ஏமனில் மரண தண்டனையை எதிர்கொள்ளும் நிமிஷாவுக்கு துளிர்க்கும் நம்பிக்கை – ஈரான் அதிகாரி சொல்வது என்ன?

புதுடெல்லி: ஏமனில் கேரள செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற அந்நாட்டு அதிபர் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அவருக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவத் தயாராக இருப்பதாக ஈரான் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது, நம்பிக்கையை சற்றே துளிர்க்க வைத்துள்ளது. காசா போராட்ட குழுவுக்கு ஈரான் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், ஈரானுடன் இஸ்ரேல் ராணுவம் மோதல் போக்கு கொண்டுள்ளது. ஈரானுக்கு ஏமனைச் சேர்ந்த ஹவுத்தி போராட்டக் குழு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், ஹவுத்தி போராட்ட … Read more

40 ஆண்டுகளுக்கு பிறகு போபாலில் 377 டன் விஷவாயு கழிவுகள் இடமாற்றம்

போபால் சுமார் 40 ஆண்டுகளுக்கு பிறகு போபாலில் 377 டன் விஷ வாயு கழிவுகள் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளன. 40 ஆண்டுகளுக்கு முன் மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் உள்ள யூனியன் கார்பைடு தொழிற்சாலை விஷ வாயு கசிவு ஏற்பட்டது. கடந்த 1984-ம் ஆண்டு டிசம்பர் 2 மற்றும் 3 ஆகிய நாட்களுக்கு இடைப்பட்ட இரவில் மெத்தில் ஐசோ சயனேட் என்ற வாயு கசிந்ததில் 5,479 பேர் வரை உயிரிழந்தனர். மேலும்  ஆயிரக்கணக்கானோர் தீவிர மற்றும் நீண்டகால … Read more

2025 ஏதெர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியாகின்றது..!

புதுப்பிக்கப்பட்ட வசதிகளுடன் கூடுதலான நிறங்கள் பெற்ற 2025 ஆம் ஆண்டிற்கான ஏதெர் எனர்ஜி நிறுவனத்தின் பிரபலமான 450X, 450S என இரண்டு மாடல்களும் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது. ஸ்கூட்டரின் அடிப்படையான டிசைனில் எந்த மாற்றங்களும் இருக்காது என எதிர்பார்க்கப்படும் நிலையில் கூடுதலாக டிராக்ஷன் கண்ட்ரோல் சில வசதிகள் பெறுவது உறுதியாகியுள்ள நிலையில், AtherStack 6 மென்பொருள் மேம்பாடு கொண்டிருக்கலாம். மற்றபடி, கூடுதலாக சில நிறங்கள் பெறக்கூடும். தற்பொழுது விற்பனையில் உள்ள 450s ஸ்கூட்டரில்  2.9Kwh மற்றும் 3.7Kwh … Read more

Moorthy-யால், Stalin-க்கு புது தலைவலி…தூங்கவிடாத அமைச்சர்கள்! | Elangovan Explains

இளங்கோவன் எக்ஸ்பிளைன்சில், ஆண்ட பரம்பரை என அமைச்சர் மூர்த்தி பேசியது. 500 அரசு பள்ளிகள் தனியாருக்கு தத்து கொடுக்கப்படுவதாக வரும் செய்தி. அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை என இந்த மூன்றும் இந்த புத்தாண்டிலும் பெரும் நெருக்கடியை மு.க ஸ்டாலின் அரசாங்கத்துக்கு கொடுத்து வருகிறது. குறிப்பாக கூட்டணி கட்சிகளே போர்க்கொடி தூக்க ஆரம்பித்துள்ளனர். அதை எப்படி சமாளிக்கிறார் ஸ்டாலின்?  முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும்.  Source link

புதுச்சேரியில் பாஜக அதிருப்தி எம்எல்ஏக்களை சமாதானம் செய்யும் முயற்சி தோல்வி!

புதுச்சேரி: பாஜக அதிருப்தி எம்எல்ஏக்களை சமாதானப்படுத்த முன்னாள் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் புதுச்சேரி வந்தார். அதிருப்தி எம்எல்ஏக்கள் அமைச்சர் பதவி கேட்டு போர்கொடி தூக்கினர். அதில் எதிர்ப்பும் கிளம்பியது. இதனால் சமாதான முயற்சி தோல்வி அடைந்தது. இந்நிலையில், முதல்வருடன் திடீர் சந்திப்பு நடந்தபோது எம்எல்ஏக்கள் செயல்பாட்டில் தனது நிலைப்பாட்டை ரங்கசாமி தெரிவித்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. என்.ஆர்.காங்கிரஸ் தலைவர், முதல்வர் ரங்கசாமி இக்கூட்டணிக்கு தலைமை வகிக்கிறார். … Read more

