உடல்நலக் குறைவால் தயாரிப்பாளர் `ஆனந்தி ஃபிலிம்ஸ்’ நடராஜன் காலமானார்.
ரஜினி – மகேந்திரன் கூட்டணியில் உருவான `முள்ளும் மலரும்’, பிரபுவின் `உத்தம புருஷன்’, `ராஜா கைய வச்சா’, `தர்ம சீலன்’, சத்யராஜ் நடித்த `பங்காளி’, சிவாஜியும் பிரபுவும் இணைந்து நடித்த `பசும்பொன்’, விஜயகாந்த்தின் `சின்ன கவுண்டர்’, ஜெயலலிதாவின் `நதியைத் தேடி வந்த கடல்’ , ரகுவரனின் `கலியுகம்’ போன்ற திரைப்படங்களின் தயாரிப்பாளர் நடராஜன்.
முன்னணி இயக்குநர்களான மகேந்திரன், பாரதிராஜா போன்றவர்களோடு பணியாற்றியவர் நடராஜன். நடராஜன் தயாரிப்பில்தான் இயக்குநர் மகேந்திரன் சினிமாவில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில நாட்களாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்திருக்கிறார் நடராஜன். திடீரென நேற்று இரவு மாரடைப்பு ஏற்பட்டுக் காலமாகியிருக்கிறார். நடராஜனுக்கு வயது 70. இவரின் இறுதிச்சடங்கு இன்று மாலை நடைபெறவிருக்கிறது என அவரின் குடும்பத்தினர் தெரிவித்திருக்கின்றனர்.
நடராஜனின் மறைவிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…