இன்றுமுதல் சில தென்மாவட்ட ரயில் சேவைகளில் மாற்றம் – பயணம் நேரம் குறைப்பு! தெற்கு ரயில்வே அறிவிப்பு…

மதுரை:  இன்று (ஜனவரி 1) முதல் மதுரை கோட்டத்தில் இயக்கப்படும் ரயில்களின் கால அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறித்துள்ளது. அதன்படி,  பயணிகளின் வசதிக்கேற்ப தென்மாவட்டங்களுக்கு செல்லும்  சில ரயில்களின் சேவை நேரம் குறைக்கப்பட்டுள்ளதாகவும், சில ரயில்களின் நேரத்தை மாற்றியுள்ளதாகவும் எனவும், இந்த புதிய நடைமுறை இன்று ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும்  தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதுரை – திருவனந்தபுரம் அமிர்தா விரைவு … Read more

`ரூ.44,042 கோடி எங்கு செல்கிறது… 500 அரசுப் பள்ளிகளை மேம்படுத்த நிதியில்லையா?' – அண்ணாமலை கேள்வி!

“ரூ.44,042 கோடி எங்குதான் செல்கிறது? ; 500 அரசுப் பள்ளிகளை மேம்படுத்த நிதியில்லையா?” – அண்ணாமலை கேள்வி! இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்… “நேற்றைய தினம் நடைபெற்ற, தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் துவக்க விழாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்றான, 500 அரசுப் பள்ளிகள், அவற்றின் அருகிலிருக்கும் தனியார் பள்ளிகளால் மேம்படுத்தப்படும் என்ற தீர்மானத்தை, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் வரவேற்றிருக்கிறார். 500 அரசுப் பள்ளிகளை மேம்படுத்தக் கூட தமிழக அரசிடம் … Read more

‘மாணவி பாலியல் வன்கொடுமையில் தனிநபர் ஈடுபட்டதாக கூறுவதில் சந்தேகம்’ – கார்த்தி சிதம்பரம் கருத்து

காரைக்குடி: ‘சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தனிநபர் ஈடுபட்டதாக கூறுவதில் சந்தேகம் உள்ளது’ என மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார். காரைக்குடியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சீமான், வருண்குமார் பிரச்சினையில் அரசியல் தலைவரும், ஐபிஎஸ் அதிகாரியும் பொதுவெளியில் விவாதம் செய்வது நல்லதல்ல. இதில் தலைமை செயலாளர், டிஜிபி தலையிட்டு சட்டம், நிர்வாக ரீதியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஒரே நாடு; ஒரே தேர்தல் நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு விரோதமானது. நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு … Read more

மும்பை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு இசிஜி எடுக்கும் தூய்மை பணியாளர்கள்

மும்பை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் நோயாளி ஒருவருக்கு தூய்மை பணியாளர்கள் இசிஜி எடுக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு இசிஜி, எக்ஸ்ரே எடுப்பவர்கள் அதற்காக முறையாக படித்து பயிற்சி பெற்ற மருத்துவ நிபுணர்களே மேற்கொள்ள வேண்டும் என்பது விதிமுறை. ஆனால், மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் புறநகர் பகுதியான கோவண்டியில் பிஎம்சி நடத்தி வரும் சாதாப்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு சீருடை … Read more

அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸில் கூட்டத்தில் பாய்ந்த டிரக் – 10 பேர் உயிரிழப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸில் மக்கள் கூட்டத்துக்குள் பிக்-அப் டிரக் பாய்ந்த சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். போலீஸ் உடனான துப்பாக்கிச் சண்டைக்கு பிறகு ஓட்டுநர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் 35-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல். ‘இது தீவிரவாத சதி செயலாக இருக்குமா?’ என்ற கோணத்தில் குறித்து எஃப்பிஐ (FBI) விசாரணையை தொடங்கி உள்ளது. அங்குள்ள போர்பன் தெருவில் புத்தாண்டு தினத்தன்று அமெரிக்க நேரப்படி அதிகாலை 3.15 இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்தப் பகுதியில் வெடிபொருள் … Read more

தென் கொரியாவில் விபத்துக்குள்ளான விமானத்தின் ‘கருப்புப் பெட்டி’ ஆய்வுக்காக அமெரிக்கா அனுப்ப முடிவு

