உலக அமைதிக்கான கூட்டு தியானத்துடன் ஆரோவில் உதய தின கொண்டாட்டம்
புதுச்சேரி: ஆரோவில் உதய தினத்தையொட்டி மாத்ரி மந்திரில் ‘போன்பயர்’ ஏற்றி கூட்டு தியானம் நடைபெற்றது. மனிதகுல ஒருமைப்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட ஆரோவில் சர்வதேச நகரம் புதுவையில் இருந்து 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. ஆரோவில் நகரில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏராளமானோர் வாழ்ந்து வருகின்றனர். அரவிந்தர் ஆசிரம அன்னையின் முயற்சியால், 1968 பிப்ரவரி 28-ம் தேதி ஆரோவில் சர்வதேச நகரம் ஆரம்பிக்கப்பட்டது. எனவே, ஆண்டுதோறும் ஆரோவில் உதய நாளில் கூட்டுத் தியானம் நடத்தப்படும். உதய தினமான நேற்று, ஆரோவில்லில் … Read more