புதுச்சேரியில் அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் பொங்கல் தொகுப்பாக ரூ. 750 பணம்! முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி: அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் பொங்கல் தொகுப்பாக ரூ. 750 பணம் வழங்கப்படும் என முதலமைச்சர் என்.ரங்கசாமி அறிவித்து உள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பொங்கலையொட்டி, ரேசன் அட்டை தாரர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் பணமும் வழங்கப்பட்ட வருவது கடந்த சில ஆண்டுகளாக  நடைபெற்று வருகிறது. இவ்வாறு வழங்கப்படும் பொங்கல் தொகுப்பில் பல்வேறு குறைபாடுகள் எழுவதாக புகார்கள்  மற்றும் குற்றச்சாட்டுக்கள் கூறப்படுகிறது. இதையொட்டி, புதுச்சேரியில், நடப்பாண்டு பொங்கல் பரிசா, தலா ஒரு ரேசன் அட்டைக்கு ரூ.750 வழங்கப்படும் என்றும், … Read more

ராஜஸ்தானில் வேன் மீது லாரி மோதி விபத்து – 5 பேர் உயிரிழப்பு

ஜெய்ப்பூர், ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டத்தில் நேற்று ஒரு வேன் பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தது. அந்த வேன் மாநில நெடுஞ்சாலையில் இருந்து கோகுண்டா-பின்ட்வாரா தேசிய நெடுஞ்சாலையில் நுழைந்தபோது எதிர்பாராதவிதமாக ஒரு கனரக லாரி வேன் மீது மோதியது. இதில் வேனில் இருந்த 13 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களில் 4 பெண்கள் உள்பட 5 பேர் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். விபத்தை ஏற்படுத்திய … Read more

வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் இருந்து இந்திய உள்ளூர் வீரர் ஓய்வு அறிவிப்பு

மும்பை, இந்திய உள்ளூர் கிரிக்கெட் வீரரான சவுராஷ்டிராவை சேர்ந்த ஷெல்டன் ஜாக்சன் வெள்ளைப்பந்து (டி20 மற்றும் ஒருநாள்) போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். லிஸ்ட் ஏ ஒருநாள் போட்டிகளில் விளையாடி 9 சதங்கள் உட்பட 2792 ரன்களும், 84 டி20 போட்டிகளில் ஒரு சதம் அடித்துள்ளார். மேலும் சவுராஷ்டிரா அணிக்காக விஜய் ஹசாரே டிராபி தொடரிலும் விளையாடியுள்ளார். இந்நிலையில் 38 வயதான அவர் வெள்ளைப்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்துள்ளார். உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து … Read more

நிலைகுலையச் செய்த பனிப்புயல்.. நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து மோதிய 100 வாகனங்கள்

அஸ்தானா: கஜகஸ்தான் நாட்டில் வாகன போக்குவரத்து அதிகம் உள்ள சாலைகளில் அஸ்தானா-சூசின்ஸ்க் நெடுஞ்சாலையும் ஒன்று. எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த சாலையில் இன்று மதியம் சென்றுகொண்டிருந்த வாகனங்கள் திடீரென ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. அக்மோலா பிராந்தியத்தில் உள்ள கோகம், கராடல் ஆகிய கிராமங்களுக்கு மத்தியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. மோசமான வானிலை மற்றும் திடீரென ஏற்பட்ட பனிப்புயல் காரணமாக நிலைகுலைந்த வாகன ஓட்டிகள், வாகனங்களை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. கிட்டத்தட்ட 100 வாகனங்கள் விபத்துக்குள்ளாகி … Read more

Bumrah: `திடீர் காயம்; மைதானத்திலிருந்து வெளியேறிய பும்ரா; கேப்டனாக கோலி'-சிட்னியில் என்ன நடக்கிறது?

