பொள்ளாச்சி பாலியல் வழக்கின் போது அதிமுக என்ன செய்தது? திமுக அமைச்சர் கேள்வி!

பொள்ளாச்சி பெண்கள் பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து கடந்த ஆட்சியில் நாங்கள் போராட்டம் செய்த பொழுது அதிமுகவினர் என்ன நடவடிக்கை எடுத்தனர்? தொழில் நிர்வாக துறை அமைச்சர் தா மோ அன்பரசன் கேள்வி.

பாஜக இளைஞர்களின் எதிர்காலத்தை அழிக்கிறது : ராகுல் காந்தி

டெல்லி பாஜக இளைஞர்களின் எதிர்க்கலத்தை அழிக்கிறது என ராகுல் காந்தி கூறியுள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ‘எக்ஸ்’ வலைதள பக்கத்தில் “பா.ஜ.க. ஏகலைவனைப் போல் இந்திய இளைஞர்களின் கட்டைவிரலை வெட்டி, அவர்களின் எதிர்காலத்தை அழிக்கிறது. அரசு பணிக்கான ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பு முறையாக வெளியிடப்படுவதில்லை. அவ்வாறு வெளியிடப்பட்டாலும் தேர்வுகள் சரியான நேரத்தில் நடத்தப்படுவதில்லை. தேர்வுகள் நடத்தப்பட்டால், வினாத்தாள்கள் கசிந்துவிடுகின்றன. இளைஞர்கள் நீதி கோரும்போது, அவர்களின் குரல் இரக்கமின்றி நசுக்கப்படுகிறது. உத்தர பிரதேசம் மற்றும் பீகாரில் … Read more

அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதை மறைக்கும் அளவிற்கு ரோகித் சிறந்த பேட்ஸ்மேன் கிடையாது – மஞ்ரேக்கர்

மும்பை, இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரின் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. இதில் மோசமான பார்ம் காரணமாக ரோகித் விலகிய நிலையில், பும்ரா கேப்டனாக செயல்படுகிறார். மேலும் டாசின்போது, ரோகித் தாமாக முன்வந்து இந்த போட்டியிலிருந்து ஓய்வு எடுப்பதாக தங்களிடம் கூறினார் என்று பொறுப்பு கேப்டன் பும்ரா தெரிவித்தார். இந்நிலையில் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதை மறைக்கும் அளவிற்கு ரோகித் சிறந்த பேட்ஸ்மேன் கிடையாது என்று இந்திய முன்னாள் … Read more

வணிக வளாகம் மீது விமானம் மோதி விபத்து – 2 பேர் பலி

வாஷிங்டன், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் நேற்று சிறிய ரக விமானம் வானில் பறந்துகொண்டிருந்தது. அந்த விமானத்தில் 20 பேர் பயணித்தனர். புலர்டன் நகர் வான்பரப்பில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் விபத்துக்குள்ளானது. அப்பகுதியில் உள்ள வணிக வளாகத்தின் மேற்கூரை மீது மோதி விமானம் தீப்பற்றி எரிந்தது. இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணித்த 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 18 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் … Read more

சீனாவில் வேகமாக பரவும் புதிய HMPV வைரஸ்…. அதிர்ச்சியில் உலக நாடுகள்

கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, உலகம், அதன் தாக்கத்தில் இருந்து விடுபட்ட நிலையில், 5 ஆண்டுகள் கழித்து, சீனாவில் புதிய வகை வைரஸ் ஒன்று பரவி வருவதாக வெளியாகி இருக்கும் செய்தி உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

சென்னை: லவ் டார்ச்சர்; இளம்பெண்மீது பெட்ரோல் ஊற்றிய உணவு டெலிவரி பாய் – நண்பனுடன் கைது!