பஞ்சாப் விவசாயி உண்ணாவிரதத்தில் பி.ஆர்.பாண்டியன் பங்கேற்பு: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டுகோள்

புதுடெல்லி: பஞ்சாப் விவசாயி டல்லேவாலின் உண்ணாவிரதப் போராட்டத்தில் எஸ்கேஎம் என்பி தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் கலந்து கொண்டார். கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசிற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். சம்யுக்த்த கிசான் மோர்ச்சா(எஸ்கேஎம்) என்பி தலைவர் ஜக்ஜித் சிங் டல்லேவால், சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இப்போராட்டம், பஞ்சாப் மாநிலம் கண்ணூரி பார்டரில் 38-வது நாளாகத் தொடர்கிறது. இந்த போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில், எஸ்கேஎம் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளரான பி.ஆர்.பாண்டியன் அதில் கலந்து கொண்டார். இங்கு … Read more

2026 வரை மோடி ஆட்சி நீடிக்குமா? என்பது சந்தேகம் : சஞ்சய் ராவத்

மும்பை வரும்  2026 வரை மோடி ஆட்சி நீடிக்குமா என்பது சந்தேகம் என சஞ்சய் ராவ்த் தெரிவித்துள்ளார். சென்ற ஆண்டு நடந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்று தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை தக்கவைத்தது. ஆயினும் கடந்த காலங்களில் இருந்ததை போல் பா.ஜ.க.விற்கு தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை.  எனவே மத்தியில் பாஜக தற்போது கூட்டணி அரசு அமைத்துள்ளது. சிவசேனா(உத்தவ் தாக்கரே அணி) மூத்த தலைவர் சஞ்சய் … Read more

BGT: `இந்தியாவுக்கு 46 வருஷம், ஆஸி.க்கு 9 வருஷம்' -சிட்னியில் யாருடைய காத்திருப்பு முடிவுக்கு வரும்?

சிட்னி மைதானத்தில் நாளை தொடங்கும் நடப்பு பார்டர் கவாஸ்கர் தொடரின் கடைசி போட்டி, தொடரை கைப்பற்றப்போவது யார், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு ஆஸ்திரேலியா செல்லுமா, இந்தியாவின் 46 வருட காத்திருப்பு முடிவுக்கு வருமா அல்லது ஆஸ்திரேலியாவின் 9 வருட காத்திருப்பு முடிவுக்கு வருமா என்பதற்கு விடையாக இருக்கப்போகிறது. முதல்முறையாக 5 போட்டிகள் கொண்ட தொடராக நடத்தப்படும் இந்தத் தொடரில் நான்கு போட்டிகளின் முடிவில் 2 – 1 என ஆஸ்திரேலியா முன்னிலையில். பெர்த் மைதானத்தில் நடைபெற்ற … Read more

‘தமிழக அரசின் நிலைப்பாடு பாரபட்சமானது’ – பொங்கல் போனஸ் அறிவிப்புக்கு அரசு ஊழியர்கள் சங்கம் கண்டனம்

மதுரை: தமிழக அரசு ஊழியர்களுக்கு அறிவித்த போனஸ் ஏமாற்றம் தரும் அறிவிப்பாக உள்ளது என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் சு.தமிழ்ச்செல்வி, பொதுச் செயலாளர் சு.ஜெயராஜ ராஜேஸ்வரன் ஆகியோர் தெரிவித்தனர். இது குறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், “தமிழக அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ‘சி’ மற்றும் ‘ டி’ பிரிவைச் சேர்ந்த ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூ.3 ஆயிரம் கருணைத் தொகையும், தொகுப்பூதியம், சிறப்பு கால முறை சம்பளம் பெறும் பணியாளர்கள் மற்றும் … Read more

“கோழைத்தனமானது…” – நியூ ஆர்லியன்ஸ் தீவிரவாத தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம்

புதுடெல்லி: அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் நிகழ்த்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதல் கோழைத்தனமானது என பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “நியூ ஆர்லியன்ஸில் நிகழ்ந்த கோழைத்தனமான தீவிரவாத தாக்குதலை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். எங்கள் எண்ணங்களும், பிரார்த்தனைகளும் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பத்தினருடன் உள்ளது. இந்த துயரத்திலிருந்து அவர்கள் மீளும்போது அவர்களுக்கு வலிமையும் ஆறுதலும் கிடைக்கட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். என்ன நடந்தது? – அமெரிக்காவின் லூசியானா மாகாணம் … Read more