‘சின்னசேலம் அருகே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பெண் படுகொலை’ – காவல்துறைக்கு அன்புமணி கண்டனம்

சென்னை: சின்னசேலம் அருகே இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட கொடூரம் நிகழ்ந்து 7 நாட்களுக்கு மேலாகியும், அதற்குக் காரணமான மனித மிருகங்களைக் கைது செய்ய தமிழக அரசும், காவல்துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கைப் பார்ப்பது கண்டிக்கத்தக்கது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த திம்மவரத்தைச் சேர்ந்த நிர்மலா என்பவர் கடந்த டிசம்பர் 26ம் தேதி இரவு 7 … Read more

ஆங்கில புத்தாண்டு | கோயில்கள், தேவாலயங்களுக்குச் சென்று மக்கள் வழிபாடு

புதுடெல்லி: புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு உட்பட நாடு முழுவதிலும் மக்கள் கோயில்கள் மற்றும் தேவாலயங்களுக்குச் சென்று வழிபாடு மேற்கொண்டனர். 2025ம் ஆண்டின் முதல் நாளான இன்று இந்த ஆண்டு சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக நாடு முழுவதிலும் மக்கள் கோயில்கள், தேவாலயங்களுக்குச் சென்று வழிபாடு மேற்கொண்டு வருகின்றனர். சென்னை, திருச்சி, காஞ்சிபுரம், மதுரை, கோவை, திருநெல்வேலி, திருத்தணி, பழனி, திருச்செந்தூர் உள்பட மாநிலம் முழுவதும் உள்ள கோயில்களில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வழிபாடு மேற்கொண்டனர். சென்னை, தூத்துக்குடி, … Read more

விஜயகாந்த் அவர்களின் பெயரில் வருடம் தோறும் விருதுகள் – ஜான் அமலன்!

மறைந்த நடிகர் விஜயகாந்த் அவர்களின் பெயரில் வருடம் தோறும் விருதுகள் வழங்கப்படும் என இந்தியன் மீடியா works நிறுவன தலைவர் ஜான் அமலன் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசின் குட்நியூஸ்! இளைஞர்கள் கோடீஸ்வரராகலாம்..!

Tamil Nadu Government | தமிழ்நாடு அரசு இளைஞர்கள் தொழில் முனைவோர் ஆக்கும் வகையில் கெமிக்கல் மற்றும் யூடியூப் பயிற்சிகள் வழங்க உள்ளது. இதில் கலந்து கொள்வது எப்படி? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

இது நாடா, சுடுகாடா? பாலியல் கொலை நடந்து 7 நாட்களாகியும் குற்றவாளிகளை பிடிக்க முடியாத அவலம்! அன்புமணி ராமதாஸ்

சென்னை: இது நாடா, சுடுகாடா? என கேள்வி எழுப்பியுள்ள பாமக தலைவர் அன்புமணி, கள்ளக்குறிச்சி பகுதியில்  பெண் பலாத்கார கொலை; 7 நாள் ஆகியும் நடவடிக்கை இல்லை என்றும், இதுவரை குற்றவாளிகளை பிடிக்க முடியாத அவலம் ஏற்பட்டுள்ளதாகவும், குற்றம் சாட்டி உள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே பாலியல் வன்கொடுமை செய்து பெண் கொலை செய்யப்பட்டாா். சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட கிராமத்தைச் சோ்ந்த காதல் திருமணம் செய்த 28 வயது பெண்ணின் கணவா் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு … Read more

சிறுசேமிப்பு திட்ட வட்டியில் மாற்றமில்லை – மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி, வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் நடைமுறையில் உள்ள சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டிவிகிதத்தை 3 மாதங்களுக்கு ஒருதடவை மத்திய அரசு மாற்றி அமைத்து வருகிறது. நடப்பு நிதியாண்டின் 4-வது காலாண்டுக்கான (ஜனவரி 1-ந் தேதி முதல் மார்ச் 31-ந் தேதிவரை) சிறுசேமிப்பு திட்ட வட்டிவிகிதம் குறித்த அறிவிப்பை மத்திய நிதி அமைச்சகம் நேற்று வெளியிட்டது. சிறுசேமிப்பு திட்ட வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றும், முந்தைய காலாண்டில் அமலில் இருந்த வட்டி விகிதமே நீடிக்கும் … Read more

