வறுமை ஒழிப்​பில் தமிழகம் முதலிடம்: மத்திய அரசு பாராட்டி உள்ளதாக அரசு பெருமிதம்

வறுமை ஒழி்ப்பில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளதற்கு மத்திய அரசு பாராட்டியுள்ளதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் இருப்பை சீராக நிர்வகிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் காரணமாகவும், ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைக்கு 2 கிலோ அரிசி வழங்குவது உள்ளிட்ட திட்டங்களாலும் வறுமை முற்றிலும் அகற்றப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஆய்வு வாயிலாக, வறுமை ஒழிப்பில் இந்தியாலேயே தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. கடந்த 40 … Read more

ம.பி.யில் கோயில்-கமால் மசூதி விவகாரம்: விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் ஒப்புதல்

மத்திய பிரதேசம் தார் மாவட்டத்தில் உல்ள போஜ்சாலா கோயில்-கமல் மவுலா மசூதி வளாகம் தொடர்பான விவகாரத்தை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள ஒப்புதல் தெரிவித்துள்ளது. இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் இடையில் சர்ச்சைக்கு வித்திட்டுள்ள போஜ்சாலா கோயில்-கமல் மவுலா மசூதி 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இது, சரஸ்வதி தேவியின் அவதாரமான வாக்தேவியின் கோயில் என்று இந்துக்கள் நம்புகின்றனர். அதேசமயம், முஸ்லிம்கள் அதை கமல் மவுலா மசூதி என்று அழைக்கின்றனர். மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக தொடரப்பட்ட … Read more

மலைக்கு அடியில் 130 அடி ஆழத்தில் செயல்பட்ட சிரியாவின் ரகசிய ஏவுகணை ஆலை தகர்ப்பு: இஸ்ரேல் துல்லிய தாக்குதல்

சிரியாவில் மலைக்கு அடியில் சுமார் 130 அடி ஆழத்தில் செயல்பட்ட ஏவுகணை ஆலையை இஸ்ரேல் கமாண்டோக்கள் துல்லிய தாக்குதல் மூலம் தகர்த்தனர். சிரியா ராணுவத்தின் மூத்த தளபதியாக பணியாற்றிய ஹபீஸ் அல் ஆசாத் கடந்த 1971-ம் ஆண்டு ராணுவ புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றினார். கடந்த 2000-ம் ஆண்டில் அவர் உயிரிழந்தார். அவரது மகன் பஷார் அல் அசாத் கடந்த 2000-ம் ஆண்டு ஜூலையில் சிரியாவின் புதிய அதிபராக பதவியேற்றார். இந்த சூழலில் அதிபர் ஆசாத்துக்கு எதிராக … Read more

மோசமான வானிலையால்  டெல்லியில் 100 க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதம்

டெல்லி மோசமான வானிலை காரணமாக டெல்லியில் 100க்கும் மேற்பட்ட விமான சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக டெல்லியில் அடர்ந்த பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.  டெல்லியில் இன்று காலை அடர்த்தியான மூடுபனி காணப்பட்டதால் அங்கு மிக  மோசமான வானிலை நிலவியது. இதன் காரணமாக டெல்லி விமான நிலையத்தில் 100க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக வந்ததாகவும். விமானங்கள் சற்று தாமதமாக தரையிறங்கின எனவும் எந்தவொரு விமானமும் திசைதிருப்பப்படவில்லை என்றும் அதிகாரி … Read more

ஸ்கரப் டைபஸ் தொற்றால் தமிழகத்தில் 5,000 பேர் பாதிப்பு

தமிழகத்தில் பரவி வரும் ஸ்கரப் டைபஸ் தொற்றால் இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தினமும் 10 முதல் 20 பேர் அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருகின்றனர். தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருப்பத்தூர், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய பகுதிகளில் அதிக அளவில் ஸ்கரப் டைபஸ் தொற்று பரவி வருகிறது. அதேபோல, கிழக்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் பாதிப்புகள் காணப்படுகின்றன. ஸ்கரப் டைபஸ் என்பது ஒரு வகையான பாக்டீரியா தொற்றாகும். … Read more

சீனாவில் பரவும் புதிய வைரஸ்: தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் இந்திய சுகாதாரத் துறை!

