இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு சாத்தியம் இல்லை : கார்த்தி சிதம்பரம்

காரைக்குடி காங்கிரஸ் எம்பி கார்த்தி  சிதம்பரம் இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு சாத்தியம் இல்லை என தெரிவித்துள்ளார். நேற்று காரைக்குடியில்  கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களிடம், ” தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், போலீஸ் அதிகாரி வருணும் கடுமையான விமர்சனங்களில் ஈடுபடுவது ஏற்புடையதல்ல. தமிழகத்தின் தலைமை செயலாளரும், போலீஸ் டி.ஜி.பி.யும் இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இந்தியாவில் ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு சாத்தியம் இல்லை. அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவம் துயரமானது. விசாரணை முடிவதற்கு … Read more

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு வேளாங்கண்ணி தேவாலயத்தில் சிறப்பு வழிபாடு

நாகப்பட்டினம்: ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் 2025 புத்தாண்டு விழா நேற்று முன்தினம் இரவு வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் உட்டபட பல்லாயிரக்கணக்கானோர், பேராலய வளாகத்தில் உள்ள விண்மீன் ஆலயத்தில் குவிந்தனர். பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் மறையுரை நிகழ்த்தப்பட்டது. தொடர்ந்து, 2025-ம் … Read more

காஷ்மீரில் 2 தீவிரவாதிகளின் சொத்துகள் முடக்கம்

ஜம்மு: ஜம்மு காஷ்மீரின் ரஜவுரி மாவட்டத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு தப்பியோடிய 2 தீவிரவாதிகளின் சொத்துகளை போலீஸார் முடக்கியுள்ளனர். ஜம்மு காஷ்மீரின் ரஜவுரி மாவட்டம், பட்டியன்-தனமண்டி பகுதியை சேர்ந்த இஷ்தியாக் அகமது, ஜாகித் அலி கான் ஆகிய இருவரும் தேசவிரோத செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு தப்பியோடிய இவர்கள், அங்கிருந்து இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இருவருக்கும் சொந்தமான நிலங்களை வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் போலீஸார் நேற்று முன்தினம் முடக்கி வைத்தனர். … Read more

திருப்பாவை – பாடல் 18  விளக்கம்

திருப்பாவை – பாடல் 18  விளக்கம் மார்கழி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும்.  இந்த மாதத்தில் ஆண்டாள் பாடிய முப்பது பாடல்களே ‘திருப்பாவை’ என்று அழைக்கப்படுகிறது. இந்த பாடல்கள் ஆண்டாள் பாசுரம் என்றும் வழங்கப்படும். இந்த திருப்பாவை பாடல்கள் அனைவராலும் மார்கழி மாதத்தில் தினமும் பாடப்படும் முக்கிய பாடல்களாகும். அதிலும் திருமணம் ஆகாத பெண்கள் மார்கழியில் திருப்பாவை பாடுவது என்பது மிகவும் விசேஷம். அது அவர்களுக்கு நல்ல கணவனை பெற்றுத் தரும். அந்தவகையில், மார்கழி மாதத்தின் 18 … Read more

தமிழக மீனவர்கள் தாயகம் திரும்பினர்

ராமேசுவரம்: இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 20 பேர் தாயகம் திரும்பினர். இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க கடந்த மாதம் இந்திய வருகையின்போது, பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் இரு நாட்டு மீனவர்கள் பிரச்சினைகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. அதனடிப்படையில், இலங்கை நீதிமன்றங்களால் சிறை தண்டனை வழங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழக மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை தரப்பில் ஒப்புக்கொள்ளப்பட்டது. இதனடிப்படையில், இலங்கை சிறையிலிருந்து முதல்கட்டமாக விடுதலை செய்யப்பட்ட ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த … Read more

‘வளர்ந்த இந்தியா’வுக்கு கடினமாக உழைப்போம்: ஆங்கில புத்தாண்டில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி

புதுடெல்லி: வளர்ந்த இந்தியா கனவை நனவாக்க இன்னும் கடினமாக உழைப்போம் என புத்தாண்டு தினத்தில் பிரதமர் மோடி உறுதி எடுத்துள்ளார். புத்தாண்டை முன்னிட்டு பிரதமர் மோடி நேற்று வாழ்த்து செய்தி வெளியிட்டார். அதில் இந்தாண்டு அனைவருக்கும் புதிய வாயப்புகள், வெற்றி மற்றும் முடிவற்ற மகிழ்ச்சியை கொண்டு வரட்டும். அனைவருக்கும் நல்ல ஆரோக்கியமும், செழிப்பும் கிடைக்கட்டும்’’ என கூறியுள்ளார். வளர்ந்த இந்தியா கனவை நனவாக்க நாங்கள் இன்னும் கடினமாக உழைப்பதில் உறுதியாக உள்ளோம் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். … Read more

வெம்பக்கோட்டையில் கைரேகை பதிவுடன் அல்லி மொட்டு வடிவ ஆட்டக்காய் முதன்முதலாக கண்டெடுப்பு

சிவகாசி: வெம்பக்கோட்டை விஜய கரிசல்குளம் 3-ம் கட்ட அகழாய்வில் கைரேகை பதிவுடன் கூடிய அல்லி மொட்டு வடிவிலான ஆட்டக்காய் கண்டெடுக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வெம்பக்கோட்டை வைப்பாற்றின் வடகரையில் உள்ள விஜய கரிசல்குளம் மேட்டுக்காடு பகுதியில் 2022 மார்ச்சில் தொடங்கிய முதல்கட்ட அகழாய்வில் 3,254 பொருட்கள், 2023 ஏப்ரலில் தொடங்கிய இரண்டாம் கட்ட அகழாய்வில் 4,660 பொருட்கள் மற்றும் திமிலுடைய காளை, சங்கு வளையல்கள், சூதுபவளம், வணிக முத்திரை, செப்பு நாணயங்கள் உள்ளிட்ட பல்வேறு பழங்கால … Read more

விவசாயி உடல்நிலை பாதித்த விவகாரம்: பஞ்சாப் அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ உத்தரவாதம் வழங்கும் வகையில் சட்டம் இயற்றக் கோரி பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர். ஆனால் எல்லையில் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதையடுத்து, விவசாயிகள் எல்லையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகளின் பிரதிநிதி ஜெகஜித் சிங் தல்லிவால் (70), கன்னவுரி எல்லையில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை கடந்த நவம்பர் 26-ம் தேதி தொடங்கினார். ஒரு … Read more