எச் எம் பி வி தொற்று : கேரளாவில் தீவிர கண்காணிப்பு

திருவனந்தபுரம் சீனாவின் எச் எம் பி வி தொற்று காரணமாக கேரளாவில் தீவிர கண்காணிப்பு செய்யப்படுகிறது. கொரோனாவை தொடர்ந்து சீனாவில் எச்.எம்.பி.வி. என்னும் வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதாகவும், ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.  சீன அசு இது தொடர்பாக அதிகாரப்பூர்வமான எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடாத போதும் இந்த வைரஸ் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்று சீன நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆயினும்உலக நாடுகள் இந்த விவகாரத்தை உன்னிப்பாக கவனிக்கத் … Read more

சிக்கிமில் திடீரென இடிந்த பாலம்.. ஆற்றில் கவிழாமல் தப்பிய லாரி

காங்டாக், சிக்கிம் மாநிலத்தின் வடக்கு சிக்கிம் மாவட்டத்தில் லாச்சுங் சூ ஆற்றின் குறுக்கே பாலம் ஒன்று உள்ளது. பெய்லி என்று அழைக்கபடும் இந்த பாலம் 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். அருகில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்வதற்கான முக்கிய பாலமாக இது விளங்கி வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை அதிக பாரம் ஏற்றப்பட்ட சரக்கு லாரி ஒன்று இந்த பாலத்தில் சென்றபோது பாலம் திடீரென இடிந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் லாரி ஆற்றில் கவிழாமல் தப்பியது. … Read more

பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடர் முடிவு: டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் ஏற்பட்ட மாற்றம்

துபாய், இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரின் கடைசி டெஸ்ட் சிட்னியில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா, பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி உள்ளது. முன்னதாக நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியாவும், 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. அதன்பின் நடைபெற்ற 3-வது … Read more

ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கு: டொனால்டு டிரம்பிற்கு அடுத்த வாரம் தண்டனை அறிவிப்பு

வாஷிங்டன், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொன்லாடு டிரம்ப். இவர் 2017 முதல் 2021ம் ஆண்டு வரை அமெரிக்க ஜனாதிபதியாக பணியாற்றினார். அதேவேளை, நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றிபெற்றார். அவர் வரும் 20ம் தேதி அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார். இதனிடையே, அமெரிக்காவை சேர்ந்த ஆபாச பட நடிகை ஸ்டோமி டெனியல்ஸ். இவர் டொனால்டு டிரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினார். 2006ம் ஆண்டு டொனால்டு டிரம்ப் தன்னுடன் பாலியல் உறவு வைத்துக்கொண்டதாக ஸ்டோமி … Read more

'விடுதலை ராஜேந்திரனுக்கு பெரியார் விருது, ரவிக்குமாருக்கு அம்பேத்கர் விருது' – தமிழக அரசு அறிவிப்பு

திருவள்ளுவர் விருது ஆண்டுதோறும் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. நடப்பு 2025 ஆம் ஆண்டிற்கான திருவள்ளுவர் திருநாள் விருதுகளை பெறும் விருதாளர்களை தமிழக அரசு தேர்வு செய்து அறிவித்துள்ளது. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வரும் ஜனவரி 15 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் விருதுகள் வழங்கவுள்ளார். விருது பெறுவோர் அனைவருக்கும் தலா ரூ 2 லட்சம் மற்றும் 1 சவரன் தங்கப்பதக்கம், பொன்னாடை வழங்கப்படும். மு.க. ஸ்டாலின் இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள் விருதுகளின் பட்டியல்: அய்யன் … Read more

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களை கவர்ந்த ‘சிறை சந்தை’ – என்ன ஸ்பெஷல்? 

