அசாம் நிலக்கரி சுரங்க விபத்து: தொழிலாளி சடலம் மீட்பு; எஞ்சியோரை தேடும் பணி தீவிரம்

புதுடெல்லி: அசாம் மாநிலம் திமா ஹசாவ் மாவட்டத்தின் நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிய 9 பேரில் ஒருவரின் உடல், இன்று (புதன்கிழமை) மீட்கப்பட்டுள்ளது. 3-வது நாளாக நடைபெறும் மீட்பு பணியின்போது ராணுவ நீர்மூழ்கி வீரர்கள் உடலை மீட்டனர். இதுகுறித்து ராணுவ அதிகாரிகள் மேலும் கூறுகையில், “இன்று அதிகாலையில் சுரங்கத்துக்குள் ஒரு உடலை நீர்மூழ்கி வீரர்கள் கண்டுபிடித்தனர். இறந்தவர் யார் என்பது இன்னும் அடையாளம் காணப்படவில்லை. சுரங்கத்துக்குள் சிக்கிய மீதமுள்ள 8 பேரை மீட்கும் பணியில், கடற்படை, ராணுவம், தேசிய … Read more

சாலை விபத்து… பணம் இல்லாமல் சிகிச்சை பெற மத்திய அரசு கொண்டுவரப்போகும் சூப்பர் திட்டம்

Central government New Scheme | சாலை விபத்து ஏற்படும்போது பணமில்லாமல் சிகிச்சை பெறும் திட்டத்தை விரைவில் மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளது.

ஜீ தமிழ் 3 நாட்கள் மெகா கொண்டாட்டம்! பொங்கலுக்கு GOAT திரைப்படம்! விஜய் ரசிகர்கள் ஹேப்பி

Zee Tamil Pongal Special Shows & Movie’s List: ஜனவரி 12 முதல் ஜனவரி 15, 2025 வரை உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களை மகிழ்விக்க சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் பிளாக்பஸ்டர் திரைப்படங்கள் நிறைந்த பொங்கல் கொண்டாட்டத்தூக்கு Zee Tamil தயாராகி வருகிறது.

இனி 1 லட்சம் இல்லை; 2 லட்சம்! மக்களுக்காக தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு!

தமிழக அரசு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும் 48 திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியுதவியை கணிசமாக உயர்த்தி உள்ளது.

OnePlus 13R இந்தியாவில் அறிமுகம் ஆனது: விலை, விவரக்குறிப்புகள் இதோ

OnePlus 13R: பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒன்பிளஸ் தனது புதிய ஃபிளாக்ஷிப் போன்களான OnePlus 13 மற்றும் OnePlus 13R ஆகியவற்றை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. OnePlus 13 பிரீமியம் ஆண்ட்ராய்டு அனுபவத்தை வழங்குகிறது. இது சமீபத்திய மற்றும் சிறந்த வன்பொருளைப் பயன்படுத்துகிறது. மற்றொரு அறிமுகமான OnePlus 13R ஒப்பீட்டளவில் மலிவு விலையில் கிடைக்கிறது. மேலும் இது முதன்மை நிலை சிப்செட் மற்றும் உயர்நிலை வன்பொருளையும் கொண்டுள்ளது.  OnePlus 13R பற்றி இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம். … Read more

முதலாளித்துவ கட்சி திமுக – கம்யூ தலைவர்கள் குறித்து ராஜா பேசியது தவறானது! சிபிஐ (எம்) மாநில செயலாளர் பெ.சண்முகம், இந்திய கம்யு முத்தரசன் கண்டனம்…

சென்னை:  சுயநலவாதிகளான தலைவர்களால் கம்யூனிஸ கொள்கை தோற்றது’   என விமர்சனம் செய்த திமுக எம்.பி. ராஜா பேசியது தவறானது, அதை திருமப பெற வேண்டும,  சிபிஐ (எம்) மாநில செயலாளர் பெ.சண்முகம்,  இந்திய கம்யுனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர்  முத்தரசன் கண்டனம் தெரிவித்து உள்ளனர். திமுக கூட்டணி கட்சியான சிபிஐ(எம்) கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், திமுக அரசின் சமீப நடவடிக்கைகள் குறித்து கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நடைபெறுகிறது என உச்சபட்சமாக … Read more

ஸ்காட்லாந்து உள்பட வெளிநாடுகளுக்கு ஓம் பிர்லா சுற்றுப்பயணம்

புதுடெல்லி, யுனைடெட் கிங்டம், ஸ்காட்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதில் யுனைடெட் கிங்டமின் நாடாளுமன்ற சபாநாயகர் லிண்ட்சே ஹாயில் அழைப்பின்பேரில் 7-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை அந்நாட்டில் பிர்லா சுற்றுப்பயணம் செய்கிறார். இதற்காக அவர் புதுடெல்லியில் இருந்து புறப்பட்டு சென்றார். அவர் இந்த பயணத்தில், லிண்ட்சே மற்றும் பிரபுக்கள் சபையின் தலைவர் மெக்பால் ஆகியோரை லண்டன் நகரில் சந்தித்து பேச உள்ளார். லண்டனில் அம்பேத்கர் மியூசியத்திற்கு செல்லும் … Read more

2வது டெஸ்ட்டில் பீல்டிங் செய்தபோது காலில் காயம்; சிகிச்சைக்கு இங்கிலாந்து செல்லும் வீரர்

லண்டன், தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் 3 டி20, 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் டி20, டெஸ்ட் தொடர்களை தென் ஆப்பிரிக்காவும், ஒருநாள் தொடரை பாகிஸ்தானும் வென்றது. இதனிடையே, இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டெஸ்ட் கடந்த 3ம் தேதி முதல் 7ம் தேதி வரை நடைபெற்றது. இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்தபோது 7வது ஓவரில் ரையன் ரிக்கெல்டன் அடித்த பந்தை பாகிஸ்தான் … Read more

திபெத்தில் பயங்கர நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 126 ஆக உயர்வு

பிஜீங், சீனாவின் தன்னாட்சி பெற்ற மாகாணமாக திபெத் உள்ளது. இமயமலையின் வடக்கு பகுதியில் உயரமான இடத்தில் திபெத் அமைந்துள்ளது. இந்நிலையில் திபெத்தில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் ஷிகாட்சே நகரை மையமாக கொண்டு நேற்று காலை 9.05 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் 95 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியானது. அந்த எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதன்படி, நிலநடுக்கத்தில் 126 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் . மேலும், 188 பேர் படுகாயமடைந்தனர். … Read more

`400% வட்டி, ரத்தினகல்; ஒரு லட்சம் பேரிடம் ரூ.1000 கோடி மோசடி’ – உக்ரைன் ஓடிய நகைக்கடை உரிமையாளர்

அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பொதுமக்கள் தங்களது பணத்தை இழப்பது, இப்போதும் வழக்கமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. எத்தனையோ மோசடிகள் வெளிச்சத்திற்கு வந்தாலும், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டதாக தெரியவில்லை. இதனால் தினம் தினம் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பணத்தை இழந்து கொண்டுதான் இருக்கின்றனர், மும்பையில் ஒரே நேரத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் தங்களது பணத்தை இழந்துள்ளனர். மும்பை முழுவதும் டோரஸ் என்ற நகைக்கடையின் கிளைகள் செயல்படுகிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம்தான் இதன் முதல் கிளை தாதர் பகுதியில் … Read more