“பல்லடம் வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்” – ஆர்ப்பாட்டத்தில் அண்ணாமலை வலியுறுத்தல்

பல்லடம்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொலை வழக்கில், 42 நாட்களாகியும் குற்றவாளிகள் கண்டுபிடிக்காத நிலையில், வழக்கை சிபிஐயிடம் தமிழ்நாடு முதல்வர் ஒப்படைக்க வேண்டும் என பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தினார். பல்லடம் அருகே சேமலைக்கவுண்டன்பாளையத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, தாய் மற்றும் மகன் ஆகிய மூவர் கடந்த நவ. மாத இறுதியில் மர்மநபர்களால் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், 42 நாட்களாகியும் குற்றவாளிகளை கண்டுபிடிக்காமல் இருக்கும், திமுக அரசை கண்டித்தும் பாஜக மாநிலத் தலைவர் … Read more

சத்தீஸ்கர் எஃகு ஆலையில் ‘சிலோ’ இடிந்து விபத்து: பலர் சிக்கித் தவிப்பதாக அச்சம்

முங்கேலி: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் உள்ள எஃகு ஆலையில், சிலோ (Silo) அமைப்பு இடிந்து விழுந்ததில் இருவர் காயமடைந்துள்ளனர். மேலும், இடிபாடுகளில் பலர் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த விபத்து குறித்து முங்கேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் போஜ்ராம் படேல் கூறுகையில், “முங்கேலி மாவட்டத்தின் சரகான் பகுதியில் உள்ள எஃகு உருக்கு ஆலையில் வியாழக்கிழமை பிற்பகல் இந்த விபத்து நடந்துள்ளது. பழைய பொருள்களை போட்டு வைக்கப் பயன்படும் களஞ்சியம் போன்ற … Read more

இஸ்ரேலிய தாக்குதலில் இதுவரை காசாவில் 46,006 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு

காசா: காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 46,006 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுவரை மொத்தம் 46,006 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 1,09,378 பேர் காயமடைந்துள்ளதாகவும் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இறந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்றும் அது கூறியுள்ளது. அதேநேரத்தில், இறந்தவர்களில் எத்தனை பேர் போராளிகள் அல்லது பொதுமக்கள் என்பதை அது கூறவில்லை. மற்றொருபுறம், 17,000-க்கும் மேற்பட்ட போராளிகளை தங்கள் ராணுவம் கொன்றுள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. எனினும், … Read more

ஒப்போ ரெனோ 13 ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒப்போ ரெனோ 13 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இந்த போனுடன் ஒப்போ ரெனோ 13 புரோ மாடலும் அறிமுகமாகி உள்ளது. செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் சாதன பொருட்களை உற்பத்தி செய்து, உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது சீன தேச நிறுவனங்களில் ஒன்றான ஒப்போ. இந்நிறுவனத்தின் தயாரிப்புக்கு என இந்திய மக்களிடையே பிரத்யேக வரவேற்பு இருப்பது வழக்கம். அதன் … Read more

இந்தி பிக்பாஸில் ஸ்ருதிகா வாங்கிய சம்பளம்! ஒரு நாளைக்கு இவ்வளவா?

Bigg Boss 18 Shrutika Arjun Salary Per Day : தமிழ் ரசிகர்கள் மத்தியில் டிஜிட்டல் திரை மூலம் பிரபலமான ஸ்ருதிகா, சமீபத்தில் வட இந்தியாவில் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். இதையடுத்து, அவரது சம்பள விவரம் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது.  

Pongal: பொங்கலை தனித்துவமாக கொண்டாடிய விஸ்வநாதன் ஆனந்த்… என்னென்னு பாருங்க?

Pongal 2025 Celebration: சமூக ஆர்வலர் அப்சரா ரெட்டியின் குட் டீட்ஸ் கிளப்பின் பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தின் செஸ் ஜாம்பவானான கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த், அவரது மனைவி அருணா மற்றம் மகன் அகில் விஸ்வநாதன் கலந்து கொண்டனர்.