தென் கொரியாவில் கடந்த ஞாயிறன்று நடைபெற்ற மிக மோசமான விமான விபத்தில் 179 பேர் கொல்லப்பட்டனர். 181 பேர் பயணம் செய்த இந்த விமானம் தீப்பிடித்த நிலையில் அதில் இருந்து இரண்டு விமானப் பணிப்பெண்கள் மட்டுமே பலத்த காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டனர். இந்த விபத்திற்கு பறவை தாக்குதலே காரணம் என்று கூறப்படும் நிலையில் கியர் பாக்ஸ் செயலிழந்த நிலையில் பெல்லி லேண்டிங் என்று சொல்லக்கூடிய அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது. அப்போது ஓடுபாதையில் இருந்த கான்கிரீட் தடுப்பு சுவரில் … Read more

பழனி: பூட்டி கிடக்கும் தாய்மார்கள் பாலூட்டும் அறை; அவதிக்குள்ளாகும் மகளிர்- நடவடிக்கை எடுக்கப்படுமா?

பழனி வ.உ.சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள தாய்மார்கள் பாலூட்டும் அறையானது பூட்டிய நிலையில் காணப்படுகின்றது. பெண்கள் பணி நிமித்தமாகவும் பயணங்கள் மேற்கொள்ளும் போதும் பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் பொழுது அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் தங்களுடைய குழந்தைகளுக்கு பாலூட்டுவதற்கான இடம் தேவைப்படுகிறது. அதற்காக 2015-ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா பல்வேறு நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் உள்ள பேருந்து நிலையங்களில் தாய்மார்கள் பாலூட்டும் அறையை திறந்து வைத்தார். அதோடு பராமரிப்பிற்காக ஒரு ஊழியரையும் நியமித்தார். ஆனால் இந்த … Read more

“தமிழகத்தில் பாஜகவை வர விடமாட்டேன்” – வைகோ சூளுரை

சென்னை: “நான் உயிரோடு இருக்கும் வரை திமுக ஆட்சியை கவிழ்க்க விடமாட்டேன். தமிழகத்தில் பாஜகவை வர விடமாட்டேன்” என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். சென்னை – எழும்பூரில் உள்ள மதிமுக தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “ஆங்கில புத்தாண்டில் புதிய எழுச்சியுடன் மதிமுக தன்னுடைய கட்சி பணிகளை தொடங்கியுள்ளது. பிப்ரவரி மாதம் மண்டல வாரியாக கட்சி கூட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளோம். ஒரே நாடு ஒரே தேர்தல் மிகவும் மோசமான திட்டமாகும். இது சாத்தியமற்றது. … Read more

மதுக்கடையில் திருட சென்றவர் அதிகமாக மது அருந்தி சிக்கினார்: தெலங்கானாவில் நடந்த ருசிகர சம்பவம்

மதுக்கடையில் திருட சென்றவர் அதிகமாக மது அருந்தி சிக்கிய சம்பவம் தெலங்கானா மாநிலத்தில் நடந்துள்ளது. தெலங்கானா மாநிலத்தில் மதுபான கடைகள், பார்கள் அனைத்தும் தனியார் வசமே உள்ளன. இந்நிலையில், மேதக் மாவட்ட தலைநகரில் உள்ள கனகதுர்கா ஒயின்ஸ் என்னும் கடை இயங்கி வருகிறது. இந்த கடையை, வழக்கம்போல் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று இரவு வியாபாரத்துக்குப் பின்னர் அதன் உரிமையாளர் பூட்டிக்கொண்டு வீட்டுக்கு சென்று விட்டார். அதன் பின்னர், நள்ளிரவில் ஒரு திருடன், அக்கடையின் கூரையில் உள்ள டைல்ஸை உடைத்துக்கொண்டு, … Read more

சூப்பர் ஸ்டாரின் பாஷா பாணி புத்தாண்டு வாழ்த்தைத் தொடர்ந்து போயஸ் கார்டனில் ரஜினிகாந்தை சந்தித்தார் ஓபிஎஸ்

உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டு விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தமிழக மக்களுக்கும் தனது ரசிகர்களுக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று காலை வாழ்த்து தெரிவித்தார். பாட்ஷா பட வசனத்தை குறிப்பிட்டு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ரஜினிகாந்த், ” நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான் கை விட மாட்டான். கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான் ஆனா கை விட்டுடுவான்” என பதிவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது வீட்டின் முன் கூடிய அவரது ரசிகர்கள் முன் … Read more