பாமக மாவட்ட செயலாளர்களுடன் அன்புமணி ஆலோசனை

பனையூர் பாமக மாவட்ட செயலாளர்களுடன் அன்புமணி ராமதாஸ் ஆலோசனை நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே பட்டானூரில் நடந்த பாமகவின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் காலியாக உள்ள இளைஞர் சங்க தலைவர் பதவிக்கு தனது மகள் வழி பேரனான பரசுராமன் முகுந்தன் என்பவரை அறிவித்தார். அதற்கு மேடையில் இருந்த டாக்டர் அன்புமணி ராமதாஸ் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் டாக்டர் … Read more

473 கிமீ ரேஞ்ச்.., க்ரெட்டா எலெக்ட்ரிக் காரை வெளியிட்ட ஹூண்டாய்

ஜனவரி 17 ஆம் தேதி விலை அறிவிக்கப்பட உள்ள ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில் 42kWh மற்றும் 51.4kWh என இரண்டு பேட்டரி ஆப்ஷனை பெற்று முறையே 390 கிமீ முதல் 473 கிமீ வரையிலான ரேஞ்ச் வெளிப்படுத்தும் என ARAI மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. Executive, Smart, Premium மற்றும் Excellence என நான்கு விதமான வேரியண்ட் பெற்று 8 விதமான ஒற்றை நிறங்கள், இரண்டு டூயல் டோன் நிறங்களுடன் இதில் மூன்று மேட் நிறங்களை … Read more

Identity Review: வேகம் குறையாத திரைக்கதைதான்… ஆனால் ஒற்றை படத்தில் ஓராயிரம் லாஜிக் ஓட்டைகளா?

துணிக் கடையின் ட்ரெயல் ரூமில் பெண்களை வீடியோ எடுத்து மிரட்டுபவரை, அவரின் இருப்பிடத்திற்கே தேடிச் சென்று கொல்கிறார் ஒரு மர்ம நபர். அந்தக் கொலையாளியை நேரில் கண்ட ஒரே சாட்சி அலிஷா (த்ரிஷா). இந்த வழக்கை விசாரிக்கும் காவல் ஆய்வாளர் அலன் (வினய்), அலிஷா சொல்லச் சொல்லக் குற்றவாளியின் முகத்தை வரைந்திட வேண்டி, ஜீனியஸான ஹரன் சங்கரின் (டொவினோ தாமஸ்) உதவியை நாடுகிறார். Identity Movie Review முகங்களை அடையாளம் காண்பதில் சவாலுடைய (Face Blindness) அலிஷா … Read more

“மாநில மகளிர் ஆணையம் செல்லாதது ஏன்?” – அண்ணா பல்கலை. விவகாரத்தில் குஷ்பு கேள்வி

சென்னை: “தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர்கள் விசாரணைக்கு சென்றபோது, அவர்களுடன் மாநில மகளிர் ஆணையம் ஏன் செல்லவில்லை? ‘யார் அந்த சார்’ என்பதற்கும் தற்போதுவரை பதில் இல்லை. கடுமையான தண்டனைகள் கொடுக்காதவரை நமது சமுதாயத்தில் இதுபோன்ற பிரச்சினைகள் நடந்து கொண்டுதான் இருக்கும்,” என நடிகை குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை தி.நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “அண்ணா பல்கலைக்கழக சம்பவத்துக்குப் பிறகாவது … Read more

பிஹார் தேர்வு விவகாரம்: பிரசாந்த் கிஷோர் சாகும் வரை உண்ணாவிரதம்

பாட்னா: பிஹார் மாநிலத்தின் அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தின் தேர்வுகளை ரத்து செய்யக் கோரி ஜன் சுராஜ் கட்சி தலைவரும், பிரபல தேர்தல் வியூக வகுப்பாளருமான பிரசாந்த் கிஷோர் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். பிபிஎஸ்சி தேர்வுகளால் பாதிக்கப்பட்ட பல தேர்வர்கள் இரண்டு வாரங்களாக போராட்டம் நடத்தி வரும் இடத்தில் இருந்து சில கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க காந்தி மைதானத்தில் வைத்து வியாழக்கிழமை இந்த உண்ணாவிரத போராட்டத்தை பிரசாந்த் கிஷோர் அறிவித்தார். … Read more

சகோதரிகளுடன் சமாதானம் ஆகிவிட்ட பிரபு, ராம்குமார் – சிவாஜி குடும்ப சொத்து விவகாரம் முடிவுக்கு வந்ததா?