Letterboxd: `மெய்யழகன், வாழை, மகாராஜா, லப்பர் பந்து’ – உலகளவில் கவனம் பெற்ற தமிழ் திரைப்படங்கள்

உலகம் முழுவதும் பல மில்லியன் சினிமா ரசிகர்கள் ‘லெட்டர் பாக்ஸ்ட்’ (Letterboxed) செயலியைப் பயன்படுத்துகின்றனர். தேடித் தேடி திரைப்படம் பார்ப்பவர்களுக்கு இது இரைகள் செழித்த சினிமா காடு, எல்லையில்லாமல் வேட்டையாடலாம்! சினிமா ரசிகர்கள், அவர்கள் பார்க்கும் திரைப்படங்களை இதில் பட்டியலிட்டு மதிப்பெண் வழங்கி, தங்களது கருத்துக்களை பதிவு செய்யலாம். 2024-ம் ஆண்டுக்கான லெட்டர் பாக்ஸ்ட் அறிக்கை வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு உலக அளவில் பிரபலமான படங்களின் வரிசையில் தமிழ் திரைப்படங்களும் இடம் பெற்றுள்ளன. இந்த ஆண்டு ஒட்டுமொத்தமாக … Read more

43 இன்ச் ஸ்மார்ட் டிவி வெறும் ரூ.12 ஆயிரம்… அமேசானில் குவிந்து கிடக்கும் ஆப்பர்கள்!

Amazon Offer Smart TV: புத்தாண்டில் பழைய ஸ்மார்ட் டிவி தூக்கி எறிந்துவிட்டு புதிய ஸ்மார்ட் டிவியை வாங்க வேண்டும் என திட்டமிட்டுள்ளீர்கள் என்றால் உங்களுக்கானதுதான் இந்த செய்தி. அமேசான் தற்போது புத்தாண்டை ஒட்டி கூகுள் மற்றும் ஆண்ட்ராய்டு தள்ளுபடி விலையில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இதில் சுமார் 50 சதவீதத்திற்கும் மேலாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல்களில் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. இந்த தள்ளுபடிகளை பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் உங்கள் வீட்டையே ஒரு குட்டி திரையரங்கமாகவே மாற்றலாம். அமேசான் தள்ளுபடிகளில் … Read more

மகாகும்பமேளாவில் உத்தரப்பிரதேசத்துக்கு ரூ. 2 லட்சம் கோடி வருவாய் : யோகி 

லக்னோ மகாகும்பமேளாவில் உத்தரப்பிரதேச அரசு ரூ. 2 லட்சம் கோடி வருவாய் ஈட்டும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.   வருகிற 13-ந்தேதி முதல் பிப்ரவரி 26-ந்தேதி வரை உத்தர பிரதேசத்தில் மகா கும்பமேளா நடைபெற உள்ள நிலையில், தெய்வீக உத்தர பிரதேசம்: நிச்சயம் மேற்கொள்ள வேண்டிய புனித யாத்திரை என்ற தலைப்பில் பிரபல ஊடக நிறுவனம் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார். அப்போது யோகி செய்தியாளர்களிடம், ”இந்த … Read more

கொலையானவர் 17 ஆண்டுகளுக்கு பின் வருகை; போலீசார் அதிர்ச்சி

பாட்னா, பீகாரின் ரோத்தஸ் மாவட்டத்தில் திவாரியா கிராமத்தில் வசித்து வந்தவர் நாதுனி பால் (வயது 50). 2008-ம் ஆண்டு செப்டம்பரில் இவர் காணாமல் போய் விட்டார் என போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதன்பின்னர், அவருடைய குடும்பத்தினர் போலீசிடம் சென்று, 4 உறவினர்கள் பாலின் நிலங்களை அபகரித்து கொண்டு, அவரை படுகொலை செய்து விட்டனர் என குற்றச்சாட்டாக கூறினர். இதனால் கொலை வழக்கு பதிவானது. அந்த தருணத்தில் பாலின் உடல் கண்டெடுக்கப்படவில்லை. இந்த சம்பவத்தில் பாலின் தந்தை வழி … Read more