150 வெடிகுண்டுகளுடன் FBI-யிடம் பிடிபட்ட நபர்… அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்க உள்ள நிலையில் அதிர்ச்சி…

அமெரிக்காவின் வெர்ஜினியா மாநிலத்தில் உள்ள ஒரு வீட்டில் இருந்து 150-கும் மேற்பட்ட வெடிகுண்டுகள் கண்ணெடுக்கப்பட்டுள்ளன. ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக அந்த வீட்டின் பக்கத்து வீட்டுக்காரர் கொடுத்த தகவலை அடுத்து காவல்துறையினர் நடத்திய சோதனையில் இது தெரியவந்தது. பிராட் ஸ்பாபோர்ட் என்பவருக்கு சொந்தமான அந்த வீட்டில் இருந்து அதிகளவிலான வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க வரலாற்றில் ஒரே இடத்தில் இவ்வளவு அதிகமாக வெடுகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது இதுவே முதல் முறை என்றும் கூறப்படுகிறது. வீட்டின் குளிர்சாதனப் பெட்டியில் … Read more

`பாலியல் கொடுமை செய்யப்பட்டு பெண் படுகொலை; இது நாடா, சுடுகாடா?' – திமுக அரசுக்கு ராமதாஸ் கண்டனம்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தை அடுத்த திம்மாவரம் கிராமத்தில் இளம்பெண் ஒருவர் கொடிய முறையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்தக் கொடூரம் நிகழ்ந்து 7 நாட்களுக்கு மேலாகும் நிலையில், அதற்குக் காரணமான மனித மிருகங்களைக் கைது செய்ய தமிழக அரசும், காவல்துறையும் எந்த நடவடிக்கையும் … Read more

கன்னியாகுமரி, அரூர், பெருந்துறை உள்ளிட்ட புதிதாக 13 நகராட்சிகள் உருவாக்கம் – அரசாணை வெளியீடு

சென்னை: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளின் எல்லைகள் விரிவாக்கம் மற்றும் புதிய நகராட்சிகள், பேரூராட்சிகள் அமைத்துருவாக்கம் தொடர்பாக தமிழக அரசு 5 அரசாணைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, கன்னியாகுமரி, அரூர், பெருந்துறை உள்ளிட்ட புதிதாக 13 நகராட்சிகள் உருவாக்கப்படவுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகம் நகரமயமாதலில் இந்தியாவில் முன்னோடி மாநிலமாக உள்ளது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நகர்ப்புர மக்கள் தொகை 48.45 சதவீதமாகவும் … Read more

மோகன் பாக்வத் கருத்துக்கு ஆர்எஸ்எஸ், விஹெச்பியில் எதிர்ப்பு? – 'ஆர்கனைஸர்' இதழின் முகப்பு செய்தியான சம்பல் விவகாரம்

புதுடெல்லி: கோயில் – மசூதி விவகாரத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கருத்துக்கு அவரது அமைப்பின் ஒரு பகுதி மற்றும் விஹெச்பி-யில் எதிர்ப்புகள் கிளம்புவது தெரிகிறது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் அதிகாரப்பூர்வ ‘ஆர்கனைஸர்’ இதழில் முகப்பு செய்தியாக சம்பல் விவகாரம் வெளியாகி உள்ளது. உத்தரப் பிரதேசத்தின் சம்பலில் உள்ள ஜாமா மசூதியிலும், அம்மாநிலத்தின் வேறு பல இடங்களில் உள்ள மசூதிகளிலும் கோயில்கள் இருந்ததாகப் புகார்கள் கிளம்பி வருகின்றன. ராஜஸ்தான் அஜ்மீரின் காஜா ஷெரீப் தர்காவிலும் கோயில் இருந்ததாக நீதிமன்ற … Read more

4 தங்கைகள், தாய் கொடூர கொலை… இளைஞரின் உருக்கமான வீடியோ – பின்னணி என்ன?

Crime News In Tamil: தாயாரையும், 4 சகோதரிகளையும் கொடூரமாக கொலை செய்த இளைஞர், அதுகுறித்த ஒரு வீடியோவும் பேசி வெளியிட்டுள்ளார். இந்த கொலைக்கான பின்னணியை இங்கு காணலாம்.