சென்னை யானைகவுனி பகுதியில் 19 வயதாகும் இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் குடியிருக்கும் அர்ஜூன் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் காதலித்துள்ளனர். இந்த நிலையில் அர்ஜூனின் நடவடிக்கைகள் பிடிக்காததால் அவரை விட்டு விலகியிருக்கிறார் இளம்பெண். ஆனால் இளம்பெண்ணை பின்தொடர்ந்து லவ் டார்ச்சர் கொடுத்திருக்கிறார் அர்ஜூன். இந்த நிலையில் கடந்த 2-ம் தேதி வேலை முடிந்து அந்த இளம்பெண், வால்டாக்ஸ் ரோடு, கல்யாணபுரம் … Read more

ஆடுகளை அடைக்கும் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்ட குஷ்பு, பாஜகவினர்: மதுரையில் பரபரப்பு

மதுரை: மதுரையில் தடையை மீறி நீதி யாத்திரை நடத்த முயன்று கைதான நடிகை குஷ்பு மற்றும் பாஜகவினர் ஆடுகள் அடைக்கப்பட்டிருந்த மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தை கண்டித்து தமிழக பாஜக மகளிரணி சார்பில் மதுரை செல்லத்தம்மன் கோயில் முன்பு நீதி யாத்திரை தொடக்க நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. இந்த யாத்திரைக்கு போலீஸார் அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறி பாஜகவினர் நீதி யாத்திரையை தொடங்கினர். இதையடுத்து பாஜக தேசிய செயற்குழு … Read more

மணிப்பூரின் அமைதியை விரும்பாதவர்களே நான் மன்னிப்பு கேட்டதை அரசியலாக்குகிறார்கள் : முதல்வர் பிரேன் சிங்

இம்பால்: மணிப்பூர் இனக்கலவரம் விஷயத்தில் நான் மன்னிப்பு கோரியதை அரசியலாக்குபவர்கள், மணிப்பூரின் அமைதிய விரும்பாதவர்கள் என்று அம்மாநில முதல்வர் பிரேன் சிங் தெரிவித்துள்ளார். “மணிப்பூர் இனக்கலவரம் தொடர்பாக நான் மன்னிப்பு கோரியதை அரசியலாக்குபவர்கள், மாநிலம் அமைதியின்றி இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களே. அதைத்தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். எதிர்க்கட்சிகளுக்கு எந்த கொள்கையும் இல்லை. எனது வேதனையையும், துயரத்தையும் வெளிப்படுத்தும் வகையில் நான் பேசி இருந்தேன். வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள், தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்கள் ஆகியோரிடமே நான் மன்னிப்பு கோரினேன். பயங்கரவாதிகளிடம் … Read more

அமெரிக்க அதிபர் மனைவிக்கு மோடி அளித்த ரூ.17 லட்சம் மதிப்பிலான வைரம்: மிகுந்த மதிப்புமிக்கதாக அறிவிப்பு

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2023ம் ஆண்டு ரூ. 17 லட்சம் மதிப்பு மிக்க வைரத்தை பரிசளித்துள்ளார். இது, வேறு எந்த ஒரு வெளிநாட்டு தலைவரும் அளித்த பரிசுகளைவிடவும் மதிப்புமிக்கது என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர், அவரது மனைவி உள்பட முக்கிய தலைவர்கள் கடந்த 2023ம் ஆண்டு பெற்ற பரிசுப் பொருட்கள் குறித்த விவரங்களை அந்நாட்டு வெளியுறவுத்துறை நேற்று (ஜன. 2) வெளியிட்டது. … Read more

சங்ககிரி ராஜ்குமாரின் Bioscope படம் எப்படி உள்ளது? திரை விமர்சனம்!

சங்ககிரி ராஜ்குமார் இயக்கத்தில் 2011ம் ஆண்டு வெளியான வெங்காயம் படத்தை எடுக்க எவ்வளவு சிரமங்கள் சந்தித்தேன் என்பதை Bioscope மூலம் படமாக எடுத்துள்ளார்.