ஜெர்மன் புத்தாண்டு கொண்டாட்டம் : பட்டாசு வெடித்ததில் ஐந்து பேர் உயிரிழப்பு

ஜெர்மனியில் புத்தாண்டு தினத்தன்று பட்டாசு வெடித்ததில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட வெவ்வேறு அசம்பாவிதங்களில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. பைரோடெக்னிக் ராக்கெட் மற்றும் வெடிகுண்டுகளால் ரைன்-வெஸ்ட்பாலியா, சாக்சோனி, ஹாம்பர்க் மற்றும் கிரெமன் ஆகிய இடங்களில் நடந்த வெவ்வேறு விபத்துகளில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். சாக்சோனியில் உள்ள ஓஸ்சாட்ஸில், 45 வயதான ஒருவர் “பைரோடெக்னிக் வெடிகுண்டுக்கு” தீ வைத்ததில் தலையில் பலத்த காயங்களால் இறந்தார். இது சக்திவாய்ந்த எஃப்4 வகை பட்டாசு, இதை வாங்குவதற்கு … Read more

ஏமன்: கேரள செவிலியருக்கு மரண தண்டனை; ஒப்புதல் அளித்த அதிபர்… காப்பாற்றப் போராடும் குடும்பத்தினர்!

கேரள செவிலியர் ஒருவருக்கு ஏமன் நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த தண்டனைக்கு ஏமன் அதிபர் அனுமதி வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கேரளாவைச் சேர்ந்தவர் நிமிஷா ப்ரியா. ஏமன் தலைநகர் சனாவில் செவிலியராகப் பணியாற்றி வந்திருக்கிறார். இவர் ஏமனைச் சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்பவருடன் சேர்ந்து சனாவில் கடந்த 2015-ல் கிளினிக் ஒன்றைத் தொடங்கி இருக்கிறார். ஆனால் மஹ்தி மொத்த வருவாயையும் எடுத்துக் கொண்டு நிமிஷாவை உடல்ரீதியாக துன்புறுத்தி இருக்கிறார். மேலும் நிமிஷாவின் … Read more

“திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை” – சசிகலா சாடல்

சென்னை: “திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து சட்டம் – ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது. மக்கள் நிறைய பேர் பாதிக்கப்படுகின்றனர். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை” என்று சசிகலா குற்றம்சாட்டினார். சென்னை போயஸ் தோட்டத்தில் இல்லத்தில் சசிகலா தனது ஆதரவாளர்களை இன்று (ஜன.1) சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “நிதி நிலை சரியில்லை என்று நான் அப்போதே சொன்னேன். இதை இப்போதுதான் திமுக அரசு ஒப்புக்கொண்டுள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரொக்கத் தொகை தரப்படவில்லை. திமுக ஆட்சி … Read more

‘சைபர் குற்றங்களுக்கு அதிகம் பயன்படுத்தப்படும் தளம் வாட்ஸ் அப்’ – உள்துறை அமைச்சகம் அறிக்கை

புதுடெல்லி: சைபர் குற்றங்களுக்கு அதிகம் பயன்படுத்தும் தளமாக வாட்ஸ் அப் உள்ளது என்றும், அதற்கு அடுத்த இடத்தில் டெலிகிராம் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்கள் இருப்பதாகவும் உள்துறை அமைச்சகத்தின் சமீபத்திய அறிக்கை தெரிவித்துள்ளது. சென்ற ஆண்டின் (2024) முதல் மூன்று மாதங்களில் வாட்ஸ் அப் மூலமான இணைய மோசடி தொடர்பாக 43,797 புகார்களும் அதனைத் தொடர்ந்து டெலிகிராமுக்கு எதிராக 22,680, இன்ஸ்டாகிராமுக்கு எதிராக 19,800 புகார்களும் பதிவாகியுள்ளன. இது தொடர்பான மத்திய உள்துறை அமைச்சகத்தின் 2023-24 அறிக்கையில், “சைபர் … Read more

'ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வையுங்கள்…' சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தியின் பேச்சு

Minister Moorthy Viral Video: ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் பல வரலாறுகள் மறைக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் மூர்த்தி பேசியது தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

நிதிஷ் ரெட்டியை போட்டுத்தாக்க… உள்ளே வரும் இந்த வீரர் – இந்திய அணிக்கு மேலும் தலைவலி!

India vs Australia Latest News Updates, Sydney Test: இந்தியா ஆஸ்திரேலியா அணிக்கு இடையிலான பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நான்கு டெஸ்ட் போட்டிகள் நிறைவடைந்த நிலையில், 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் ஜனவரி 3ஆம் தேதி சிட்னி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இப்போட்டி இந்திய அணிக்கு மிக … Read more

அமெரிக்காவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது டிரக் மோதியதில் 10 பேர் பலி 30 பேர் காயம்

அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது டிரக் மோதியதில் 10 பேர் கொல்லப்பட்டனர். நியூ ஆர்லியன்ஸின் பிரெஞ்சு குவாட்டரில் உள்ள போர்பன் தெருவில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் 30க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3 மணியளவில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் போலீசார் உள்ளிட்ட சிலருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. அதி வேகமாக வந்த ஒரு வெள்ளை நிற டிரக் நூற்றுக்கணக்கானோர் கூடியிருந்த கூட்டத்தின் இடையே அவர்களை வேண்டுமென்றே … Read more

‘தமிழக அரசுப் பள்ளிகளை தனியாருக்கு தத்துக் கொடுப்பது நியாயமற்றது’ – மார்க்சிஸ்ட் கண்டனம்

சென்னை: “கல்வி கொடுக்க வேண்டியது அரசின் முதன்மையான கடமையாக இருக்க வேண்டுமே தவிர, அரசு பள்ளிகளுக்கு செலவிடாமல் அதிலிருந்து தமிழக அரசு தப்பிப்பது, நிதி சுமையை காரணம் காட்டி தனியாருக்கு தத்துக் கொடுப்பது முற்றிலும் நியாயமற்ற நடவடிக்கையாகும். இந்த நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அடுத்த கல்வியாண்டில் (2025-2026) 500 அரசுப் பள்ளிகளை தத்தெடுத்து அந்தப் … Read more

2025-ஐ சீர்திருத்த ஆண்டாக அறிவித்தது பாதுகாப்பு அமைச்சகம்: காரணம் என்ன?

புதுடெல்லி: 2025-ம் ஆண்டை சீர்திருத்த ஆண்டாக அறிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சகம், இது ஆயுதப்படைகளை தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட போருக்குத் தயாராக உள்ள படையாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டிருக்கும் என தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புத்தாண்டை முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சகத்தின் அனைத்து செயலாளர்களுடன் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் பல்வேறு திட்டங்கள், சீர்திருத்தங்கள் மற்றும் முன்னோக்கி செல்வதற்கான வழிமுறைகள் குறித்து ஆய்வு செய்யும் கூட்டம் நடைபெற்றது. தற்போது நடைமுறையில் உள்ள மற்றும் … Read more