கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்: `18 மீதான குண்டர் சட்டம் ரத்து!' – சென்னை உயர் நீதிமன்றம்

கள்ளக்குறிச்சியில் கடந்த ஆண்டு ஜூன் மாதம், மெத்தனால் கலக்கப்பட்ட கள்ளச்சாராயத்தை அருந்தியதால் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம், மாநில அளவில் பெரும் பிரச்னையாக வெடித்தது. இந்த விவகாரத்தில், மாவட்ட ஆட்சியர் பணியிட மாற்றம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சஸ்பெண்ட் என அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்த அரசு, வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட்டது. மேலும், 18 பேர் கைதுசெய்யப்பட்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டனர். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம்! மறுபக்கம், இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு … Read more

அண்ணா பல்கலை., விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி சட்டப்பேரவையில் இருந்து பாஜக வெளிநடப்பு

சென்னை: அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தை கண்டித்தும், இதில் சிபிஐ விசாரணை வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பாஜகவினர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பின்னர் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மாணவிக்கு நடந்த பாலியல் கொடூரத்தை கண்டித்து பாஜகவினர் வெளிநடப்பு செய்துள்ளோம். அண்ணா பல்கலை.யில் இரவு நேரத்தில் இந்த குற்றம் நடந்துள்ளது. அந்த குற்றவாளி ஆளுங்கட்சியை சேர்ந்தவர். அந்த குற்றவாளி மீது ஏற்கெனவே 18 வழக்குகள் … Read more

பொக்ரான் அணுகுண்டு விஞ்ஞானி ராஜகோபால சிதம்பரம் காலமானார்: பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்

பொக்ரான் அணுகுண்டு சோதனையில் முக்கிய பங்கு வகித்த ராஜகோபால சிதம்பரம் (88) மும்பை மருத்துவமனையில் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். கடந்த 1974 மற்றும் 1998-ம் ஆண்டுகளில் இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தியது. புகழ்பெற்ற விஞ்ஞானியான ராஜகோபால சிதம்பரம் இந்த அணுகுண்டு சோதனையில் முக்கிய பங்கு வகித்தார். அணுசக்தி துறையில் முக்கிய பொறுப்புகளை வகித்த சிதம்பரம், உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள ஜஸ்லோக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் … Read more

ஆளுநர்காக சட்ட பேரவை மரபுகளை மாற்ற முடியாது – சபாநாயகர் அப்பாவு அதிரடி!

தமிழக சட்டப்பேரவையின் மரபை ஆளுநருக்காக மாற்ற முடியாது எனவும், தமிழ்நாடு அரசின் ஒரே ஆளுநருக்கு வாசிக்க விருப்பமில்லை என்பதை தெரிந்து கொண்டேன் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

ஆளுநருக்கும் அரசுக்கும் மோதல் ஜனநாயக்கத்துக்கு நல்லதில்லை : விஜய்

சென்னை’ ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே மோதல் கூடாது என நடிகர் விஜய் கூறியுள்ளார். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் எக்ஸ்வதளத்தில், மிழகச் சட்டமன்றத்தின் ஆண்டாண்டு கால மரபு. பொன்விழா கண்ட தமிழகச் சட்டமன்றத்தின் மரபு எந்நாளும் காக்கப்பட வேண்டும். மத்திய அரசால் நியமிக்கப்படும் ஆளுநர் யாராக இருந்தாலும் தமிழக சட்டமன்ற மரபைக் காக்கும் நடவடிக்கைகளைப் பின்பற்றியே ஆக வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன். ஒவ்வொரு முறை சட்டமன்றம் கூடும் பொழுதும், மரபு சார்ந்த செயல்பாடுகளில் ஆளுநருக்கும் அரசுக்கும் … Read more

