‘யார் அந்த சார்’: அண்ணா பல்கலை. மாணவி பாலியல் விவகாரத்தை நேர்மையாக விசாரிக்க திருமாவளவன் வலியுறுத்தல்…

சென்னை: அண்ணா பல்கலை. மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தை நேர்மையாக விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ள விசிக தலைவர் திருமாவளவன் ‘யார் அந்த சார்?’ என்கிற சந்தேகத்தை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும், குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார். சென்னை விமான நிலையத்தில்  இன்று செய்தியாளர்களைச் சந்தித்த திமுக கூட்டணி கட்சியான  விசிக தலைவர் திருமாவளவன், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்காரம் தொடர்பான கேள்விகளுக்கு  பதில் அளித்தார். … Read more

சமூக மோதலால் மூடப்பட்ட கோவில் 44 ஆண்டுகளுக்கு பின்பு திறப்பு

லக்னோ, உத்தரபிரதேச மாநிலத்தில் மூடப்பட்டு கிடக்கும் கோவில்களை வழிபாட்டிற்கு திறக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் எதிரொலியாக மொரதாபாத் மாவட்டத்தில் தவுலதாபாக் பகுதியில் உள்ள ஒரு கோவில் 44 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று மீண்டும் திறப்பு விழா கண்டது. 2 சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக மூடப்பட்டுக் கிடந்த கோவில், அரசு நிர்வாக முயற்சியின் மூலம் மீண்டும் திறக்கப்பட்டு உள்ளது. காவல்துறை மற்றும் நிர்வாக அதிகாரிகள் முன்னிலையில் கோவில் திறப்பு விழா நடந்தது. மக்கள் ஏகோபித்த ஆதரவு … Read more

3-வது டி20: குசல் பெரேரா அதிரடி சதம்.. நியூசிலாந்துக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த இலங்கை

நெல்சன், நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 ஆட்டங்கள் கொண்ட டி20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 2 போட்டிகளின் முடிவிலேயே நியூசிலாந்து தொடரை கைப்பற்றிவிட்டது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் இன்று நடைபெற்ற வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன நிசங்கா 14 … Read more

'எல்லாம் சரியாகிவிடும்': பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் ரஷிய மக்களுக்கு புதின் புத்தாண்டு வாழ்த்து

மாஸ்கோ, உக்ரைன் மீது ரஷிய ராணுவம் கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தாக்குதலை தொடங்கியது. ரஷியாவின் தாக்குதலை மேற்கத்திய நாடுகளின் பொருளாதார மற்றும் ராணுவ உதவியுடன் உக்ரைன் எதிர்த்து வருகிறது. இந்த போரில் இருதரப்பிலும் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைனின் உள்கட்டமைப்புகளை ரஷியா தொடர்ந்து தாக்கி வருகிறது. அதே சமயம், இந்த போரை தொடர்ந்து நடத்துவதற்கு ரஷியா கடுமையான பொருட்செலவுகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதன் விளைவாக ரஷியாவில் பொருளாதார நெருக்கடி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. விலைவாசி … Read more

பாமக: `அன்புமணியுடன் கருத்து வேறுபாடு இல்லை… முகுந்தன்தான் இளைஞரணி தலைவர்!' – மருத்துவர் ராமதாஸ்

புதுச்சேரியை ஒட்டியிருக்கும் விழுப்புரம் மாவட்டம், பட்டானூரில், தமிழ்நாடு – புதுச்சேரி பா.ம.கவின் சிறப்பு புத்தாண்டு பொதுக்குழு கூட்டம் 2024 டிசம்பர் 28-ம் தேதி நடைபெற்றது. பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் கௌரவ தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய மருத்துவர் ராமதாஸ், “அன்புமணிக்கு உதவியாக மாநில இளைஞரணி தலைவராக முகுந்தன் பரசுராமனை அறிவிக்கிறேன்” என்றார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அன்புமணி, “அவன் கட்சியில் … Read more

