திபெத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

புதுடெல்லி: இமயமலையின் அடிவாரத்தில் உள்ள திபெத்தில் இன்று (ஜன.7) காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இது 7.1 ரிக்டராக பதிவானது. இந்நிலையில் நேபாள – திபெத் எல்லையில் தற்போது மீண்டும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. அது 4.5 ரிக்டர் என்ற அளவில் பதிவாகியுள்ளது. திபெத் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 53 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 62 பேர் காயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து சீன ஊடகங்கள் தரப்பில், திபெத்தின் டின்கிரி மற்றம் அதன் … Read more

சுப்மன் கில் மட்டும் தமிழக வீரராக இருந்து இருந்தால்… பத்ரிநாத் சர்ச்சை பேச்சு!

சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்துள்ளது. முதல் டெஸ்டில் வெற்றி பெற்று இருந்தாலும், தொடர் 1-3 என்ற கணக்கில் முடிந்துள்ளது. இந்திய அணி வீரர் சுப்மன் கில் இந்த தொடர் முழுவதும் ரன்கள் அடிக்க சிரமப்பட்டார். அதிக ரன்கள் அடித்த முதல் 15 வீரர்களின் பட்டியலில் கூட சுப்மன் கில் இடம் பெறவில்லை. தொடர்ந்து ரன்கள் அடிக்க தடுமாறி வரும் அவருக்கு இந்திய … Read more

Madraskaaran: "என்ன எப்போதும் செகண்ட் ஹீரோவாகவே தேர்ந்தெடுக்குறாங்க…" – கலையரசன் ஆதங்கம்

எஸ் ஆர் புரொடக்ஷன் சார்பில் B.ஜகதீஸ் தயாரிப்பில், ‘ரங்கோலி’ பட இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், மலையாள நடிகர் ஷேன் நிகம், கலையரசன், நிஹாரிகா நடிப்பில், ஆக்சன் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் ‘மெட்ராஸ்காரன்’. பொங்கலை முன்னிட்டு இப்படம் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில், இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு நிகழ்ச்சியில் தனது ஆதங்கத்தைக் கொட்டி இருக்கிறார் நடிகர் கலையரசன். மேடையில் பேசிய அவர், “இனிமேல் துணை கதாபாத்திர வேடங்களை அதிகமாகப் பண்ணப்போவதில்லை. அதற்குக் காரணம் என்னவென்றால் இந்த துறையில் … Read more

பகுதி நேர ஆசிரியர்களுக்கும் பொங்கல் போனஸ் மற்றும் பணி நிலைப்பு வழங்க வேண்டும்! டாக்டர் ராமதாஸ்

சென்னை: அரசு பள்ளிகளி ல் 13 ஆண்டுகளாக பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு பொங்கல் ஊக்கத்தொகை மற்றும் பணி நிலைப்பு வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறையில் 13 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியர்களின் பணி நிலைப்புக் கோரிக்கை கண்டுகொள்ளப்படாமல் இருக்கும் நிலையில், பொங்கல் திருநாளையொட்டி தங்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை யையும் தமிழக … Read more

டெல்லி சட்டசபை தேர்தல் தேதியை இன்று மதியம் அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்

புதுடெல்லி, 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கு நடப்பு ஆண்டில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேதி பற்றிய அறிவிப்பை இன்று மதியம் 2 மணிக்கு தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு, தேர்தலில் போட்டியிடும் 29 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டது. இதில், புதுடெல்லி தொகுதியில், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் முதல்-மந்திரியான கெஜ்ரிவாலுக்கு எதிராக முன்னாள் எம்.பி. பர்வேஷ் வர்மாவை அக்கட்சி நிறுத்தியது. இதேபோன்று … Read more

மீண்டும் பார்முக்கு திரும்ப விராட் கோலிக்கு ஏபி டி வில்லியர்ஸ் அட்வைஸ்

கேப்டவுன், இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா 10 வருடங்களுக்குப்பின் பார்டர் – கவாஸ்கர் கோப்பையை கைபப்ற்றி அசத்தியுள்ளது. இந்தியாவின் இந்த தோல்விக்கு விராட் கோலியும் ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார். ஏனெனில் முதல் போட்டியில் சதமடித்த அவர், அதற்கடுத்த போட்டிகளில் தொடர்ந்து அவுட் சைடு ஆப் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால் அவர் மீது இந்திய … Read more

நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 7.1 ஆக பதிவு

காத்மண்டு, நேபாளத்தில் இன்று காலை 6.50 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகி உள்ளது. நேபாளத்தின் லொபுசே என்ற பகுதிக்கு வடகிழக்கே 93 கி.மீ. தொலைவில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டது. நேபாளம் மற்றும் சீனா எல்லையருகே சன்குவசாபா மற்றும் தேபிள்ஜங் என்ற பகுதியில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. இதனால் பல பகுதிகளில் கட்டிடங்கள் குலுங்கின. இதனை தொடர்ந்து, டெல்லி, பீகார் போன்ற மாநிலங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. … Read more

ஜல்லிக்கட்டு: `காளை வளர்த்தால் உதவித்தொகை; தேர்தல் வாக்குறுதி என்னாச்சு?’ – கேட்கும் காளை வளர்ப்போர்

“ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு காளைகளை கொண்டு செல்லும்போது டோல்கேட்டுகளில் கட்டணம் வசூலிக்க கூடாது என்றும், காளை வளர்ப்போருக்கு உதவித்தொகை, வீரர்களுக்கு மருத்துவ காப்பீடு செய்ய வேண்டும்” என் காளை வளர்ப்போர், வீரர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மதுரை மாவட்டத்தில் உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்னும் சில தினங்களில் நடைபெறுவதை முன்னிட்டு காளைகளை உரிமையாளர்கள் தயார்படுத்தி வருகின்றனர். உலகத்தமிழரின் பண்பாட்டுத் திருநாளான பொங்கலுக்கு ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழ்நாட்டில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதில் முக்கியமாக … Read more

மன்மோகன் சிங், ஈவிகேஎஸ் மறைவுக்கு இரங்கல்: சட்டப்பேரவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

சென்னை: சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2ஆம் நாளான இன்று (ஜன.7) மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். பின்னர் அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உறுப்பினர்கள் மவுன அஞ்சலி செலுத்திய பின்னர் அவை இன்றைக்கு நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக நேற்று இந்தாண்டு முதல் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசு தயாரித்து அளித்த உரையை வாசிக்காமல் புறக்கணித்து அவையில் இருந்து வெளியேறினார். “ஆளுநர் … Read more

டெல்லி சட்டப்பேரவை தேர்தல் எப்போது? – தேர்தல் ஆணையம் இன்று பிற்பகல் அறிவிக்கிறது

புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவை தேர்தல் தேதி இன்று பிற்பகல் வெளியாகிறது. இது தொடர்பான அறிவிப்பை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் பிற்பகல் 2 மணிக்கு வெளியிடுகிறது. புதுடெல்லி யூனியன் பிரதேசத்துக்கான சட்டப்பேரவை தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி 2025) நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பு அங்குள்ள அரசியல் கட்சியினர் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. டெல்லியில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என மும்முனைப் போட்டிக்கு அரசியல் களம் காத்திருக்கிறது. தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே … Read more