தமிழக அரசு மிக தவறான பாதையில் செல்கிறது – தமிழிசை சௌந்தர்ராஜன்!

நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்தால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும், தி.மு.க நீங்கள் ஆர்ப்பாட்டம் செய்தால் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படுமா? இங்கு என்ன ஆட்சியை நடந்து கொண்டு இருக்கிறது? கேட்டால் ஆளுநர் பிரிவினைவாதத்தை தூண்டுகிறார் என்று கூறுகிறீர்கள் – தமிழிசை சௌந்தர்ராஜன்

பொங்கலன்று நடைபெறும் யுஜிசி நெட் தேர்வு தேதியை மாற்றுங்கள்! மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் அவசர கடிதம்…

சென்னை:  ஜனவரி 14ந்தேதி பொங்கல் அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள யுஜிசி நெட் தேர்வு தேதியை மாற்றக்கோரி மத்திய கல்வி  அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அவசர கடிதம் எழுதி உள்ளார். பொங்கல் அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ள, யுஜிசி-நெட் தேர்வு தேதிகளை மாற்றியமைக்க மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  தமிழ்நாட்டில் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் கொண்டாடும் ஜனவரி 13 முதல் 16 ஆம் நாள் … Read more

கர்நாடகா: பைக் மீது டிராக்டர் மோதியதில் 3 பேர் பலி

பெங்களூரு, கர்நாடக மாநிலம் தும்கூரில் உள்ள ஓபலாபூர் கேட் அருகே சென்று கொண்டிருந்த பைக் மீது டிராக்டர் மோதியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் இன்று அதிகாலை நடத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் பற்றி தகலறிந்து வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்தவர்கள் மதுகிரி தாலுகாவில் உள்ள கோண்டிஹள்ளி … Read more

அவர் மட்டும் தமிழக வீரராக இருந்திருந்தால்… – பத்ரிநாத் கடும் விமர்சனம்

சென்னை, இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடரில் 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்த இந்தியா 10 வருடங்களுக்குப்பின் பார்டர் – கவாஸ்கர் கோப்பையை இழந்துள்ளது. இதனால் இந்திய அணி மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த தொடரில் இந்திய அணியின் தோல்விக்கு பேட்ஸ்மேன்கள் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார்கள். முன்னணி வீரர்களான ரோகித், விராட் கோலி சொதப்பிய வேளையில், இளம் … Read more

அமெரிக்காவில் முதன்முறையாக பறவை காய்ச்சல் பாதிப்புக்கு ஒருவர் பலி

லூசியானா, அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் வசித்து வந்த 65 வயது முதியவர் ஒருவருக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து, அவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அதிக தொற்றும் தன்மை கொண்ட எச்5என்1 ரக வைரசின் தாக்குதலுக்கு ஆளான அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். இதனை லூசியானா சுகாதார துறை தெரிவித்து உள்ளது. காட்டு பறவைகள் மற்றும் வளர்ப்பு பறவைகள் ஆகியவற்றுடன் தொடர்பில் இருந்த அவருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது. இவர் தவிர, வேறு … Read more

Siragadikka aasai : மனோஜைக் காப்பாற்றிய முத்து… நன்றி உணர்வு இல்லாத ரோகிணி

சிறகடிக்க ஆசை சீரியலில் நேற்றைய எபிசோடில் மனோஜ், ரோகிணி ஷோரூமில் இருக்கும் போது, அங்கு ரவி, ஸ்ருதி வருகின்றனர். முத்துவும் மீனாவும் வர சொன்னதாக சொல்கின்றனர்.  சற்று நேரத்தில் முத்து, மீனா அண்ணாமலை, விஜயா, முத்துவின் நண்பர்கள் என அனைவரும் அங்கு வருகின்றனர்.  அனைவரையும் பார்த்ததும், மனோஜ் அதிர்ச்சியுடன் பார்க்கிறார். முத்து வந்த விஷயத்தை சொல்கிறார்,  அப்பா தான் இனி இந்த ஷோரூமின் ஓனர், நீ மேனஜராக இருந்து கொள் என்று சொல்ல ரோகிணி அதிர்ச்சியாகிறார். முத்து … Read more

