தமிழக மீனவர்கள் தாயகம் திரும்பினர்

ராமேசுவரம்: இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 20 பேர் தாயகம் திரும்பினர். இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க கடந்த மாதம் இந்திய வருகையின்போது, பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் இரு நாட்டு மீனவர்கள் பிரச்சினைகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. அதனடிப்படையில், இலங்கை நீதிமன்றங்களால் சிறை தண்டனை வழங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழக மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை தரப்பில் ஒப்புக்கொள்ளப்பட்டது. இதனடிப்படையில், இலங்கை சிறையிலிருந்து முதல்கட்டமாக விடுதலை செய்யப்பட்ட ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த … Read more

‘வளர்ந்த இந்தியா’வுக்கு கடினமாக உழைப்போம்: ஆங்கில புத்தாண்டில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி

புதுடெல்லி: வளர்ந்த இந்தியா கனவை நனவாக்க இன்னும் கடினமாக உழைப்போம் என புத்தாண்டு தினத்தில் பிரதமர் மோடி உறுதி எடுத்துள்ளார். புத்தாண்டை முன்னிட்டு பிரதமர் மோடி நேற்று வாழ்த்து செய்தி வெளியிட்டார். அதில் இந்தாண்டு அனைவருக்கும் புதிய வாயப்புகள், வெற்றி மற்றும் முடிவற்ற மகிழ்ச்சியை கொண்டு வரட்டும். அனைவருக்கும் நல்ல ஆரோக்கியமும், செழிப்பும் கிடைக்கட்டும்’’ என கூறியுள்ளார். வளர்ந்த இந்தியா கனவை நனவாக்க நாங்கள் இன்னும் கடினமாக உழைப்பதில் உறுதியாக உள்ளோம் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். … Read more

வெம்பக்கோட்டையில் கைரேகை பதிவுடன் அல்லி மொட்டு வடிவ ஆட்டக்காய் முதன்முதலாக கண்டெடுப்பு

சிவகாசி: வெம்பக்கோட்டை விஜய கரிசல்குளம் 3-ம் கட்ட அகழாய்வில் கைரேகை பதிவுடன் கூடிய அல்லி மொட்டு வடிவிலான ஆட்டக்காய் கண்டெடுக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வெம்பக்கோட்டை வைப்பாற்றின் வடகரையில் உள்ள விஜய கரிசல்குளம் மேட்டுக்காடு பகுதியில் 2022 மார்ச்சில் தொடங்கிய முதல்கட்ட அகழாய்வில் 3,254 பொருட்கள், 2023 ஏப்ரலில் தொடங்கிய இரண்டாம் கட்ட அகழாய்வில் 4,660 பொருட்கள் மற்றும் திமிலுடைய காளை, சங்கு வளையல்கள், சூதுபவளம், வணிக முத்திரை, செப்பு நாணயங்கள் உள்ளிட்ட பல்வேறு பழங்கால … Read more

விவசாயி உடல்நிலை பாதித்த விவகாரம்: பஞ்சாப் அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ உத்தரவாதம் வழங்கும் வகையில் சட்டம் இயற்றக் கோரி பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர். ஆனால் எல்லையில் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதையடுத்து, விவசாயிகள் எல்லையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகளின் பிரதிநிதி ஜெகஜித் சிங் தல்லிவால் (70), கன்னவுரி எல்லையில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை கடந்த நவம்பர் 26-ம் தேதி தொடங்கினார். ஒரு … Read more

இன்றுமுதல் சில தென்மாவட்ட ரயில் சேவைகளில் மாற்றம் – பயணம் நேரம் குறைப்பு! தெற்கு ரயில்வே அறிவிப்பு…

மதுரை:  இன்று (ஜனவரி 1) முதல் மதுரை கோட்டத்தில் இயக்கப்படும் ரயில்களின் கால அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறித்துள்ளது. அதன்படி,  பயணிகளின் வசதிக்கேற்ப தென்மாவட்டங்களுக்கு செல்லும்  சில ரயில்களின் சேவை நேரம் குறைக்கப்பட்டுள்ளதாகவும், சில ரயில்களின் நேரத்தை மாற்றியுள்ளதாகவும் எனவும், இந்த புதிய நடைமுறை இன்று ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும்  தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதுரை – திருவனந்தபுரம் அமிர்தா விரைவு … Read more

`ரூ.44,042 கோடி எங்கு செல்கிறது… 500 அரசுப் பள்ளிகளை மேம்படுத்த நிதியில்லையா?' – அண்ணாமலை கேள்வி!

“ரூ.44,042 கோடி எங்குதான் செல்கிறது? ; 500 அரசுப் பள்ளிகளை மேம்படுத்த நிதியில்லையா?” – அண்ணாமலை கேள்வி! இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்… “நேற்றைய தினம் நடைபெற்ற, தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் துவக்க விழாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்றான, 500 அரசுப் பள்ளிகள், அவற்றின் அருகிலிருக்கும் தனியார் பள்ளிகளால் மேம்படுத்தப்படும் என்ற தீர்மானத்தை, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் வரவேற்றிருக்கிறார். 500 அரசுப் பள்ளிகளை மேம்படுத்தக் கூட தமிழக அரசிடம் … Read more

‘மாணவி பாலியல் வன்கொடுமையில் தனிநபர் ஈடுபட்டதாக கூறுவதில் சந்தேகம்’ – கார்த்தி சிதம்பரம் கருத்து

காரைக்குடி: ‘சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தனிநபர் ஈடுபட்டதாக கூறுவதில் சந்தேகம் உள்ளது’ என மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார். காரைக்குடியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சீமான், வருண்குமார் பிரச்சினையில் அரசியல் தலைவரும், ஐபிஎஸ் அதிகாரியும் பொதுவெளியில் விவாதம் செய்வது நல்லதல்ல. இதில் தலைமை செயலாளர், டிஜிபி தலையிட்டு சட்டம், நிர்வாக ரீதியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஒரே நாடு; ஒரே தேர்தல் நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு விரோதமானது. நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு … Read more

மும்பை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு இசிஜி எடுக்கும் தூய்மை பணியாளர்கள்

மும்பை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் நோயாளி ஒருவருக்கு தூய்மை பணியாளர்கள் இசிஜி எடுக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு இசிஜி, எக்ஸ்ரே எடுப்பவர்கள் அதற்காக முறையாக படித்து பயிற்சி பெற்ற மருத்துவ நிபுணர்களே மேற்கொள்ள வேண்டும் என்பது விதிமுறை. ஆனால், மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் புறநகர் பகுதியான கோவண்டியில் பிஎம்சி நடத்தி வரும் சாதாப்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு சீருடை … Read more

அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸில் கூட்டத்தில் பாய்ந்த டிரக் – 10 பேர் உயிரிழப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸில் மக்கள் கூட்டத்துக்குள் பிக்-அப் டிரக் பாய்ந்த சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். போலீஸ் உடனான துப்பாக்கிச் சண்டைக்கு பிறகு ஓட்டுநர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் 35-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல். ‘இது தீவிரவாத சதி செயலாக இருக்குமா?’ என்ற கோணத்தில் குறித்து எஃப்பிஐ (FBI) விசாரணையை தொடங்கி உள்ளது. அங்குள்ள போர்பன் தெருவில் புத்தாண்டு தினத்தன்று அமெரிக்க நேரப்படி அதிகாலை 3.15 இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்தப் பகுதியில் வெடிபொருள் … Read more