சென்னை: ஆப்பிள் நிறுவனம் அடுத்த மாதம் அதன் மலிவு விலை போனான ‘ஐபோன் எஸ்இ4’ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல். முந்தைய மாடல் எஸ்இ உடன் ஒப்பிடும்போது இந்த புதிய மாடல் போனில் டிசைன் மற்றும் ஹார்டுவேர் அப்கிரேட் செய்யப்பட்டுள்ளதாக தகவல்.
‘ஐபோன் எஸ்இ4’ போன் எஸ்இ வரிசையில் நான்காவது ஜெனரேஷனாக வெளிவர உள்ளது. கடந்த சில மாதங்களாக இந்த போன் குறித்த தகவல் பேசுபொருளாக உள்ளது. கடைசியாக எஸ்இ போன் வரிசையில் எஸ்இ3 மாடல் கடந்த 2022-ல் வெளியானது.
எஸ்இ4 மாடலின் குறித்து வெளியாகி உள்ள தகவலின் அடிப்படையில் இந்த போனின் டிசைன் ஐபோன் 14 போல இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 6.1 ஓஎல்இடி டிஸ்பிளேவை இந்த போன் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் டைனமிக் ஐலேண்ட் அம்சம் இருக்காது எனவும் தகவல். ஆப்பிள் நிறுவனத்தின் பிரதான மாடலில் இருந்து வித்தியாசமானதாக இருக்கும் வகையில் இதன் ஃப்ரேம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தகவல்.
8ஜிபி ரேம், ஏ18 சீரிஸ் சிப், 48 மெகாபிக்சல் பிரதான கேமரா, 12 மெகாபிக்சல் முன்பக்க கேமரா, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கும் என்றும் தகவல் கிடைத்துள்ளது. இதன் விலை இந்தியாவில் சுமார் ரூ.50,000 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.