கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா

ஒட்டாவோ: கனடா நாடாளுமன்றத்தில் 338 உறுப்பினர்கள் உள்ளனர். பெரும்பான்மையை நிரூபிக்க 170 எம்.பி.க்களின் ஆதரவு தேவை. பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சிக்கு 153 எம்.பி.க்கள் உள்ளனர். புதிய ஜனநாயக கட்சியின் 25 எம்.பி.க்கள் அரசுக்கு ஆதரவு அளித்து வந்தனர். கடந்த ஆண்டு புதிய ஜனநாயக கட்சி, அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்றது. இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு அக்டோபரில் கனடா நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் சிறிய கட்சிகளின் ஆதரவுடன் பிரதமர் ட்ரூடோ பெரும்பான்மையை … Read more

சத்தீஸ்கரில் காவல்துறையினரின் பாதுகாப்பு வாகனத்தின் மீது நக்ஸலைட்டு தாக்குதல்… 9 பேர் பலி…

சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூரில் உள்ள அம்பேலி கிராமம் அருகே பாதுகாப்பு வாகனத்தை குறிவைத்து நக்சலைட்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 9 பேர் பலியானார்கள். குத்ரு காவல் நிலைய எல்லையில் மதியம் 2:15 மணியளவில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. இந்த வாகனம் தண்டேவாடா, நாராயண்பூர் மற்றும் பிஜாப்பூரைச் சேர்ந்த கூட்டு நடவடிக்கைக் குழுவின் ஒரு பகுதியாக இருந்த இந்த வாகனம் பணி முடிந்து திரும்பிக் கொண்டிருந்தபோது தாக்குதலுக்கு உள்ளானது. இந்த குண்டுவெடிப்பில் தண்டேவாடா மாவட்ட ரிசர்வ் காவலர் (டிஆர்ஜி) … Read more

தமிழகத்தில் 6.36 கோடி வாக்காளர்கள்: 8.82 லட்சம் வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர்

தமிழகத்தில் நேற்று வெளியிடப்பட்ட வாக்காளர் இறுதிப் பட்டியல்படி 6 கோடியே 36 லட்சத்து 12 ஆயிரத்து 950 வாக்காளர்கள் உள்ளனர். தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு அக். 29 முதல் நவ. 28 வரை வாக்காளர் பட்டியல் திருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தற்போது வாக்காளர் இறுதிப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று … Read more

மகாராஷ்டிராவில் ஆண்டுக்கு 365 நாளும் 12 மணி நேரமும் செயல்படும் பழங்குடியின கிராம பள்ளி

மகாராஷ்டிராவில் தொலைதூரத்தில் உள்ள பழங்குடியின குக்கிராமம் ஒன்றில் இருக்கும் பள்ளி ஆண்டின் 365 நாட்களும் செயல்பட்டு மாணவர்களுக்கு நேரடி பயிற்சியுடன் கூடிய கல்வியை கற்று தந்து வருகிறது. இதனை, மகாராஷ்டிரா மாநில கல்வி அமைச்சர் டாடா பூஸ் வெகுவாக பாராட்டியுள்ளார். திரிம்பகேஷ்வர் தாலுகாவில் உள்ள ஹிவாலி கிராமத்தில் ஜில்லா பரிஷத் பள்ளி உள்ளது. இங்கு படிக்கும் குழந்தைகள் புத்தகப் புழுக்கள் அல்ல. அவர்கள் வகுப்பறை பாடங்களைத் தாண்டி வெல்டிங், மின்சார வேலை மற்றும் இயற்கை விவசாயம் போன்றவற்றை … Read more

நாளை ஆளுநரை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்

சென்னை நாளை தமிழகம் முழுவதும் ஆளுநரை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில் பாஜக ஆளும் மாநிலங்களில் அமைதியாக இருக்கும் ஆளுநர்கள், பாஜக அல்லாத மாநில அரசுகளில் தனி ராஜாங்கம் நடத்த முயல்கிறார்கள். ஆளுநர் மாளிகைகளை வைத்து மாநில நிர்வாகத்தை முடக்குவதை ஒரு வாடிக்கையாகவே வைத்திருக்கிறது மோடி அரசு. அதன் வெளிப்பாடுதான் இன்றைக்கு தமிழக சட்டமன்றத்தில் நடந்த நிகழ்வு. ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் மாநில உரிமைகளை சிதைத்து, மாநில … Read more

Justin Trudeau | இந்தியாவுடன் மோதல்.. கிளப்பிய எதிர்ப்பு.. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா!

Justin Trudeau Announces Resigns News: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவிப்பு. லிபரல் கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை பிரதமராக நீடிப்பார் எனத் தகவல்.

புதுச்சேரியில் இதுவரை எச்எம்பிவி பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை: அரசு அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை எச்எம்பிவி பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை என்று புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக புதுச்சேரி அரசு நலவழித்துறை தரப்பில் இன்று தெரிவித்ததாவது: சீனாவில் மனித மெட்டாப்நியூமோவைரஸ் (HMPV) நோய் பரவுவது குறித்து . இந்திய அரசு ஒரு அறிக்கையை வெளியிட்டது. இது மற்ற சுவாச வைரஸ் போன்றது, இது குளிர்காலத்தில் பொதுவான குளிர் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகிறது. புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை எச்எம்பிவி பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை புதுச்சேரி … Read more

சத்தீஸ்கரில் நக்சல்களின் தாக்குதலில் ரிசர்வ் காவல் படை வீரர்கள் 8 பேர் வீர மரணம்

புதுடெல்லி: சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில், மாவட்ட ரிசர்வ் காவல் படை வீரர்களின் வாகனத்தை நக்சல்கள் வெடிகுண்டு மூலம் வெடிக்கச் செய்ததில் 8 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். ஓட்டுநரும் உயிரிழந்தார். சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் நக்சலைட் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட பாதுகாப்புப் படையினர் பின்னர் தங்கள் ஸ்கார்பியோ வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தனர். குத்ரு காவல் நிலையத்திற்கு உட்பட்ட அம்பேலி கிராமத்திற்கு அருகில் வாகனம் வந்தபோது, வெடிகுண்டு வெடித்ததில் மாவட்ட ரிசர்வ் படை வீரர்கள் 8 பேரும், ஒரு … Read more