பகுதியில் உள்ள  பொதுமக்கள்  வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். கேரளா மாநிலம் கொச்சியில் இருந்து கோவைக்கு எல்பிஜி கேஸ் ஏற்றிக் கொண்டு டேங்கர் லாரி வந்தது. கோவை கணபதி பகுதியில் உள்ள குடோனுக்கு சென்று கொண்டிருந்த போது, உப்பிலிபாளையம் மேம்பாலத்தில், கட்டுப்பாட்டை இழந்த லாரி தலை குப்புற கவிழ்ந்தது.  கோவை உப்பிலிபாளையம் அவிநாசி … Read more

சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கிய பிரசாந்த் கிஷோர்

பாட்னா, பீகார் மாநில அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் கடந்த மாதம் 13-ந்தேதி போட்டித்தேர்வு நடந்தது. இதில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்துமாறு பிரபல தேர்தல் வியூக நிபுணரும், ஜன சுராஜ் கட்சித்தலைவருமான பிரசாந்த் கிஷோர் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை நேற்று தொடங்கினார். அப்போது அவர் கூறியதாவது:- டிச.,13ல் நடந்த தேர்வை ரத்து … Read more

அஸ்வினை இந்திய அணி நிர்வாகம் அப்படி கருதியது நியாயமற்றது – கும்ப்ளே ஏமாற்றம்

மும்பை, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து சமீபத்தில் விடைபெற்றார். டெஸ்டில் கும்பிளேவுக்கு (619 விக்கெட்) அடுத்தபடியாக அதிக விக்கெட் எடுத்த இந்தியர் என்ற பெருமைக்குரியவர். அத்துடன் 6 சதம், 14 அரைசதத்துடன் 3,503 ரன்களும் எடுத்துள்ளார். 116 ஒருநாள் போட்டியில் 156 விக்கெட்டும், 65 இருபது ஓவர் போட்டியில் 72 விக்கெட்டும் வீழ்த்தி இருக்கிறார். அப்படிப்பட்ட அவர் தற்போது நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் … Read more

காசா: ஹமாஸ் அமைப்பின் பாதுகாப்பு பிரிவு தலைவர் படுகொலை; இஸ்ரேல் அறிவிப்பு

ஜெருசலேம், தெற்கு காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பின் பாதுகாப்பு பிரிவின் தலைவராக செயல்பட்டு வந்தவர் ஹஸ்ஸம் ஷாவான். இந்நிலையில், நேற்றிரவு நடந்த ஆளில்லா விமான தாக்குதலில் அவர் கொல்லப்பட்டு விட்டார் என இஸ்ரேல் ராணுவம் இன்று அறிவித்து உள்ளது. இதுபற்றி இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டு உள்ள செய்தியில், கான் யூனிஸ் பகுதியில் மனிதாபிமான மண்டலத்தில் இருந்தபோது, ஷாவான் மீது தாக்குதல் நடந்துள்ளது என தெரிவித்து உள்ளது. காசாவில் இருந்து புலம்பெயர்ந்து சென்றுள்ள பாலஸ்தீனியர்கள் இந்த பகுதியில் தஞ்சம் … Read more

Delhi: 10 லட்சம் கேட்டு சித்திரவதை செய்தாரா மனைவி? பிரபல கஃபே உரிமையாளர் தற்கொலையின் பகீர் பின்னணி

மனைவி கொடுமைப்படுத்தியதற்காக டெல்லியைச் சேர்ந்த பிரபல கஃபே உரிமையாளர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. டெல்லியைச் சேர்ந்த கஃபே உரிமையாளர் புனித் குரானா. இவர் கடந்த 2016ஆம் ஆண்டு மனிகா ஜகதீஷ் பஹ்வா என்பவரைத் திருமணம் செய்துகொண்டிருக்கிறார். இருவரும் சேர்ந்து ஹோட்டலை நடத்தி வந்த நிலையில் அதை நிர்வகிப்பது தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் இருந்து வந்துள்ளது. இதற்கிடையே, அவர்களுடைய விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதனிடையே தனது மனைவி மனிகா பஹ்வா மற்றும் … Read more

