பெய்ஜிங்: சீனாவைச் சேர்ந்த கிரேன் நிறுவனம் ஒன்று ஆண்டு இறுதி போனஸாக, ஊழியர்களுக்கு ரூ.70 கோடியை வாரி வழங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
சீனாவைச் சேர்ந்த ‘ஹெனான் மைனிங் கிரேன் நிறுவனம்’ ஆண்டு இறுதியில் தனது ஊழியர்களுக்கு தாராளமாக போனஸ் அறிவிக்கும். இந்த ஆண்டு இறுதி போனஸாக ரூ.70 கோடியை அறிவித்தது. ஆனால், இதை இந்த ஆண்டு சற்று வித்தியாசமாக வழங்கியது. சீனாவின் யுவான் கரன்சி நோட்டுகள் ரூ.70 கோடிக மதிப்பில் ஒரு மேஜையில் பரப்பி வைக்கப்பட்டன. இங்கு ஊழியர்களை வரவழைத்து, 15 நிமிடத்தில் முடிந்த அளவு பணத்தை எண்ணி எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். ஒரு ஊழியர் கொடுக்கப்பட்ட நேரத்தில் அதிகபட்சமாக 1 லட்சம் யுவானை எண்ணினார். இதன் இந்திய மதிப்பு ரூ.12.07 லட்சம். இந்த வீடியோசமூக ஊடகத்தில் வைரலாக பரவியுள்ளது. சீன நிறுவனம் போனஸ் வழங்கிய விதத்தை சிலர் பாராட்டியுள்ளனர், சிலர் விமர்சித் துள்ளனர்.