நடிகர் சிவாஜி கணேசனின் மகள்கள் சாந்தி, தேன்மொழி இருவரும் தங்கள் சகோதரர்கள் பிரபு, ராம்குமார் இருவர் மீதும் குடும்ப சொத்து தொடர்பாக சில ஆண்டுகளுக்கு முன் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், தற்போது அவர்களுக்கிடையில்  சமரசம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இது  தொடர்பாக சிவாஜி குடும்பத்துக்கு நெருக்கமான சிலரிடம் பேசினோம். ”தமிழ் சினிமாவுல கூட்டுக் குடும்ப வாழ்க்கைக்கு உதாரணம் சொல்லணும்னா சிவாஜி குடும்பத்தைதான் சொல்வாங்க. சென்னை தி.நகர் தெற்கு போக் சாலையில் ஒன்றரை ஏக்கரில் மினி வெள்ளை மாளிகை போல … Read more

சென்னை விமான நிலையத்தில் குடிவரவு அனுமதிக்காக காத்திருக்க வேண்டிய அவசியமில்லை… ஜனவரி முதல் விரைவு குடிவரவு…

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ஜனவரி மாதம் முதல் நம்பகமான பயணி திட்டத்தின் கீழ் விரைவு குடிவரவு அனுமதி தொடங்க உள்ளதாக தி இந்து நாளிதழை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகி உள்ளது. இந்த வசதியின் மூலம், முன் சரிபார்க்கப்பட்ட மற்றும் குறைந்த ஆபத்துள்ள இந்திய குடிமக்கள் மற்றும் OCI கார்ட் பெற்ற வெளிநாடு வாழ் இந்திய குடிமக்கள் வழக்கமான குடியேற்ற வரிசைகளைத் தவிர்த்து பிரத்யேக மின் வாயில்களைப் பயன்படுத்தி விரைவாகக் கண்காணிக்கப்படுவார்கள் பதிவுசெய்யப்பட்ட பயணிகள் இ-கேட்களில் தங்கள் … Read more

Book Fair: "வெற்றிமாறன் படமாக்கும் சமயத்தில் இது வெளியாவது பொருத்தமானது" -கிராஃபிக் நாவலாக வாடிவாசல்

காலச்சுவடு பதிப்பகம் சி.சு. செல்லப்பா எழுதிய ‘வாடிவாசல்’ நாவலைப் படங்களுடன் கிராஃபிக் நாவலாக இந்த ஆண்டு வெளியிட்டுள்ளது. இந்த கிராஃபிக் நாவல் தற்போது வாசகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இது குறித்து காலச்சுவடு பதிப்பகத்தின் பதிப்பாசிரியரான அரவிந்தனிடம் பேசினோம். “தமிழ்நாட்டினுடைய பண்பாட்டு அடையாளங்களில் ஒன்று எனப் புகழப்படுகின்ற ஜல்லிக்கட்டு தொடர்பான ஒரு பிரதி நம்மிடம் இல்லை. ஜல்லிக்கட்டு என்றால் என்ன, அது எப்படி நடக்கும் ஆகியவற்றை தெரிந்துகொள்ள நூல்கள் எதுவும் இல்லை. ஆனால் ஜல்லிக்கட்டு பல தலைமுறைகளாக … Read more

ஜன.14 முதல் 17 வரை ‘சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா’ | நிகழ்விட விவரம்

சென்னை: சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சிகளை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜன.13 அன்று தொடங்கி வைக்கிறார். ஜன.14 முதல் ஜன.17 வரை நான்கு நாட்கள் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை 18 இடங்களில் சங்கமம் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னையில், தை மாதம் தொடக்கத்தில் பொங்கல் நாட்களில் சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா என்ற பிரம்மாண்ட … Read more

பயிர்க் காப்பீடு திட்டத்தை தொடர மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: இந்தாண்​டின் முதல் அமைச்​சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமை​யில் நேற்று நடைபெற்​றது. இதில் 2021-22 முதல் 2025-26 வரை ரூ.69,515.71 கோடி ஒட்டுமொத்த ஒதுக்​கீட்​டில் பிரதமரின் பயிர்க் காப்​பீட்டுத் திட்டம் மற்றும் வானிலை அடிப்​படையிலான பயிர்க் காப்​பீட்டுத் திட்​டத்தை 2025-26 வரை தொடர ஒப்புதல் அளிக்​கப்​பட்​டது. இந்த முடிவு 2025-26 வரை நாடு முழு​வதும் உள்ள விவசா​யிகளுக்கு இயற்​கைப் பேரழி​வு​களி​லிருந்து பயிர்களை பாது​காக்க உதவும். பிரதமரின் பயிர்க் காப்​பீட்டுத் திட்​டம், மறுசீரமைக்​கப்​பட்ட வானிலை அடிப்​படையிலான பயிர் … Read more