இந்தியா முழுவதும் விழுப்புரம் உள்பட 440 மாவட்டங்களில் நிலத்தடி நீரில் ‘நைட்ரேட்’ அளவு அதிகரிப்பு… ஆய்வு தகவல்…

டெல்லி:  இந்தியாவில் தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில், 440 மாவட்டங்களில் நிலத்தடி நீரில் நைட்ரேட் அளவு அதிகரித்து காணப்படுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த விழுப்புரம் மாவட்டமும் இடம்பெற்றுள்ளது. இதன் விளைவு, சிறுநீரக பாதிப்பு,  புற்றுநோய், தோல் புண்கள் போன்ற நோய்கள் ஏற்பட  வழிவகுக்கும்  என்றும் எச்சரித்துள்ளது. இந்தியா முழுவதிலும் உள்ள 440 மாவட்டங்களில் நிலத்தடி நீரில் அதிக நைட்ரேட் அளவு கண்டறியப்பட்டுள்ளது, 20 சதவீத மாதிரிகள் அனுமதிக்கப்பட்ட நைட்ரேட் செறிவை … Read more

அண்ணா பல்கலை. வழக்கில் சிபிஐ விசாரணை தேவை: ஆளுநரை சந்தித்த பின் தமிழிசை வலியுறுத்தல்

சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து புகார் அளித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், “அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும்” என்றார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மகளிர் அணி தலைவர் உமாரதி ராஜன், தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு, பாஜக நிர்வாகிகள் ராதிகா, விஜயதாரணி, சசிகலா புஷ்பா உள்ளிட்ட மகளிர் அணி நிர்வாகிகள் … Read more

“புதிய வைரஸால் சீனாவில் அசாதாரணமான சூழல் இல்லை” – மத்திய அரசு விளக்கம்

புதுடெல்லி: சீனாவில் பரவி வரும் வைரஸ் காரணமாக அங்கு சூழல் அசாதாரணமானதாக இல்லை என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: “தற்போது பரவி வரும் காய்ச்சல் அடிப்படையில் சீனாவில் சூழல் அசாதாரணமானதாக இல்லை. தற்போதைய பரவலுக்கான காரணம் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ், ஆர்எஸ்வி மற்றும் HMPV. இவை வழக்கமான நோய்க்கிருமிகள் தான் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கிடைக்கக்கூடிய அனைத்து வாய்ப்புகளையும் கொண்டு நிலைமையை மத்திய அரசு உன்னிப்பாகக் … Read more

அண்ணா பல்கலை பாலியல் வழக்கு தொடர்பாக ஊகங்களின் அடிப்படையில் செய்தி வெளியிடுபவர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான விவகாரம் தொடர்பாக ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் ஊகங்களின் அடிப்படையில் செய்தி வெளியிடுவதை தவிர்க்குமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுபடி, அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்குகளை சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே, சில செய்தி ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள், சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணையில் கிடைக்கப்பெற்ற தகவல்கள் எனக் கூறி சில கருத்துக்களை பொதுவெளியில் ஒளிபரப்பி … Read more

2025 ஏதெர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள்

ஏதெர் எனர்ஜி நிறுவனத்தின் 2025 ஆம் ஆண்டிற்கான 450S, 450X என இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரும் கூடுதல் வசதிகள், முந்தைய மாடலை விட வேகமான சார்ஜிங் பெற்று ரூ.1.30 லட்சம் முதல் ரூ.1.58 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிதாக ஹைப்பர் சேன்ட் மற்றும் ஸ்டெல்த் ப்ளூ என இரு நிறங்களை 450 வரிசை பெற்றுள்ள நிலையில் ஆரம்ப நிலை 450எஸ் ஸ்டெல்த் ப்ளூ நிறத்தை மட்டும் பெற்றுள்ளது. கூடுதலாக  மேஜிக் ட்விஸ்ட் (Low and … Read more