மாணவியின் எஃப்ஐஆர்-ஐ கசிய விட்ட தேசிய தகவல் மையம் மீது வழக்கு பதிய வேண்டும்! கே.பாலகிருஷ்ணன்

சென்னை: அண்ணா பல்கலை கழக மாணவி வழக்கின் எஃப்ஐஆர் வெளியான விவகாரத்தில் தேசிய தகவல் மையம் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று  திமுக கூட்டணி கட்சியான  சி.பி.ஐ (எம்) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். இந்தியாவின் பிரபல கல்லூரிகளில் ஒன்றான,  சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் என்ஜினீயரிங் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம்  நாடு  முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சென்னை, கோட்டூர் புரத்தைச் சேர்ந்த … Read more

QC1 மற்றும் ஆக்டிவா e ஸ்கூட்டருக்கான முன்பதிவை துவங்கிய ஹோண்டா

ஹோண்டா டூ வீலர் இந்தியா நிறுவனத்தின் புதிய  க்யூசி1 மற்றும் ஆக்டிவா இ என இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான முன்பதிவு தற்போது துவங்கப்பட்டுள்ள நிலையில் முன்பதிவு கட்டணமாக ரூபாய் ஆயிரம் வசூலிக்கப்படுகின்றது. தமிழ்நாட்டில் எந்தவொரு நகரத்திலும் தற்பொழுது முன்பதிவு துவங்கப்படவில்லை, எனவே அடுத்த மூன்று முதல் ஆறு மாதங்களுக்குப் பிறகு தமிழ்நாட்டில் இந்த மாடலுக்கான முன்பதிவு துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஹோண்டாவின் டீலர்கள் மூலம் ஆக்டிவா இ ஸ்கூட்டருக்கு பெங்களூரு, டெல்லி, மும்பை என மூன்று … Read more

டாக்டர் ஊசீஸ்வரனின் கணக்கு வாத்தியார் – சிறுகதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் `My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல. – ஆசிரியர். “இப்பல்லாம், காலை டிபன் சாப்டமா? காப்பி குடிச்சமான்றத கூட பொண்டாட்டிகிட்ட கேட்டு கன்ஃபர்ம் பண்ண வேண்டி இருக்கு டாக்டர். அவ்ளோ ஞாபகமறதி வந்துட்டுது. எந்த பள்ளில படிச்சேன், என் ஒண்ணாங்கிளாஸ்  டீச்சரம்மா பேரு, ஏழாம் வகுப்பு படிச்சப்ப நானும் என் நண்பனும், வீட்ல  … Read more

அதானி நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் மீட்டர் டெண்டர் ரத்து – தமிழக அரசு நடவடிக்கை

சென்னை: அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் நிறுவனத்திற்கு(ஏஇஎஸ்எல்) வழங்கப்பட்ட ஸ்மார்ட் மீட்டர் டெண்டரை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. மத்திய அரசின் புதுப்பிக்கப்பட்ட விநியோகத் துறை திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் மீட்டர்களை கொள்முதல் செய்வதற்காக தமிழக அரசின் தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் கடந்த 2023 ஆகஸ்ட்டில் நான்கு தொகுப்புகளாக டெண்டர்கள் வெளியிடப்பட்டன. பிஎஸ்இ-பட்டியலிடப்பட்ட நிறுவனமான ஏஇஎஸ்எல், சென்னை உட்பட எட்டு மாவட்டங்களை உள்ளடக்கிய முதல் தொகுப்புக்கான டெண்டரை மிகக் குறைந்த ஏலத்தில் எடுத்தது. இந்நிறுவனம் 82 … Read more

‘‘ஜனநாயகத்தை பாஜக பலவீனப்படுத்துகிறது என ஆர்எஸ்எஸ் நினைக்கிறதா?’’ – மோகன் பாகவத்துக்கு கேஜ்ரிவால் கடிதம்

புதுடெல்லி: நாட்டின் ஜனநாயகத்தை பாஜக பலவீனப்படுத்துகிறதென ஆர்எஸ்எஸ் நினைக்கிறதா என்று கேள்வி எழுப்பி, அவ்வமைப்பின் தலைவருக்கு டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் புதன்கிழமை கடிதம் எழுதியுள்ளார். ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக சங்கத்தின் தலைவர் மோகன் பகவத்-க்கு ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால், பாஜகவின் நவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பி இன்று கடிதம் எழுதியுள்ளர். அக்கடிதத்தில் கேஜ்ரிவால், “கடந்த காலங்களில் பாஜக செய்த தவறுகளை ஆர்எஸ்எஸ் ஆதரிக்கிறதா? பாஜக தலைவர்கள் வெளிப்படையாக பணம் விநியோகம் … Read more