சுதாகொங்கராவின் ‘பராசக்தி’ படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன், இரண்டு நாட்களுக்கு முன்பு தான் படித்த திருச்சி தனியார் பள்ளிக்கு சிறப்பு விருந்தினராகச் சென்றிருக்கிறார். அப்போது தனது அப்பாவுடன் பள்ளிக்குச் சென்று நுழைவுத் தேர்வு எழுதியது குறித்து நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.
இதுகுறித்துப் பேசியிருக்கும் சிவகார்த்திகேயன், “இந்த ஸ்கூல்ல எட்டாவது என்ட்ரன்ஸ் எக்ஸாம் எழுத அப்பாவோட வந்திருக்கேன். இங்க சீட் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம். எனக்கு கணக்கு சரியா வராது. சுமாராத்தான் அந்த என்ட்ரன்ஸ் எக்ஸாம் எழுதியிருந்தேன்.
அப்போ அப்பா என்கிட்ட வந்து, ‘நான் யார்கிட்டையும் ரெக்குவஸ்ட் பண்ணி எதையும் கேட்டது இல்லை. உனக்காக ஒரு மணி நேரம் ஸ்கூல்ல நின்னு கேட்டு சீட்டு வாங்கியிருக்கேன். தயவு செஞ்சு நல்லா படிச்சிடு’ அப்டீன்னு சொன்னார்.
அப்போ எனக்கு, ‘நமக்காக அப்பாவ ஒரு மணிநேரம் நிக்க வச்சிட்டோமே’னு ரொம்ப வருத்தப்பட்டேன். ‘இப்போ அதே ஸ்கூல்ல சிறப்பு விருந்தினராக வந்திருக்கேன், அப்பா…’. பெரிய ஹீரோ, பிரபலம் என்பதெல்லாம் பெரிய விஷியமில்லை. இங்க இருக்க ஒவ்வொரு ஆசிரியரும் எனக்கு நிறைய சொல்லிக் கொடுத்திருக்காங்க” என்று பள்ளிக்கால நினைவுகள் குறித்து நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.