அமெரிக்கா: புத்தாண்டு கொண்டாட்ட கூட்டத்தில் அதிவேகமாக புகுந்த கார் – 10 பேர் பலியான சோகம்

நியூ ஓர்லேன்ஸ் (லூசியானா மாகாணம்), அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் உள்ள நியூ ஓர்லேன்ஸ் நகரில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெற்று வந்தது. அப்போது திடீரென யாரும் எதிர்பாராத விதமாக அந்த கூட்டத்திற்குள் அதிவேகத்தில் ஒரு கார் புகுந்து அங்கிருந்தவர்கள் மீது பலமாக மோதியது. இந்த சம்பவத்தில் சிக்கி 10 பேர் பலியாகி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே வேகமாக கூட்டத்தில் மோதிய காரின் டிரைவர், திடீரென தனது துப்பாக்கியால் … Read more

Bhopal: `போபாலில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு…' – 337 மெட்ரிக் டன் நச்சுக்கழிவுகளை அகற்றும் ம.பி அரசு!

மத்தியப் பிரதேச மாநிலத்தின் போபாலில் யூனியன் கார்பைட்’ பூச்சிக்கொல்லி மருந்து தொழிற்சாலை இருந்தது. 1984-ம் ஆண்டு அங்கிருந்து கசிந்த விஷ வாயுவால் 5,479 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் உடல் உறுப்புகளை இழந்தும், நிரந்தர நோய்களாலும், சுகாதாரப் பிரச்னைகளாலும் பாதிக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து அந்த தொழிற்சாலை நிரந்தரமாக மூடப்பட்டது. ஆனாலும், அந்த தொழிற்சாலையில் சேமிக்கப்பட்டிருந்த 337 மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றப்படாமல் இருந்தது. Bhopal இது தொடர்பான வழக்குகளை விசாரித்த மத்தியப் பிரதேச … Read more

அரசின் பிரமாண பத்திரம், பதில் மனுக்​களில் அரசு வழக்கறிஞர்களின் சான்​றொப்பம் கட்டாயம்: தலைமை செயலர் உத்தரவு

சென்னை: நீதி​மன்​றங்​களில் அரசு சார்​பில் தாக்கல் செய்​யப்​படும் பிரமாணப் பத்திரம் மற்றும் பதில் மனுக்கள் உள்ளிட்ட பிற வழக்கு ஆவணங்​களில் அரசு வழக்​கறிஞர்​களிடம் சான்​றொப்பம் பெறுவது கட்டாயம் என அனைத்து ஆட்சி​யர்​களுக்​கும் தலைமைச் செயலாளர் உத்தர​விட்​டுள்​ளார். இதுதொடர்பாக அரசு தலைமைச் செயலர் என்.​முரு​கானந்தம் அனைத்து மாவட்ட ஆட்சி​யர்​கள், துறைத் தலைவர்கள் மற்றும் கூடுதல் தலைமைச் செயலர்கள் உள்ளிட்டோருக்கு பிறப்​பித்த சுற்​றறிக்கை: சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தாக்கல் செய்​யப்​படும் ஒவ்வொரு பிரமாணப் பத்திரம், பதில் மனுக்கள் மற்றும் வழக்​குக்கு … Read more

5 கிலோ நகைகள் அணிந்து திருமலைக்கு வந்த பக்தர்

திருமலை: ஆங்கில புத்​தாண்​டையொட்டி திருப்பதி ஏழுமலை​யான் கோயி​லில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோ​தி​யது. இதனால் இலவச தரிசனம் வாயிலாக சுவாமியை தரிசிக்க 14 மணி நேரம் வரை பக்தர்கள் காத்​திருந்​தனர். புத்​தாண்டை முன்னிட்டு, நேற்று அதிகாலை 2 மணிக்கு திருப்​பாவை சேவையும், அதனைத் தொடர்ந்து அர்ச்சனை, தோமாலை சேவை என ஆர்ஜித சேவைகள் நடைபெற்றன. முதல்வர் சந்திர பாபு நாயுடு, நேற்று காலை விஜயவாடாவில் உள்ள கனகதுர்கையம்மன் கோயிலுக்கு சென்று அம்மனை தரிசித்தார். ஹைதராபாத்தைச் சேர்ந்த தெலங்கானா … Read more

