“500 அரசுப் பள்ளிகளை மேம்படுத்த கூட தமிழக அரசிடம் நிதி இல்லையா?” – அண்ணாமலை

சென்னை: “500 அரசுப் பள்ளிகளை மேம்படுத்தக் கூட தமிழக அரசிடம் நிதி இல்லையா? மாணவ சமுதாயத்தின் கல்விக்குக் கூட, தனியார் அமைப்புகளிடம் உதவி கேட்கும் நிலையில் திமுக அரசு தள்ளப்பட்டிருக்கிறதா? அடிப்படை வசதிகளைக் கூட ஏற்படுத்தாமல், இந்த நிதியை என்ன செய்து கொண்டிருக்கிறது திமுக அரசு?” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “நேற்றைய தினம் நடைபெற்ற தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் துவக்க … Read more

ம.பி.யில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் 2 பேருக்கு பொருத்தம்

மூளைச்சாவு அடைந்த இந்தூர் நபரின் உடல் உறுப்புகள் சிறப்பு விமானத்தில் மும்பை கொண்டு செல்லப்பட்டு இருவருக்கு பொருத்தப்பட்டன. அவரது இரண்டு சிறுநீரகங்களும் உள்ளூர் நபர்கள் இருவருக்கு பொருத்தப்பட்டன. மத்தியப் பிரதேசம் இந்தூரைச் சேர்ந்த வியாபாரி சுரேந்திர பார்வல்(28). ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த இவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவுக்காக அறுவை சிகிச்சை மேற்கொண்டார். சமீபத்தில் அவருக்கு குடல் வால் பிரச்சினை ஏற்பட்டது. இதற்காக அறுவை சிகிச்சை மேற்கொண்டபோது, அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டது. கடந்த … Read more

ஜெர்மன் புத்தாண்டு கொண்டாட்டம் : பட்டாசு வெடித்ததில் ஐந்து பேர் உயிரிழப்பு

ஜெர்மனியில் புத்தாண்டு தினத்தன்று பட்டாசு வெடித்ததில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட வெவ்வேறு அசம்பாவிதங்களில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. பைரோடெக்னிக் ராக்கெட் மற்றும் வெடிகுண்டுகளால் ரைன்-வெஸ்ட்பாலியா, சாக்சோனி, ஹாம்பர்க் மற்றும் கிரெமன் ஆகிய இடங்களில் நடந்த வெவ்வேறு விபத்துகளில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். சாக்சோனியில் உள்ள ஓஸ்சாட்ஸில், 45 வயதான ஒருவர் “பைரோடெக்னிக் வெடிகுண்டுக்கு” தீ வைத்ததில் தலையில் பலத்த காயங்களால் இறந்தார். இது சக்திவாய்ந்த எஃப்4 வகை பட்டாசு, இதை வாங்குவதற்கு … Read more

ஏமன்: கேரள செவிலியருக்கு மரண தண்டனை; ஒப்புதல் அளித்த அதிபர்… காப்பாற்றப் போராடும் குடும்பத்தினர்!

கேரள செவிலியர் ஒருவருக்கு ஏமன் நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த தண்டனைக்கு ஏமன் அதிபர் அனுமதி வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கேரளாவைச் சேர்ந்தவர் நிமிஷா ப்ரியா. ஏமன் தலைநகர் சனாவில் செவிலியராகப் பணியாற்றி வந்திருக்கிறார். இவர் ஏமனைச் சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்பவருடன் சேர்ந்து சனாவில் கடந்த 2015-ல் கிளினிக் ஒன்றைத் தொடங்கி இருக்கிறார். ஆனால் மஹ்தி மொத்த வருவாயையும் எடுத்துக் கொண்டு நிமிஷாவை உடல்ரீதியாக துன்புறுத்தி இருக்கிறார். மேலும் நிமிஷாவின் … Read more

“திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை” – சசிகலா சாடல்

சென்னை: “திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து சட்டம் – ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது. மக்கள் நிறைய பேர் பாதிக்கப்படுகின்றனர். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை” என்று சசிகலா குற்றம்சாட்டினார். சென்னை போயஸ் தோட்டத்தில் இல்லத்தில் சசிகலா தனது ஆதரவாளர்களை இன்று (ஜன.1) சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “நிதி நிலை சரியில்லை என்று நான் அப்போதே சொன்னேன். இதை இப்போதுதான் திமுக அரசு ஒப்புக்கொண்டுள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரொக்கத் தொகை தரப்படவில்லை. திமுக ஆட்சி … Read more

‘சைபர் குற்றங்களுக்கு அதிகம் பயன்படுத்தப்படும் தளம் வாட்ஸ் அப்’ – உள்துறை அமைச்சகம் அறிக்கை

புதுடெல்லி: சைபர் குற்றங்களுக்கு அதிகம் பயன்படுத்தும் தளமாக வாட்ஸ் அப் உள்ளது என்றும், அதற்கு அடுத்த இடத்தில் டெலிகிராம் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்கள் இருப்பதாகவும் உள்துறை அமைச்சகத்தின் சமீபத்திய அறிக்கை தெரிவித்துள்ளது. சென்ற ஆண்டின் (2024) முதல் மூன்று மாதங்களில் வாட்ஸ் அப் மூலமான இணைய மோசடி தொடர்பாக 43,797 புகார்களும் அதனைத் தொடர்ந்து டெலிகிராமுக்கு எதிராக 22,680, இன்ஸ்டாகிராமுக்கு எதிராக 19,800 புகார்களும் பதிவாகியுள்ளன. இது தொடர்பான மத்திய உள்துறை அமைச்சகத்தின் 2023-24 அறிக்கையில், “சைபர் … Read more

'ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வையுங்கள்…' சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தியின் பேச்சு

Minister Moorthy Viral Video: ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் பல வரலாறுகள் மறைக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் மூர்த்தி பேசியது தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

நிதிஷ் ரெட்டியை போட்டுத்தாக்க… உள்ளே வரும் இந்த வீரர் – இந்திய அணிக்கு மேலும் தலைவலி!

India vs Australia Latest News Updates, Sydney Test: இந்தியா ஆஸ்திரேலியா அணிக்கு இடையிலான பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நான்கு டெஸ்ட் போட்டிகள் நிறைவடைந்த நிலையில், 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் ஜனவரி 3ஆம் தேதி சிட்னி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இப்போட்டி இந்திய அணிக்கு மிக … Read more

அமெரிக்காவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது டிரக் மோதியதில் 10 பேர் பலி 30 பேர் காயம்

அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது டிரக் மோதியதில் 10 பேர் கொல்லப்பட்டனர். நியூ ஆர்லியன்ஸின் பிரெஞ்சு குவாட்டரில் உள்ள போர்பன் தெருவில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் 30க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3 மணியளவில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் போலீசார் உள்ளிட்ட சிலருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. அதி வேகமாக வந்த ஒரு வெள்ளை நிற டிரக் நூற்றுக்கணக்கானோர் கூடியிருந்த கூட்டத்தின் இடையே அவர்களை வேண்டுமென்றே … Read more