குற்ற சம்பவங்களை குறைத்து காட்ட பொதுமக்கள் புகார்கள் மீது போலீஸார் எஃப்ஐஆர் பதிவு செய்வதில்லை: அண்ணாமலை

சென்னை: தமிழகத்தில் குற்ற சம்பவங்கள் அதிகரிக்கவில்லை என்பதை காட்ட பொதுமக்களின் புகார்கள் மீது போலீஸார் எஃப்ஐஆர் பதிவு செய்ய மறுக்கிறார்கள் என அண்ணாமலை தெரிவித்தார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகம் அனுமதி பூங்காவாக திகழ்வதாகச் சொல்கிறார். ஆனால், தேசிய குற்ற ஆவணகாப்பகத்தின் 2022-ம் ஆண்டு குற்ற தரவுகள் அறிக்கையில், 2021-ம் ஆண்டை காட்டிலும் தமிழகத்தில் 2022-ல் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 8.29 சதவீதம் அதிகரித்துள்ளன. குறிப்பாக, பாலியல் … Read more

கர்நாடக ஒப்பந்ததாரர் தற்கொலை வழக்கில் அமைச்சர் பிரியங்க் கார்கே பெயரை சேர்க்க பாஜக வலியுறுத்தல்

பெங்களூரூ: கர்நாடகாவில் ஒப்பந்ததாரர் தற்கொலை வழக்கில் அமைச்சர் பிரியாங்க் கார்கேவுக்கு தொடர்பு இருப்பதால் வழக்கில் அவரது பெயரை சேர்க்க வேண்டும் என மாநில‌ பாஜக தலைவர் விஜயேந்திரா வலியுறுத்தினார். கர்நாடக மாநிலம் குல்பர்காவில் உள்ள பல்கியை சேர்ந்தவர் சச்சின் பஞ்சால் (26). குல்பர்கா மாநகராட்சி ஒப்பந்ததாரரான இவர் கடந்த டிசம்பர் 26-ம் தேதி த‌ற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன் அவர் எழுதிய கடிதத்தில், “ஊரக வளர்ச்சி மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பிரியாங்க் கார்கேவுக்கு நெருக்கமான … Read more

அமெரிக்காவில் புத்​தாண்டு கொண்டாட்டத்தில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலில் உயிரிழப்பு 15ஆக உயர்வு

அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் புத்தாண்டு தினத்தில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்தது. அமெரிக்காவின் லூசியானா மாகாணம் நியூ ஆர்லியன்ஸ் நகரில் உள்ள பர்பன் தெருவில் கடந்த 1-ம் தேதி அதிகாலை புத்தாண்டு கொண்டாட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர். அப்போது ஒருவர் லாரியை ஓட்டி வந்து கூட்டத்தினர் மீது மோதி துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. தாக்குதல் நடத்திய நபரை போலீஸார் சுட்டுக் கொன்றனர். அவரது … Read more

வார ராசிபலன்:  03.01.2025  முதல்  09.01.2025 வரை! வேதாகோபாலன்

மேஷம் உடல் ஆரோக்கியம் மேம்படும். தேவையான பணவரவு உண்டு. சிலருக்கு வீண்செலவுகளும் ஏற்படக்கூடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். நீண்டநாளாகச் செல்ல நெனைச்ச புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீங்க. சிலருக்கு தெய்வப் பிரார்த்தனை களை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். சிலருக்கு பணியின் காரணமாக தற்காலிகமாகக் குடும்பத்தை விட்டுப் பிரிந்திருக்கக்கூடிய சூழ்நிலை ஏற்படும். உறவினர்கள் வருகையால் வீட்டில் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். திடீர்னு தேவையற்ற செலவுகள் ஏற்பட்டு மனதை சஞ்சலப் படுத்தும். பட் அந்த டென்ஷன் … Read more