இந்திய அணி போட்டி அட்டவணை 2025 – முழு விவரம்

புதுடெல்லி, மெல்போர்னில் நடைபெற்ற பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்ததன் மூலம் இந்திய அணியின் இந்த ஆண்டுக்கான கிரிக்கெட் அட்டவணை நிறைவு பெற்றது. இந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியா அணியின் செயல்திறன் ஏற்ற இறங்கங்களை கொண்டுள்ளது. இதனையடுத்து எதிர்வரும் 2025-ம் ஆண்டின் தொடக்கத்திலேயே இந்திய அணி ஜனவரி 3-ம் தேதி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபியின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியை விளையாடுவதன் மூலம், அடுத்த ஆண்டு … Read more

2025-ம் ஆண்டு பிறக்கிறது; பாபா வாங்கா, நாஸ்டிரடாமஸ் கணிப்பு கூறுவது என்ன?

வாஷிங்டன், உலகம் முழுவதும் புது வருடத்தில் ஏற்படும் நிகழ்வுகளை பற்றி பல்கேரியாவை சேர்ந்த பாபா வாங்கா மற்றும் பிரான்சை சேர்ந்த நாஸ்டிரடாமஸ் வெளியிட்டுள்ள கணிப்புகள் பலரால் ஆர்வத்துடன் பார்க்கப்படுகிறது. 2025-ம் ஆண்டு பிறக்க இருக்கிறது. இதில் அவர்களின் கணிப்புகள் பற்றிய விவரங்கள் வெளிவந்துள்ளன. இவற்றில் மனிதர்களுடன் வேற்று கிரகவாசிகளின் தொடர்பு, விளாடிமிர் புதின் மீது நடத்தப்படும் படுகொலை முயற்சி, ஐரோப்பிய நாடுகளில் பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் மன்னர் சார்லஸ் அரசுக்கு எதிரான கொந்தளிப்பு உள்ளிட்டவை பற்றிய கணிப்புகள் … Read more

Book Fair: "என் மீதான வாசகர்களின் நம்பிக்கை அதிகம்; அதனால் விலை ஒரு பொருட்டல்ல" – மனுஷ்ய புத்திரன்

இதுவரையில் 53 கவிதை தொகுப்பு, 14 கட்டுரை தொகுப்புகள் மற்றும் ஒரு நாவல் படைத்துள்ள கவிஞர் மனுஷ்ய புத்திரனின் சமீபத்திய கவிதை தொகுப்பு ‘நாளை என்பது உன்னைக் காணும் நாள்’. நடைபெற்றுக்கொண்டிருக்கும் சென்னை புத்தகக் கண்காட்சியில், தனது உயிர்மை பதிப்பகத்தில் வாசகர்களைச் சந்தித்துவரும் மனுஷ்ய புத்திரனைச் சந்தித்தோம் . ‘நாளை என்பது உன்னைக் காணும் நாள்’ நூலிற்கு வாசகர்களிடம் கிடைக்கும் வரவேற்பு குறித்துக் கேட்டதற்கு, “வெளியீட்டு விழா முடிந்து நான்கு நாட்களே ஆவதால், இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக … Read more

வரும் கல்வி ஆண்டில் புதிய ஐடிஐ தொடங்க நாளை முதல் விண்​ணப்​பிக்​கலாம்: வேலை​வாய்ப்பு பயிற்​சித்துறை அறிவிப்பு

சென்னை: வரும் கல்வி ஆண்டில் புதிய ஐடிஐ தொடங்கவும், அங்கீகாரத்தை புதுப்பிக்கவும், புதிய தொழிற்பிரிவுகள் தொடங்கவும் நாளை (ஜன.2) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் பி.விஷ்ணு சந்திரன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2025-2026-ம் கல்வியாண்டில் புதிய தொழிற்பயிற்சி பள்ளிகள் (ஐடிஐ) தொடங்குதல், அங்கீகாரத்தை புதுப்பித்தல், புதிய தொழிற் பிரிவுகள் / தொழிற் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் தொடங்குதல் ஆகியவற்றுக்கான விண்ணப்பங்கள் இணையதளம் … Read more