சட்டப்பேரவைக்கு ‘யார் அந்த சார்?’ வாசகம் கொண்ட பேட்ஜ் அணிந்துவந்த அதிமுக எம்எல்ஏ.,க்கள்
சென்னை: தமிழக சட்டப்பேரவையின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தங்களது சட்டைகளில் ‘யார் அந்த சார்?’ என்ற பேட்ஜை அணிந்து வந்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் உள்பட 66 எம் எல் ஏ.க்களும் யார் அந்த சார்? என்ற பேட்ஜ் பொருந்திய சட்டையை அணிந்து வந்துள்ளனர். பேரவைக்குள் சென்றதும் அவர்கள் அந்த பேட்ஜை அணிந்து கொண்டனர். மேலும், அண்ணா பல்கலைக்கழக விவகாரம் குறித்து விவாதிக்க அதிமுக கவன ஈர்ப்பு நோட்டீஸ் வழங்கியுள்ளது. … Read more