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் தீ விபத்து: நோயாளிகள்  வேறு தளத்துக்கு மாற்றம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை புதிய கட்டிடத்தில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தால், கரும்புகை ஏற்பட்டு நோயாளிகள் உடனடியாக வேறு தளத்துக்கு மாற்றப்பட்டனர். துரித நடவடிக்கையால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை புதிய கட்டிடம் ஐந்து தளங்களில் செயல்பட்டு வருகிறது. இங்கு 500-க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். புதன்கிழமை இரவு 11.30 மணியளவில் மருத்துவமனையின் இரண்டாவது தளத்தில் உள்ள இன்வெர்டர் அறையில் திடீரென தீப்பற்றி … Read more

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2024-ல் ரூ.1,365 கோடி உண்டியல் வருவாய்

திருமலை: உலக பணக்கார கடவுளாக பக்தர்களால் போற்றி வழிபடப்படும் திருப்பதி ஏழுமலையானுக்கு, கடந்த 2024-ம் ஆண்டில் 1,365 கோடி ரூபாயை உண்டியல் மூலம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர் எனத் தெரியவந்துள்ளது. திருப்பதி ஏழுமலையானை சுமார் 60 முதல் 70 ஆயிரம் பக்தர்கள் நாள்தோறும் தரிசித்து வருகின்றனர். வார கடைசியான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதலாக மேலும் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது வழக்கம். இதுவே பிரம்மோற்சவம், ஆனிவார ஆஸ்தானம், … Read more

IND vs AUS: ரோஹித் சர்மா நீக்கம்? செய்தியாளர் சந்திப்பில் கம்பீர் பரபரப்பு தகவல்!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் தொடரின் கடைசி மற்றும் ஐந்தாவது டெஸ்ட் போட்டி நாளை சிட்னியில் நடைபெற உள்ளது. தற்போது இந்த தொடர் 1-2 என்ற நிலையில் உள்ளது. இந்திய அணி ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றால் பார்டர் கவாஸ்கர் கோப்பையை தங்கள் வசம் வைத்துக் கொள்ளலாம். மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்வதற்கு சிறிய வாய்ப்பு உள்ளது. மறுபுறம் தோல்வியடைந்தால் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு பார்டர் கவாஸ்கர் … Read more

கலைஞர் கைவினை திட்டத்தில் கடந்த 20 நாட்களில் 8,800 பேர் விண்ணப்பம்! தமிழ்நாடு அரசு தகவல்…

சென்னை: மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்திற்கு மாற்றாக தமிழ்நாடு அரசால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள கலைஞர் கைவினை திட்டத்தில் சேர கடந்த 20 நாட்களில்  8,862 பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், கைவினை கலைஞர்களை தொழில்முனைவோர்களாக உயர்த்திட கலைஞர் கைவினை திட்டம் என்ற புதிய திட்டத்தை கடந்த  2024ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி தமிழ்நாடு அரசு அறிவித்தார். இந்த திட்டத்தில் கைவினை கலைஞர்களுக்கு அதிகபட்சமாக ரூ.3 லட்சம் கடன் … Read more

இந்தியா, பாகிஸ்தான் இடையே அணு ஆயுத விவரங்கள் பரிமாற்றம்

இஸ்லாமாபாத், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே, இருநாடுகளில் உள்ள அணுசக்தி நிலைகள் மற்றும் அணு ஆயுத கிடங்குகள் மீதான பரஸ்பர தாக்குதல்களை தடை செய்யும் ஒப்பந்தம் கடந்த 1988-ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதி நிறைவேற்றப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி இரு நாடுகளும் தங்கள் அணு ஆயுதங்கள் மற்றும் நிலைகள் குறித்த விவரங்களை ஆண்டுதோறும் பரிமாறிக்கொள்ள வேண்டும். அதன்படி கடந்த 1992 ஜனவரி 1-ந்தேதி முதல் ஆண்டுதோறும் இந்த பரிமாற்ற நடைமுறை அமலில் இருக்கிறது. அதன்படி இந்த ஆண்டும் இந்தியா, … Read more