நியூ ஆர்லியன்ஸ் டிரக் தாக்குதலில் ஈடுபட்டவருக்கு ஐஎஸ்ஐஎஸ் தொடர்பு: விசாரணையில் தகவல்

நியூ ஆர்லியன்ஸ்: அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸில் மக்கள் கூட்டத்துக்குள் பிக்-அப் டிரக் பாய்ந்த சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ள நிலையில், டிரக் ஓட்டுநருக்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பது முதற்கட்ட விசாரணையில் உறுதியாகியுள்ளது. தாக்குதலில் ஈடுபட்டது சம்சத் தின் ஜபார் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் அமெரிக்க முன்னாள் ராணுவ வீரர் என்பதும், ஆப்கானிஸ்தானில் ராணுவப் பணியில் இருந்தவர் என்பதும் முதற்கட்ட விசாரணையில் என்று தெரியவந்துள்ளது. அது மட்டுமட்டலாது வாகனத்தில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத … Read more

புத்தாண்டு கொண்டாட்டம்: சென்னையில் விதிகளை மீறிய 245 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்!

சென்னை: புத்தாண்டு கொண்டாட்டத்தையட்டி,  சென்னையில் மட்டும் அரசின்  விதிகளை மீறிய 245க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். 2025-ம் ஆண்டு புத்தாண்டு உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்ட , தமிழ்நாட்டிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெற்றது.  இதையொட்டி, காவல்துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அறிவித்திருந்தது. மேலும், கடற்கரை, மேம்பாலம் போன்ற பகுதிகளில் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டதுடன்,  விடுதிகளிலும் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி, பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மேலும்,  புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு அசம்பாவிதங்களை தடுப்பதற்காக சென்னை … Read more

ராஜஸ்தானில் ஆழ்துளைக் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட 3-வயது குழந்தை உயிரிழப்பு

ராஜஸ்தான், ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த டிச.23 அன்று ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த 3-வயது குழந்தையை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. சேத்துனா என்ற 3 வயது பெண் குழந்தை, கடந்த டிச.23-ம் தேதி அன்று கோட்புட்லி-பெஹ்ரோர் மாவட்டத்திலுள்ள ஒரு விவசாய நிலத்திலுள்ள 700 அடி ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்தது. அந்த ஆழ்துளைக் கிணற்றின் 120 வது அடியில் சிக்கி இருந்த குழந்தையை மீட்க மீட்புப் படையினர் போராடி வந்தனர். குழந்தை விழுந்த அந்த ஆழ்துளைக் கிணற்றுக்கு … Read more

பாக்சிங் டே டெஸ்ட்: சதம் அடித்ததை அப்படி கொண்டாடியது ஏன்..? நிதிஷ் ரெட்டி விளக்கம்

மெல்போர்ன், இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் விளையாடி வருகிறது. இதில் 4 போட்டிகளின் முடிவில் தொடரில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் நாளை தொடங்க உள்ளது. இதில் 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்றது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் தொடங்கியதால் இந்த டெஸ்ட் ‘பாக்சிங் டே’ என்ற பாரம்பரிய … Read more

காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 12 பேர் பலி

டெய்ர் அல்-பாலா, காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் 117 பணய கைதிகளை உயிருடன் மீட்டுள்ளது. அதேபோல், ஹமாஸ் ஆயுதக்குழுவினர்களால் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட பணய கைதிகளின் உடல்களும் … Read more

லாரி மீது மோதிய ஆம்புலன்ஸ்; பறிபோன 3 உயிர்கள் – ராமநாதபுரத்தில் கோர விபத்து!

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் மரைக்காயர் பட்டிணத்தைச் சேர்ந்தவர் வரிசைகனி (65). இவருக்கு நேற்று நள்ளிரவில் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து த.மு.மு.க அமைப்பினை சேர்ந்த ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு வரிசைகனியை ராமநாதபுரம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த ஆம்புலன்ஸ் ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது வாலாந்தரவை அருகே உள்ள பெட்ரோல் பங்க்கில் இருந்து டீசல் நிரப்பிவிட்டு வெளியே வந்த விறகு ஏற்றிச் சென்ற லாரியின் பின்புறத்தில் திடீரென மோதியது. இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் விபத்தில் சிக்கியவர்களை … Read more