கபிலனுக்கு பாரதியார் விருது, ரவிக்குமாருக்கு அம்பேத்கர் விருது – தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: 2024ம் ஆண்டுக்கான தமிழக அரசின் மகாகவி பாரதியார் விருதுக்கு கவிஞர் கபிலனும், டாக்டர் அம்பேத்கர் விருதுக்கு து.ரவிக்குமாரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: “தமிழறிஞர்களை சிறப்பிக்கும் வகையில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 2025-ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருதுக்கு புலவர் மு.படிக்கராமு-வும், 2024ஆம் ஆண்டுக்கான பேரறிஞர் அண்ணா விருதுக்கு எல்.கணேசனும், மகாகவி பாரதியார் விருதுக்கு கவிஞர் கபிலனும், பாவேந்தர் பாரதிதாசன் விருதுக்கு கவிஞர் பொன்.செல்வகணபதியும், தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருதுக்கு … Read more

லடாக்கில் 2 மாவட்டங்கள், மெகா அணை: சீனா திட்டம் மீதான இந்திய எதிர்வினையில் காங். அதிருப்தி

புதுடெல்லி: லடாக்கில் 2 மாவட்டங்களை உருவாக்கும் சீனாவின் நடவடிக்கைக்கு இந்தியா தெரிவித்திருக்கும் ஆட்சேபனை போதுமானது அல்ல என்றும், இந்த விவகாரத்தை மத்திய அரசு தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பு பிரிவு தலைவர் பவன் கெரா, “ஹொட்டான் மாகாணத்தில் சீனா இரண்டு புதிய மாவட்டங்களை உருவாக்கிய விவகாரத்தில் இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்திருக்கும் வெளிப்படையான ஆட்சேபனை போதுமானது அல்ல. 2020 ஜூன் 20 … Read more

முகேஷ் அம்பானியின் சொகுசு பங்களா ஆன்டிலியா… அந்த இடத்தில் முதலில் என்ன இருந்தது தெரியுமா?

Mukesh Ambani Mansion Antilia: முகேஷ் அம்பானியின் 27 தளங்கள் கொண்ட ஆன்டிலியா இல்லம் அமைந்துள்ள இடம், அதற்கு முன்பு யாரிடம் இருந்தது, அதனை அவர் எவ்வளவு தொகைக்கு வாங்கினார் என்பதை இங்கு காணலாம். 

ஜஸ்பிரித் பும்ரா பந்துவீசுவாரா மாட்டாரா… காயத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

India National Cricket Team: இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு (India vs Australia) இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அதன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று (ஜன. 3) சிட்னி நகரில் தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 185 ரன்களையும், அடுத்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 181 ரன்கள் அடித்தது. 4 ரன்கள் முன்னிலை உடன் பேட்டிங் செய்த இந்திய அணி (Team … Read more

‘மது அருந்துதல் புற்றுநோயை உண்டாக்கும்’ என்ற எச்சரிக்கை மது பாட்டில்கள் மீது அவசியம்… அமெரிக்க சர்ஜன் ஜெனரல் விவேக் மூர்த்தி வலியுறுத்தல்…

‘மது அருந்துதல் புற்றுநோயை உண்டாக்கும்’ என்ற எச்சரிக்கை மதுபான பாட்டில்கள் மீது அவசியம் என்று அமெரிக்க அரசு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதிபர் ஜோ பைடன் அரசின் கீழ் உள்ள பொது சுகாதார துறையில் அமெரிக்க சர்ஜன் ஜெனரலாக செயலாற்றிவரும் விவேக் மூர்த்தி இதனை வலியுறுத்தியுள்ளார். “அமெரிக்காவில் புகை பிடிப்பது மற்றும் உடல் பருமனுக்கு அடுத்தபடியாக புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய மூன்றாவது முக்கிய காரணியாக மது அருந்துதல் உள்ளது” என்று விவேக் மூர்த்தியின் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. … Read more