தமிழக ஆளுநரை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்: சென்னையில் திமுக எம்.பி.,க்கள் உள்ளிட்டோர் பங்கேற்பு

சென்னை: “ஆளுநருக்கு ஏன் அரசியல். ஆளுநர் அரசியல் பேச வேண்டிய தேவை, அவசியம், நியாயம் இல்லை. கேரளா, மணிப்பூர், பிஹார், உள்ளிட்ட மாநிலங்களில் எல்லாம் ஆளுநர்களை மாற்றிய மத்திய அரசே, தமிழகத்தில் மட்டும் ஏன் இவரை சாசனம் எழுதி வைத்தது போல மாற்றாமல் வைத்திருக்கிறது பாஜக” என்று திமுக எம்.பி. கனிமொழி கேள்வி எழுப்பினார். தமிழகத்தையும் தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமானப்படுத்தும் ஆளுநரைக் கண்டித்தும், மத்திய அரசின் ஏஜெண்ட்டாக தமிழகத்தின் உரிமைகளில் அத்துமீறல்களைச் செய்யும் ஆளுநரைக் காப்பாற்றிடவும், … Read more

2025 புத்தாண்டு நாளில் பிறந்த இந்தியாவின் முதல் ‘ஜென் பீட்டா’ குழந்தை

2025 புத்தாண்டு நாளில் இந்தியாவின் முதல் ‘ஜென் பீட்டா’ குழந்தை பிறந்துள்ளது. ஜனவரி 1 ஆம் தேதி அதிகாலை 12.03 மணிக்கு பிறந்த பெண் குழந்தை இந்தியாவின் முதல் ‘ஜென் பீட்டா’ குழந்தை என்று அறியப்படுகிறது. மிசோரம் மாநிலம் அய்ஸ்வாலில் பிறந்த அந்தப் பெண் குழந்தைக்கு ஃப்ராங்கி ரெமுராடிகா ஜடேங் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. குழந்தை பிறக்கும்போது 3.12 கிலோ எடையுடன் ஆரோக்கியமாக இருந்ததாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. மகப்பேறு மருத்துவர் வன்லாகிமா குழந்தைப் பேறு அறுவை சிகிச்சை … Read more

திபெத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

புதுடெல்லி: இமயமலையின் அடிவாரத்தில் உள்ள திபெத்தில் இன்று (ஜன.7) காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இது 7.1 ரிக்டராக பதிவானது. இந்நிலையில் நேபாள – திபெத் எல்லையில் தற்போது மீண்டும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. அது 4.5 ரிக்டர் என்ற அளவில் பதிவாகியுள்ளது. திபெத் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 53 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 62 பேர் காயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து சீன ஊடகங்கள் தரப்பில், திபெத்தின் டின்கிரி மற்றம் அதன் … Read more

சுப்மன் கில் மட்டும் தமிழக வீரராக இருந்து இருந்தால்… பத்ரிநாத் சர்ச்சை பேச்சு!

சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்துள்ளது. முதல் டெஸ்டில் வெற்றி பெற்று இருந்தாலும், தொடர் 1-3 என்ற கணக்கில் முடிந்துள்ளது. இந்திய அணி வீரர் சுப்மன் கில் இந்த தொடர் முழுவதும் ரன்கள் அடிக்க சிரமப்பட்டார். அதிக ரன்கள் அடித்த முதல் 15 வீரர்களின் பட்டியலில் கூட சுப்மன் கில் இடம் பெறவில்லை. தொடர்ந்து ரன்கள் அடிக்க தடுமாறி வரும் அவருக்கு இந்திய … Read more