கடும் குளிர்: ஜார்கண்டில் பள்ளிகளை 13-ந் தேதிவரை மூட உத்தரவு

புதுடெல்லி, வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடுமையான பனி பெய்து வருகிறது. டெல்லியில், எதுவுமே பார்க்க முடியாத அளவுக்கு பனிப்பொழிவு நிலவுகிறது. இதனால், ரெயில், விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விமானங்கள் தரையிறங்க முடியாமல் தவித்தன. சாலைகளில் வாகனங்கள் முன்பக்க விளக்கை எரியவிட்டு குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டன. காஷ்மீரில் வெப்பநிலை உறைநிலை அளவுக்கு சென்று விட்டது. தலைநகர் ஸ்ரீநகர் உள்பட பெரும்பாலான பகுதிகளில் புதிதாக பனிப்பொழிவு காணப்பட்டது. ஜார்கண்ட் மாநிலத்திலும் கடும் குளிர் நிலவி வருகிறது. கடும் குளிர் … Read more

ஓய்வு முடிவு உங்கள் கையில்தான் உள்ளது… ஆனால்.. – ரோகித் சர்மாவை எச்சரித்த சஞ்சய் மஞ்ரேக்கர்

மும்பை, இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியின் கேப்டனான ரோகித் சர்மாவிற்கு நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடர் அவரது கெரியரில் மோசமான ஒன்றாக அமைந்துள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக முதல் டெஸ்டை தவற விட்ட அவர், அதற்கடுத்த 2, 3 மற்றும் 4-வது போட்டிகளில் கேப்டனாக களமிறங்கினார். இருப்பினும் அந்த போட்டிகளில் அவரது தலைமையில் விளையாடிய இந்திய அணி 2 மற்றும் 4 -வது போட்டிகளில் தோல்வி கண்டது. மழை காரணமாக … Read more

ஆஸ்திரேலியாவில் புறப்பட தயாராக இருந்த விமானத்தின் டயர்கள் வெடித்ததால் பரபரப்பு

மெல்போர்ன், ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபிக்கு நேற்று எதிஹாட் ஏர்வேஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம் புறப்பட தயாரானது. விமானத்தில் 289 பயணிகள் இருந்தனர். விமானம் ஓடுபாதையில் இருந்து கிளம்புவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் விமானத்தின் 2 டயர்கள் திடீரென வெடித்தன. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து விமானிகள் விமானத்தை உடனடியாக நிறுத்தினர். அதனை தொடர்ந்து விமான நிலையத்தில் இருந்த அவசர கால மீட்பு குழுவினர் உடனடியாக அங்கு … Read more

Seeman: “சீமான் கண்ணியத்தைக் காக்கத் தவறிவிட்டார்… நடந்தது இதுதான்'' – பபாசி நிர்வாகிகள் காட்டம்

நூல் வெளியீட்டு விழாவில் சீமான் சென்னை நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்தில் 48-வது புத்தகக் கண்காட்சி கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது. இதில் கடந்த ஜனவரி 4-ம் தேதி ‘தமிழ்த்தேசியம் ஏன்? எதற்கு? எப்படி?’ என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அந்நிகழ்ச்சியில் ‘நீராருங் கடலுடுத்த…’ தமிழ்தாய் வாழ்த்துப் பாடலுக்குப் பதிலாக, பாரதிதாசன் எழுதிய ‘வாழ்வினிற் செம்மையைச் செய்பவன் … Read more

தமிழ்நாட்டின் மரபுகளையும், தமிழக மக்களின் உணர்வுகளையும் ஆளுநர் புரிந்து கொள்ள வேண்டும்: அன்புமணி

சென்னை: தமிழ்நாட்டின் மரபுகளையும், தமிழக மக்களின் உணர்வுகளையும் ஆளுநர் புரிந்து கொள்ள வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாட்டின் மரபுகளையும், தமிழக மக்களின் உணர்வுகளையும் ஆளுநர் புரிந்து கொள்ள வேண்டும். ஆளுநருக்கு உரிய மரியாதை அரசு அளிக்க வேண்டும். தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு, பெண்களுக்கு பாதுகாப்பு, படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, அரசு ஊழியர்களின் கோரிக்கைகள், உழவர்களின் எண்ணிக்கையிலடங்காத கோரிக்கைகள், பட்டியலின மக்களின் … Read more