புதுடெல்லி: சீனாவில் தற்போது எச்எம்பிவி வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம், “நாட்டில் உள்ள நிலைமையை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளது. சீனாவில் உருவான கரோனா வைரஸ் உலக நாடுகளையே அச்சத்தில் ஆழ்த்தியது. மேலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். அதோடு, பொருளாதார நெருக்கடியானது வல்லரசு நாடுகளையே திணறடித்தது. தற்போதுதான் பல நாடுகள் மீண்டு வருகின்றன. இந்நிலையில், சீனாவில் புதிய வைரஸ் ஒன்று வேகமாக பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹியூமன் … Read more

நிதிஷ்குமாருக்கு இந்தியா கூட்டணியில் இணைய லாலு பிரசாத் அழைப்பு

பாட்னா இந்தியா கூட்டணியில் இணையுமாறு நிதிஷ்குமாருக்கு லாலு பிரசாத் யாதவ் அழைப்பு விடுத்துள்ளார். பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கடந்த 2013 ஆம் ஆண்டு, பா.ஜனதாவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி லாலுபிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்டிரீய ஜனதா தளத்துடன் இணைந்து மீண்டும் முதல்வர்ஆனார். பிறகு 2017 ஆம் ஆண்டு, ராஷ்டிரீய ஜனதாதள உறவை துண்டித்துக் கொண்டு, மீண்டும் பா.ஜனதாவுடன் கைகோர்த்தார். அதன்பின் 2022 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் மீண்டும் பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகி, … Read more

‘வங்கதேசத்தில் இருந்து தமிழகத்துக்கு ஊடுருவும் நபர்களை பிடிக்க தனிப் பிரிவு’ – அரசுக்கு இந்து முன்னணி வலியுறுத்தல்

சென்னை: “தமிழக அரசு உடனடியாக அந்நிய நாட்டில் இருந்து தமிழகத்தில் ஊடுருபவர்களுக்கு போலி ஆதார் கார்டு எடுத்து தரும் ஏஜெண்டுகளை கண்காணித்து உடனடியாக அவர்களை கைது செய்ய வேண்டும். தமிழகத்தின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு ஊடுருவல்காரர்களைப் பிடிக்க தமிழக அரசும், காவல் துறையும் இணைந்து சிறப்பு தனி பிரிவை அமைக்க வேண்டும்,” என்று இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வங்கதேச இஸ்லாமியர்கள் அசாம் – திரிபுரா எல்லை … Read more

ஆக்ராவில் அவுரங்கசீப் மாளிகை இடிப்பு: மேலும் 25 கட்டிடங்களை இடிக்க திட்டம்

புதுடெல்லி: உத்தரப் பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் முகலாய மன்னர் அவுரங்கசீப் கட்டிய மாளிகையின் ஒரு பகுதி இடிக்கப்பட்டுள்ளது. இதுபோல், தனியார் வசம் உள்ள மேலும் 25 கட்டிடங்களை இடிக்கவும் திட்டமிடப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போதைய உ.பி.யின் ஆக்ரா, இந்தியாவின் வரலாற்றில் சுமார் 200 ஆண்டுகள் முக்கிய இடம் பெற்றிருந்தது. இது, முகலாயர் ஆட்சியின் தலைநகராக இருந்தது. பிறகு ஆட்சியை கைப்பற்றிய ஆங்கிலேயர்கள் இந்நகரை தனது வடக்கு மேற்கு மாகாணத்தின் தலைநகரமாகவும் பயன்படுதினர்.ஆக்ராவில் தாஜ்மகால், செங்கோட்டை உள்ளிட்ட … Read more