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் விற்கப்படும் சிறை கைதிகள் தயாரித்த பல்வேறு வீட்டு உபயோகப் பொருட்களுக்கு வழக்கறிஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் தண்டனைக் கைதிகள் தயாரிக்கும் பல்வேறு பொருட்களுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அந்த வகையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நடமாடும் சிறைச் சந்தைக்கு வழக்கறிஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த சிறைச் சந்தையில் கைதிகளின் கை வண்ணத்தில் உருவான நல்லெண்ணெய், … Read more

ஆண்டுக்கு 15 லட்சம் பேருக்கு பக்கவாதம்: ஐஜேஎஸ் நடத்திய ஆய்வில் தகவல்

நாட்டில் ஆண்டுக்கு 15 லட்சம் பேருக்கு பக்கவாத பாதிப்பு ஏற்படுவதாகவும், ஆனால் 4-ல் ஒரு இந்தியர் மட்டுமே பக்கவாதத்துக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைக்கு செல்கின்றனர் என ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் பக்கவாத பாதிப்பு மற்றும் அதற்கான சிகிச்சை வசதி எவ்வளவு பேர் பயன்படுத்துகின்றனர் என்பது பற்றிய ஆய்வை சிகாகோவைச் சேர்ந்த அசென்சன் சுகாதார மைய மருத்துவர் மற்றும் எய்ம்ஸ் ஐதராபாத் மருத்துவர் அருண் மித்ரா ஆகியோர் நடத்தினர். இந்த ஆய்வறிக்கை ‘இன்டர்நேசனல் ஜேர்னல் ஆஃப் ஸ்ட்ரோக் (ஐஜேஎஸ்) … Read more

ஆஸ்திரேலிய மண்ணில் கடைசியாக டெஸ்ட் விளையாடிய 3 இந்திய பிளேயர்கள்..!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி தோல்வியை தழுவியது. இதனால், பார்டர் – கவாஸ்கர் டிராபியை 3-1 என ஆஸ்திரேலியாவிடம் இந்தியா பறிகொடுத்திருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முனைப்புடன் ஆஸ்திரேலிய சென்ற இந்திய கிரிக்கெட் அணி, இப்போது வெறுங்கையுடன் தாயகம் திரும்புகிறது. அத்துடன் இந்திய அணியில் இருக்கும் மூன்று சீனியர் பிளேயர்களுக்கு இதுவே அவர்களின் கடைசி ஆஸ்திரேலிய சுற்றுப் பயணமாகவும் அமைந்திருக்கிறது. அடுத்த ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் … Read more

ஈகுவடார் நாட்டில் ராணுவ அவசர நிலை பிரகடனம்

குயிட்டோ உள்நாட்டு கலவரம் காரணமாக ஈகுவடார் நாட்டில் ராணுவ அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. ஈகுவடார் நாடு தென் அமெரிக்க கண்டத்தில் அமைந்துள்ளாது.   இங்கு செயல்படும் பல கிளர்ச்சி குழுக்களை பல ஆயுத கும்பலை பயங்கரவாத அமைப்பாக ஈகுவடார் அரசு அறிவித்துள்ளது. கிளர்ச்சியாளர்ள் பொதுச்சொத்துக்களை சேதப்படுத்துதல், அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துவதால் அரசாங்கத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளனர். இதனால் குவாயாஸ், லாஸ் ரியோஸ், மனாபி உள்ளிட்ட 7 மாகாணங்களில் உள்நாட்டு கலவரம் நிலவுகிறது. ஆகவே ராணுவ … Read more

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ளூர் மக்கள் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு

திருமலை, திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஒவ்வொரு மாதமும் முதல் செவ்வாய்க்கிழமை அன்று உள்ளூர் மக்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். அதன்படி இந்த மாதத்துக்கான சாமி தரிசன அனுமதி 7-ந்தேதி நடக்கிறது. அதற்காக இன்று (ஞாயிற்றுக்கிழமை) உள்ளூர் மக்களுக்கு சாமி தரிசன டோக்கன்கள் திருப்பதி மகதி கலை அரங்கத்தில் உள்ள கவுண்ட்டர்களிலும், திருமலையில் உள்ள பாலாஜி நகர் சமுதாயக் கூடத்திலும் வழங்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தினத்தந்தி Related Tags … Read more