ஜனவரி 8-ம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று முதல் வரும் 8-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் நெல்லை, மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பதிவாகியுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசைக் காற்றின் நிலவும் வேக மாறுபாடு காரணமாக, … Read more

டெல்லியில் பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

தலைநகர் டெல்லியில் பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார். டெல்லி அசோக் விஹாரில் குடிசை மறுவாழ்வு திட்டத்தின் கீழ் புதிதாக 1,675 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளன. இவற்றை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்து,பயனாளிகளுக்கு சாவிகளை வழங்குகிறார். டெல்லி நௌரோஜி நகரில் அமைக்கப்பட்டு உள்ள உலக வர்த்தக மையம் மற்றும் சரோஜினி நகரில் 2,500 வீடுகள் கொண்ட பொதுத் தொகுப்பு குடியிருப்புகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். டெல்லி துவாரகாவில் … Read more

மான்டேனேக்ரோ மது விடுதியில் நடந்த மோதலில் 12 பேர் சுட்டுக் கொலை

தென்கிழக்கு ஐரோப்பிய நாடான மான்டேனேக்ரோவின் செடின்ஜே நகரில் உள்ள மதுபான விடுதியில் நடந்த வாய்த் தகராறு மோதலாக மாறியதில் 12 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். துப்பாக்கி சூடு நடத்தியவரும் தற்கொலை செய்துகொண்டார். மான்டேனேக்ரோ நாட்டின் செடின்ஜே நகரில் மதுபான விடுதி ஒன்று உள்ளது. இங்கு அகோ மார்டினோவிக் (45) என்பவர் தனது நண்பர்களுடன் மது அருந்த வந்தார். அவர் நாள் முழுவதும் மது அருந்திக் கொண்டிருந்தார். இதனால் விடுதி உரிமையாளருக்கும் அகோ மார்டினோவிக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. … Read more

உத்தரப்பிரதேசத்தில் 44 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த கோவில் திறப்பு

தவுலதாபாத் உத்திரப்பிரதேச மாநிலத்தில் 44 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த கோவில்000 தற்போது திறக்கப்பட்டுள்ளது. பாஜக அரசு உத்தரபிரதேச மாநிலத்தில் மூடப்பட்டு கிடக்கும் கோவில்களை வழிபாட்டிற்கு திறக்கும் முயற்சியில் ஈடுபடுள்ளது. இதில் ஒரு பகுதியாக் மொரதாபாத் மாவட்டத்தில் தவுலதாபாக் பகுதியில் உள்ள ஒரு கோவில் 44 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று மீண்டும் திறப்பு விழா கண்டது. இந்த க் கோவில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக மூடப்பட்டு அரசு நிர்வாக முயற்சியின் மூலம் மீண்டும் திறக்கப்பட்டு உள்ளது. இந்த … Read more

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை; ஸ்பிரே, அலாரம் கருவியை வைத்துக்கொள்ள வேண்டும்: இபிஎஸ் அறிவுரை

திமுக ஆட்சியில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை. எனவே வெளியில் செல்லும்போது தற்காப்புக்காக ஸ்பிரே, அலாரம் கருவி உடன் வைத்திருக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த வாரம் அண்ணா பல்கலைக்கழக மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கைது செய்யப்பட்டவர், திமுக நிர்வாகி. அவருடன் பேசிய ‘அந்த சார் யார்?’ என்பதை இதுவரை இந்த ஆட்சியாளர்கள் கண்டுபிடிக்கவில்லை. இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் அனைவரையும் … Read more

போபால் விஷவாயு விபத்து ஏற்பட்டு 40 ஆண்டுக்குப் பிறகு யூனியன் கார்பைடு ஆலையிலிருந்து நச்சுக்கழிவுகள் அகற்றம்

மத்திய பிரதேச மாநிலத்தில் யூனியன் கார்பைடு ஆலையில் விஷவாயு கசிந்து விபத்து ஏற்பட்டு 40 ஆண்டுகளுக்குப் பிறகு அங்கிருக்கும் நச்சுக்கழிவுகளை அகற்றும் பணி நேற்றுமுன்தினம் தொடங்கியது. மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த 1984-ம் ஆண்டு டிசம்பர் 2-3 இடைப்பட்ட இரவில் யூனியன் கார்பைடு பூச்சிக்கொல்லி ஆலையிலிருந்து அதிக நச்சுத்தன்மை வாய்ந்த மெத்தில் ஐசோசயனைட் (எம்ஐசி) வாயு கசிவு ஏற்பட்டதில் 5,479 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் நீண்ட கால உடல்நலப் பிரச்சினைக்கு ஆளாகினர். இது, உலகின் மிக மோசமான … Read more

சென்ற ஆண்டு திருப்பதி கோவில் உண்டியலில் ரூ. 1365 கோடி வசூல்

திருப்பதி கடந்த 2024 ஆம் ஆண்டு திருப்பதி கோவில் உண்டியல் மூலம் ரூ.1365 கோடி கிடைத்துள்ளது. தினந்தோறும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அதிலும் குறிப்பாக விசேஷ நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து காணப்படும். கோவிலுக்கு வரும் பக்தர்கள் திருப்பதியில் உண்டியல் காணிக்கையாக பணம், நகை, ஆபரணங்கள் உள்ளிட்டவற்றை செலுத்துகின்றனர். கடந்த 2024-ம் ஆண்டில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் … Read more

புதிய கியா சிரோஸ் முன்பதிவு துவங்கியது..!

இந்தியாவில் கியா நிறுவனத்தின் புதிய சிரோஸ் எஸ்யூவி மாடலுக்கான முன்பதிவு ஜனவரி 3, 2025 முதல் துவங்குகிறது. முன்பதிவு கட்டணமாக ரூபாய் 25 ஆயிரம் வசூலிக்கப்படும் நிலையில் விலை பிப்ரவரி 1 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. 4 மீட்டருக்கும் குறைந்த நீளம் கொண்ட காம்பேக்ட் எஸ்யூவி சந்தையில் சற்று மாறுபட்ட வித்தியாசமான டால்பாய் எஸ்யூவி வடிவமைப்பினை கொண்டிருக்கின்ற சிரோஸ் மாடலுக்கு போட்டியாக சொனெட், புதிய ஸ்கோடா கைலாக், எக்ஸ்யூவி 3XO, நெக்ஸான், பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ … Read more

ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற சவுமியா அன்புமணி கைது: எதிர்கட்சித் தலைவர்கள் கண்டனம்

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற பசுமைத் தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி கைது செய்யப்பட்டார். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமையைக் கண்டித்தும், அந்த மாணவிக்கு நீதி கிடைக்க வலியுறுத்தியும் பாமக மகளிரணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இதற்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. எனவே, தடையை மீறி போராட்டம் நடத்த பாமகவினர் … Read more

ஏமனில் மரண தண்டனையை எதிர்கொள்ளும் நிமிஷாவுக்கு துளிர்க்கும் நம்பிக்கை – ஈரான் அதிகாரி சொல்வது என்ன?

புதுடெல்லி: ஏமனில் கேரள செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற அந்நாட்டு அதிபர் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அவருக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவத் தயாராக இருப்பதாக ஈரான் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது, நம்பிக்கையை சற்றே துளிர்க்க வைத்துள்ளது. காசா போராட்ட குழுவுக்கு ஈரான் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், ஈரானுடன் இஸ்ரேல் ராணுவம் மோதல் போக்கு கொண்டுள்ளது. ஈரானுக்கு ஏமனைச் சேர்ந்த ஹவுத்தி போராட்டக் குழு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், ஹவுத்தி போராட்ட … Read more