‘வளர்ந்த இந்தியா’வுக்கு கடினமாக உழைப்போம்: ஆங்கில புத்தாண்டில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி
புதுடெல்லி: வளர்ந்த இந்தியா கனவை நனவாக்க இன்னும் கடினமாக உழைப்போம் என புத்தாண்டு தினத்தில் பிரதமர் மோடி உறுதி எடுத்துள்ளார். புத்தாண்டை முன்னிட்டு பிரதமர் மோடி நேற்று வாழ்த்து செய்தி வெளியிட்டார். அதில் இந்தாண்டு அனைவருக்கும் புதிய வாயப்புகள், வெற்றி மற்றும் முடிவற்ற மகிழ்ச்சியை கொண்டு வரட்டும். அனைவருக்கும் நல்ல ஆரோக்கியமும், செழிப்பும் கிடைக்கட்டும்’’ என கூறியுள்ளார். வளர்ந்த இந்தியா கனவை நனவாக்க நாங்கள் இன்னும் கடினமாக உழைப்பதில் உறுதியாக உள்ளோம் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். … Read more