பார்டர் கவாஸ்கர் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நடந்து வருகிறது. இந்திய அணி தங்களின் முதல் இன்னிங்ஸில் 185 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன நிலையில் ஆஸ்திரேலிய அணியை 181 ரன்களில் சுருட்டியிருக்கிறது இந்திய அணி. இந்திய அணியின் கேப்டனும் முக்கிய பௌலருமான பும்ரா காயம் காரணமாக திடீரென மைதானத்திலிருந்து வெளியேறியிருக்கிறார். Bumrah நடப்புத் தொடரில் இந்திய அணியின் ஒரே நம்பிக்கையாக ஜொலித்து வருகிறார் பும்ரா. இந்தத் தொடரில் இதுவரைக்கும் மட்டும் 32 விக்கெட்டுகளை … Read more

சகாயம் ஐஏஎஸ் எழுதிய ‘கடைசித் தறியில் கண்டாங்கிச் சேலை’ நூல் வெளியீடு

சென்னை: தேசத்​தின் நம்பிக்கை மாத இதழ் மற்றும் அப்பா பதிப்​பகம் சார்​பில், ஓய்வு​பெற்ற ஐஏஎஸ் அதிகாரி உ.சகாயம் எழுதிய ‘கடைசித் தறியில் கண்டாங்​கிச் சேலை’ நூல் வெளி​யீட்டு விழா சென்னை தேனாம்​பேட்​டை​யில் நேற்று நடைபெற்​றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் இரா.நல்​ல​கண்ணு தலைமை வகித்து, நூலை வெளி​யிட்​டார். தமிழ்​நாடு தன்னுரிமைக் கழகத் தலைவர் பழ.கருப்​பையா நூலின் முதல் பிரதி​யைப் பெற்றுக்​கொண்​டார். தொடர்ந்து, இரா.நல்​ல​கண்​ணு​வின் 100-வது பிறந்த நாளை, கேக் வெட்​டிக் கொண்​டாடினர். பின்னர், சகாயத்​தின் ஆதரவற்​றோருக்கான … Read more

உ.பி.யில் கள்ளநோட்டு அச்சடித்த மதரஸா மேலாளர் கைது

உத்தர பிரதேசத்தில் கள்ளநோட்டு அச்சடித்து, தனது 3 மனைவிகள் மூலம் புழக்கத்தில் விட்ட மதரஸா மேலாளரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். உத்தர பிரதேசம் சிராவஸ்தி பகுதியைச் சேர்ந்தவர் நூரி என்ற முபாரக் அலி. இவர் இங்குள்ள மதரஸா ஒன்றில் மேலாளராக பணியாற்றுகிறார். இவருக்கு 3 மனைவிகள். அதில் ஒருவர் மதரஸாவில் பணியாற்றுகிறார். இந்நிலையில் மதரஸாவின் ஒரு அறையில் கள்ள நோட்டுக்களை நூரி அச்சிட்டுள்ளார். கள்ளநோட்டுகளை தனது மனைவிகள் மூலமாக அருகில் உள்ள மார்க்கெட் பகுதியில் … Read more

காலக்கெடு ஜனவரி 15.. ஊழியர்களுக்கு ரூ.15000 ஊக்கத்தொகை குறித்து EPFO புதிய அறிவிப்பு

EPFO Latest News: வங்கி கணக்கில் ₹15000 பெறுவதற்கு என்னென்ன செய்ய வேண்டும்? எந்தெந்த ஊழியர்கள் தகுதி உடையவர்கள்? இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்து அறிந்துக்கொள்ளுங்கள்.

துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு! சிக்கிய முக்கிய ஆவணங்கள்..

ED Raid At Durai Murugan House : மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் மகன், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் வீட்டில் 10 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற அமலாக்க துறை சோதனை நள்ளிரவு இரண்டு மணி அளவில் நிறைவு.  

வாகனப் பதிவு மற்றும் புதுப்பித்தல் மூலம் ரூ.10,076.64 கோடி வருவாய் ஈட்டிய தமிழ்நாடு அரசு!

சென்னை: தமிழ்நாடு அரசு,  2023-24 நிதியாண்டில்,   வாகனப் பதிவு மற்றும் புதுப்பித்தல் மூலம் தமிழ்நாடு  ரூ. 10,076.64 கோடி வருவாய் ஈட்டி உள்ளது.  இது கடந்த ஆண்டை விட , 33.29% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் 1,373 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளன.   இதன்மூலம் கடந்த ஆண்டு (2024) மட்டும்  நாடு முழுவதும் 2 கோடியே 61 லட்சத்து 83 ஆயிரத்து 620 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   அதேபோல் வாகன … Read more